ஆஸ்திரியாவின் பேர்கன்லேன்ட் மாகாணத்திற்குக் கிழக்கே, ஹங்கேரி எல்லையை அண்மித்த பகுதியில் கைவிடப்பட்ட லாரியொன்றிலிருந்து, குடியேறிகள் பலரது சடலங்கள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதை ஆஸ்திரிய நாட்டு அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

2BB6501300000578-3212842-image-m-3_1440696657218

ஆஸ்த்ரியாவில் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்ட லாரி.

மேற்படி லாரியின் குளிரூட்டப்பட்ட பகுதிக்குள், 20 முதல் 50 வரையிலான சடலங்கள் காணப்படுவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த துயரச் சம்பவம் குடியேறிகளை பாதுகாப்பது தொடர்பான ஐரோப்பிய ஒன்றியம் முழுமைக்குமான பொதுக்கொள்கையின் தேவையையும் மனித கடத்தல்கார்களுக்கு எதிராக போராடவேண்டியதன் அவசியத்தையும் மீண்டும் வலியுறுத்திக் காட்டியுள்ளதாக ஆஸ்திரிய உள்துறை அமைச்சர் ஜெஹானா மிக்ல் லின்டர் தெரிவித்துள்ளார்.

2BB58F4F00000578-3212842-image-a-46_1440687595813சடலங்கள் கண்டெடுக்கப்பட்ட லாரியில் ஹங்கேரி நெம்பர் பிளேட் காணப்பட்டது.

அதைப்பயன்படுத்தி தப்பியோடிய லாரி ஓட்டுநரை கண்டுப்பிடிப்பதற்காக ஆஸ்த்ரிய அரசாங்கத்துடன் சேர்ந்து பணியாற்றவுள்ளதாக ஹங்கேரி தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், ஜெர்மனி, ஆஸ்திரியா, மேற்கு பால்கன் பகுதியைச் சேர்ந்த ஆறு நாடுகள் இணைந்து குடியேறிகள் பிரச்சனையை எதிர்கொள்வது குறித்த பேச்சுவார்த்தையை இன்று வியன்னாவில் துவங்கியிருக்கின்றன.

Austria-migrants_3420826b1சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்ட செய்தி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருப்பதாக ஜெர்மனியின் பிரதமர் ஏஞ்சலா மார்க்கெல் தெரிவித்திருக்கிறார்.

இது ஐரோப்பா முழுவதற்குமான எச்சரிக்கையென்றும் குடியேறிகள் பிரச்சனையில் பொறுப்புகளைப் பகிர்ந்துகொள்வதன் மூலமே அதனை சமாளிக்க முடியும் என்றும் ஏஞ்சலா மார்க்கெல் தெரிவித்துள்ளார்.

அப்படிச் செய்யாவிட்டால், ஐரோப்பிய யூனியன் முழுவதுமே இதன் விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும் என அவர் கூறியிருக்கிறார்.

2BB570A300000578-3212842-image-a-49_1440687772155Passers by who saw the truck described ‘the smell of death’ coming from the side of the road 

2BB4FA9E00000578-3212842-image-a-40_1440680962498Austrian police have begun the task of identifying the victims and to locate the criminal gang responsible

Share.
Leave A Reply