சீனாவில் கோழிக்குஞ்சுகளை ஏற்றிச் சென்ற லொறியொன்று கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.
சீனாவின் ஷன்டொங் மாகாணத்தில் பின்சொவ் நெடுஞ்சாலையில் சுமார் 10,000 கோழிக்குஞ்சுகளை ஏற்றிச்சென்று கொண்டிருந்த லொறியொன்றே கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.
இதில் ஆயிரக்கணக்கான கோழிக்குஞ்சுகள் சாலையில் சிதறியோட நேர்ந்துள்ளதுடன் பல நூற்றுக்கணக்கான கோழிக்குஞ்சுகள் உயிரிழந்துள்ளன.
செய்தியறிந்த அண்மித்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் பெட்டிகளை எடுத்து வந்து சிதறியோடிய கோழிக்குஞ்சுகளை வீடுகளுக்கு எடுத்துச் சென்றுள்ளனர்.
பொலிஸாரால் மக்களைக் கட்டுப்படுத்த முடியாது போயுள்ளது.
சிதறியோடிய கோழிக்குஞ்சுகளால் குறித்த பகுதி முழுதும் மஞ்சள் நிறமாகக் காட்சியளித்துள்ளது.