லொக்கு சீயா ராகமை பிர­தே­சத்தில் மட்­டு­மன்றி மாந்­தி­ரீகம் தொடர்­பி­லான நம்­பிக்­கை­யுள்ள அனைவர் மனதிலும் இன்று ஒலிக்கும் பெயர்.

ராகமை தேவா­ல­யத்தின் பிர­தான பூச­க­ராக செயற்­பட்டு வந்த லொக்கு சீயாவின் இயற்பெயர் அல்­லது உண்மையான பெயர் மொஹம்மட் சாலிஹ் மெஹம்மட் நியாஸ் மாந்­தி­ரீகம் கொடிய வினை­களை அகற்­றுதல் உள்­ளிட்ட செயற்­பா­டு­களால் பிர­ப­ல­மான லொக்கு சீயாவை அன்­றாடம் நாடி வரும் அர­சியல் புள்­ளி­களும் பொது­மக்­களும் ஏராளம் எனலாம்.

இதனால் லொக்கு சீயாவின் வங்கி கணக்கும் கன­தி­யாகிக் கொண்டே போனது.

இவ்­வா­றா­ன­தொரு நிலை­மையில் தான் வெள்ளை வேனில் வந்­த­வர்­களால் லொக் சீயா கடத்­தப்­ப­டு­கின்றார். அது கடந்த 2011 ஆம் ஆண்டு ஒக்­டோபர் மாதம் 27 ஆம் திகதி நேரமோ எப்­ப­டியும் மாலை 6.15 ஐ கடந்­தி­ருக்கும்.

ராகமை தேவா­ல­யத்­தி­லி­ருந்து வீடு நோக்கி லொக்கு சீயா தனது ‘பிராடே’ ரக ஜீப் வண்­டியில் சென்று கொண்டிருந்தார்.

அப்­போது தான் வெலி­சர குண­சே­கர மாவத்தை பகு­தியில் கொழும்பு – நீர்­கொ­ழும்பு பிர­தான பாதைக்கு அண்மை­யாக வெள்ளை வேனில் வந்­த­வர்­களால் லொக்கு சீயா கடத்­தப்­பட்­டுள்ளார்.

missing-men_2யார்? ஏன்? எதற்கு? லொக்கு சீயாவை கடத்­தினர் என்­பது அப்­போது முதல் இன்று வரையில் துலக்­கப்­ப­டாத மர்­ம­மா­கவே உள்­ளது. இந்­நி­லையில் தான் லொக்கு சீயாவின் கடத்­த­லை­ய­டுத்து அது தொடர்பில் ராகமை பொலிஸார் விசா­ர­ணை­களை ஆரம்­பித்­தனர்.

2011 ஒக்­டோபர் என்­பது மேல் மாகாண சபை தேர்தல் இடம்­பெற்றக் காலப்­ப­குதி. அத்­துடன் பல வெள்ளை வேன் கடத்­தல்­களும் பாரத லக்ஷ்மன், பிரே­மச்­சந்­திர போன்ற பிர­ப­ல­மா­னவர்கள் கொல்­லப்­பட்ட காலப்­ப­கு­தியும் கூட லொக்கு சீயா­வுக்கு இருந்த அர­சியல் செல்­வாக்கு உள்­ளிட்ட பிர­சித்தம் கார­ண­மாக அவர் வெள்ளை வேனில் வந்­தோரால் கடத்­தப்­பட்டார் என்ற செய்தி நாட­ளா­விய ரீதியில் அதிர்ச்­சியை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­தது.

லொக்கு சீயா என அறி­யப்­படும் மொஹம்மட் நியாஸ் உண்­மையில் காலியை பிறப்­பி­ட­மாகக் கொண்­டவர்.

1954 ஆம் ஆண்டு நவம்பர் 20 ஆம் திகதி சித்தி பாத்­திமா அஹமட் காசிம் மொஹம்மட் சாலி ஆகி­யோ­ருக்கு மகனாக பிறந்­தவர். காலியில் பிறந்த நியாஸ் ராகமை தேவா­ல­யத்தின் பூச­க­ரான கதை சுவா­ரஷ்­ய­மா­னது.

ஆரம்­பத்தில் சிறு வர்த்­த­க­ராக இருந்த நியாஸ் காலி­யி­லி­ருந்து கொழும்­புக்கு வந்து மாபோல பிர­தே­சத்தில் தனது சகோ­தரி ஒரு­வரின் வீட்டில் தங்­கி­யி­ருந்து தொழில் செய்­துள்ளார்.

இந்­நி­லையில் தனது வர்த்­தக நட­வ­டிக்­கை­களின் இலக்­குக்­காக அங்­கொடை பிர­தே­சத்தில் நியாஸ் வாட­கைக்கு ஒரு வீட்டை வாங்­கி­யுள்ளார்.

அங்கு வைத்தே நியாஸ் களுத்­துற செதர சாத்­தனி ரூபிகா என்ற சிங்­கள பௌத்த பெண்ணை காத­லித்து மணம் முடிக்­கின்றார்.

பின்னர் அங்­கொ­டை­யி­லேயே சிறு வீடொன்றில் அவ்­வி­ரு­வரும் குடித்­தனம் நடத்­தி­யுள்­ளனர். இவ்வேளை தான் நியாஸ் திடீ­ரென சுக­வீனம் அடைந்­துள்ளார்.

missing-men_1Among his clientele were well known personalities

இந்­நி­லையில் நியாஸை இவ­ரது காதல் மனைவி கல்­கிசை பிர­தே­சத்தின் பௌத்த தேரர் ஒரு­வ­ரிடம் சிகிச்சை அல்­லது பரி­கா­ரத்­துக்­காக அழைத்துச் சென்­றுள்ளார்.

இவ்­வாறு அவர் சென்ற வேளையில் குறித்த பௌத்த தேரர் மாத்­த­றைக்கு விசேட பயணம் ஒன்றை மேற்கொள்ள தயா­ராகிக் கொண்­டி­ருந்­துள்­ளாராம்.

இந்­நி­லையில் நியாஸின் ஆத்­மாவை கட்டிப் போட்­டுள்ள குறித்த பௌத்த தேரர் தான் 3 நாட்­களில் மாத்­த­றையில் திரும்பி வந்து மேல­திக சிகிச்­சை­களை வழங்­கு­வ­தாக கூறி­விட்டுச் சென்­றாராம்.

எனினும் அந்த தேரர் 3 நாட்­களில் திரும்பி வர­வில்­லையாம். அவர் பென்­தர பாலத்தின் அருகே விபத்­தொன்றில் இறந்­து­விட்­டாராம்.

ஏற்­க­னவே நியாஸின் ஆத்­மா­வுடன் 300 வரு­டங்­க­ளுக்கு முன்னர் வாழ்ந்த அப்­பு­ஹாமி சீயா என்­ப­வ­ரது ஆத்மாவையும் குறித்த தேரர் கட்டிப் போட்­டி­ருந்­த­தா­கவும் அதுவே   இறுதி வரை தொடர்ந்­த­தா­கவும்   அதன் பய­னா­கவே பரி­கார பூஜைகள் செய்ய நியாஸ் ஆரம்­பித்­த­தா­கவும் வர­லாற்றை சொல்­கி­றார்கள்.

missing-men_4Loku Seeya’s family

நியாஸின் வாரி­சுகள் ஆரம்­பத்தில் இல­வ­ச­மா­கவும் பின்னர் வறு­மையை போக்க பணம் பெற்றுக் கொண்டும் 6 பரி­கார பூஜை­களை செய்ய ஆரம்­பித்த நியாஸ் அதற்­கென்றே ராக­மையில் இடம் கொள்­வ­னவு செய்து தேவாலயம் ஒன்­றி­னையும் அமைத்துக் கொண்­டுள்ளார்.

ஒரு சமயம் ஐக்­கிய அரபு இராச்­சிய அரச குடும்­பத்தை சேர்ந்த சேக் ஒரு­வரின் குடும்ப பிரச்­சி­னையை இந்த லொக்கு சீயா என்ற நியாஸ் தனது பரி­கார பூஜை ஊடாக தீர்த்து வைத்­துள்­ளாராம்.

அன்ரூ என்ற ஒருவர் ஊடாக குறித்த ஷேக் இலங்­கைக்கு வந்து பரி­காரப் பூஜையை செய்து கொண்­ட­தா­கவும், பிரச்­சினை தீர்ந்­ததால் அவர் நியா­ஸுக்கு பல இலட்ச ரூபாக்கள், வீடு, வாகனம் என பரி­ச­ளித்­த­தா­கவும் கூறும் நியாஸின் வாரி­சுகள் உள் நாட்­டிலும் பலர் தமது விட­யங்கள் பிரச்­சி­னைகள் தீர்க்­கப்­படும் போது இலட்சங்களால் தமது தகப்­பனை மகிழ வைத்­த­தாக தெரி­விக்­கின்­றனர்.

இது தான் நியாஸின் மாந்திரீ­க அல்­லது பூஜை வர­லாறு. நியா­ஸுக்கு இரு மகன் மார் உள்­ளனர். முத­லா­மவர் எம்.என்.எம்.ஹிசான் பொடி சீயா என அழைக்­கப்­ப­டு­பவர்.

தந்­தைக்கு உத­வி­யாக அவர் ராகமை தேவா­ல­யத்தில் வேலைப்­பார்த்­ததால் அந்த பெயர் வந்­ததாம். லொக்கு சீயா அல்­லது நியாஸ் மற்றும் பொடி சீயா ஹிசான் ஆகிய இரு­வ­ருக்கும் சிறப்புப் பட்டம் ஒன்றும் வழங்கப்பட்டுள்­ளது.

2இரண்­டா­வது மகன் மொஹம்மட் நிஜாஸ் சூட்டி சீயா என அழைக்­கப்­ப­டுவர். இன்று ராகமை தேவா­ல­யத்தின் உதவி பூச­க­ராக இருப்­பவர்.

சரி இனி விட­யத்­துக்கு வருவோம்.லொக்கு சீயா­வுக்கு கிடைத்த பரி­சில்கள் பணம் என்­ப­வற்றால் அந்த குடும்­பமே மில்­லி­யன்­களில் புரண்­டது.

இன்றும் தெளி­வாக சொல்­வ­தென்றால் லொக்கு சீயா சுமார் 3 1/2 கோடி ரூபா பெறு­ம­தி­யான தங்க ஆபரணங்களை சாதா­ர­ண­மாக அணிந்­தி­ருப்பார் எனில் வச­தியை நீங்­களே ஊகித்துக் கொள்­ளுங்கள்.

இந்­நி­லையில் தான் லொக்கு சீயாவின் கடத்­தலால் பலரும் அதிர்ந்து போயினர். அவ­ரிடம் சேவையைப் பெற்றுக் கொண்ட பாது­காப்பு உயர் அதி­கா­ரிகள், அர­சியல் தலை­வர்கள், செல்­வந்­தர்கள் என அனை­வரும் லொக்கு சீயா­வுக்கு என்ன நடந்­தது என்­பதை அறிய முயன்­றனர். எனினும் லொக்கு சீயா தொடர்பில் எவ்­வித தக­வலும் கிடைக்­க­வில்லை.

இவ்­வா­றா­ன­தொரு பின்­ன­ணியில் தான் கடந்த 2011 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 6 ஆம் திகதி அப்­போ­தைய அக்­க­ரைப்­பற்று உதவி பொலிஸ் அத்­தி­யட்சர் இந்­திக்க சில்­வா­வுக்கு தகவல் ஒன்று கிடைக்­கின்­றது.

‘சேர்…. அக்­க­ரைப்­பற்று பதுர் நகர் கடற்­க­ரையில் சடலம் ஒன்று கரை ஒதுங்­கி­யுள்­ளது’ என்­பதே அந்த தக­வ­லாகும். உட­ன­டி­யாக செயற்­பட்ட உதவி பொலிஸ் அத்­தி­யட்சர் இந்­திக்க சில்வா பொலிஸ் குழு­வொன்­றுடன் சென்று சட­லத்தை மீட்­டெடுத்தார். எனினும் அந்த சடலம் யாரு­டை­யது என்­பதை உட­ன­டி­யா­கவே அடை­யாளம் காண முடி­யா­தி­ருந்­தது.

பொலித்தீன் உறை­யொன்­றுக்குள் இடப்­பட்­டி­ருந்த சட­லத்தை சுற்றி முள் வேலிக்­கம்­பிகள் சுற்­றப்­பட்­டி­ருந்­தன. சட­லத்­துடன் பெரிய கல்­லொன்று கட்­டப்­பட்டு கடலில் போடப்­பட்டு கல்லில் இருந்து சடலம் கழன்று கரைக்கு அடித்து வந்­தி­ருப்­ப­தாக பொலிஸார் சந்­தே­கித்­தனர்.

ஏனெனில் அதற்­கான அடை­யா­ளங்கள் இருந்­தன. இந்­நி­லையில் சடலம் தொடர்பில் சோத­னை­களை மேற்­கொள்ள அதனை அடை­யாளம் காண­வேண்­டிய தேவை பொலி­ஸா­ருக்கு ஏற்­பட்­டது.

அதனால் சட­ல­மா­னது அக்­க­ரைப்­பற்று வைத்­தி­ய­சா­லை சவச்­சா­லை­யி­லேயே வைக்­கப்­பட்டு சட­லத்தை அடை­யாளம் காண பொது மக்­களின் உதவி கோரப்­பட்­டது.

பொலிஸ் தலை­மை­ய­கத்தின் பொது மக்கள் உள­வுப்­ப­குதி ஊடாக சட­லத்தின் புகைப்­ப­டங்கள் ஊட­கங்­களில் பிர­சு­ரிக்­கப்­பட்டு அடை­யாளம் காண கோரப்­பட்­டது. எனினும் உட­ன­டி­யாக அடை­யாளம் காண முடி­ய­வில்லை.

சுமார் 18 நாட்கள் வரை சட­ல­மா­னது அக்­க­ரைப்­பற்று வைத்­தி­ய­சா­லை­யி­லேயே இருந்­தது.

இந்­நி­லை­யில்தான் பொடி சீயா­வுக்கு தகவல் கிடைத்­ததை தொடர்ந்து 2011 நவம்பர் மாதம் 24 ஆம் திகதி அவர் அங்கு சென்று தனது தந்­தையின் சட­லத்தை அடை­யாளம் காட்­டி­யி­ருந்தார்.

சட­ல­மா­னது உருக்­கு­லைந்­தி­ருந்த நிலையில் லொக்கு சீயா தனது காலொன்றில் ஏற்­பட்ட காயம் கார­ண­மாக காலுறை ஒன்றை அணி­வதை வழக்­கமாக கொண்­டி­ருந்தார்.

அந்த காலுறை அப்­ப­டியே இருக்க கையில் விரல் ஒன்றில் போடப்­பட்­டி­ருந்த கட்டு இறு­தி­யாக அணிந்­தி­ருந்த ஆடை போன்­ற­வற்றை வைத்து மகன் பொடி சீயா சட­லத்தை அடை­யாளம் காட்­டி­யி­ருந்தார்.

இதனைத் தொடர்ந்து பிரேத பரி­சோ­த­னைகள் இடம்­பெற்­ற­துடன் அதில் கழுத்து இறுக்­கப்­பட்டு லொக்கு சீயா கொல்­லப்­பட்­டுள்­ளமை தெரி­ய­வந்­த­துடன் கழுத்தில் கூரிய ஆயுதம் ஒன்­றினால் குத்­திய தட­யமும் இருந்­தது.

கண்­டிப்­பாக லொக்கு சீயா கொல்­லப்­பட்­டுள்ளார் என்­பது தெரிய வந்­ததும், யாரால் அவர் கொல்­லப்­பட்டார்? ஏன் கொல்­லப்­பட்டார்? என கேள்விகள் எழுந்­தன.

லொக்கு சீயாவின் சட­லத்தில் அவரின் 3 1/2 கோடி நகையும் இருக்­க­வில்லை. இந்­நி­லையில் கொலை விசா­ர­ணை­களை அக்­க­ரைப்­பற்று, இரா­கமை என இரு பொலிஸ் நிலை­யங்­களும் இணைந்து முன்­னெ­டுத்­தன.

இதனைத் தொடர்ந்தே இந்த விசா­ர­ணைகள் பொலிஸ் மா அதிபர் என்.கே இலங்­க­கோனின் உத்­த­ர­வுக்கு அமைய குற்றப் புல­னாய்வுப் பிரி­வி­ன­ருக்கு மாற்­றப்­பட்­டது.

கிட்­டத்­தட்ட 4 வரு­டங்கள் மர்­மங்கள் எதுவும் துலக்­கப்­ப­டாது லொக்கு சீயாவின் கொலை விசா­ரணை நகர்­கி­றது.

இந்­நி­லை­யில்தான் லொக்கு சீயாவின் மகன் சூட்டி சீயா ஜனா­தி­பதி விசா­ரணை ஆணைக்­குழு முன் கடந்த 25 ஆம் திகதி முறைப்­பா­டொன்றை முன்­வைத்­துள்ளார்.

லொக்கு சீயா படு­கொ­லை­யுடன் முன்னாள் அமைச்சர் ஒரு­வ­ருக்கும் பாது­காப்பு தரப்­பி­ன­ருக்கும் தொடர்பிருப்பதா­கவும், அரச வாக­னங்கள் அது தொடர்பில் பயன்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தா­கவும், அதி­கார துஷ்­பி­ர­யோகம் இடம்­பெற்­றுள்­ள­தா­கவும், அவர் அதில் சுட்டிக் காட்­டி­யுள்­ள­தாக அறிய முடி­கின்­றது.

இத­னை­விட கடந்த ஜன­வரி 8 ஆம் திகதி ஆட்சி மாற்­றத்தின் பின்னர் குற்றப் புல­னாய்வுப் பிரி­வுக்கு விசேட முறைப்­பா­டொன்றை முன்­வைக்கும் முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்­வாவும் லொக்கு சீயாவின் கடத்தல், கொலை என்­பன முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­தா­பய ராஜபக் ஷ அறிந்­தி­ருந்த நிலையில் இடம்­பெற்றுள்­ள­தாக குறிப்­பிட்­டுள்ளார்.

குறிப்­பாக கடந்த கால ஆட்­சியின் போது நாட­ளா­விய ரீதியில் வியா­பித்­தி­ருந்த வெள்ளை வேன் கலா­சா­ரத்தின் பின்­ன­ணியில் கடற்­படை இரா­ணுவம் இருந்­துள்­ள­மைக்­கான ஆதா­ரங்கள் பல குற்றப் புல­னாய்வுப் பிரி­வி­ன­ருக்கு கிடைத்­துள்­ளன.

குறிப்­பாக எக்­னெ­லி­கொட விவ­காரம், 11 மாணவர் கடத்தல் விவ­கா­ரங்­களில் இவை ஆதா­ரங்­க­ளுடன் சிக்கியுள்ளன.

இந்நிலையில் லொக்கு சீயா விவகாரத்திலும் பாதுகாப்பு தரப்பினர் கடத்தலிலும் கொலைகளிலும் தொடர்பு பட்டிருக்கலாம் என அப்போதிலிருந்தே சந்தேகங்கள் எழுப்பப் பட்டு வருகின்றன.

ஏனெனில் லொக்கு சீயாவின் சடலம் அக்கரைப்பற்று கடற்கரையில் மீட்கப்படும் போது கடற்படையினர் மட்டுமே பயன்படுத்தும் 100 கிலோ நிறைகொண்ட இரும்புகள், கடற்படை பயன்படுத்தும் வலை சடலத்தை சுற்றியிருக்க மீட்கப்பட்டதுடன் அவை பாதுகாப்பு தரப்பினர் மீதான சந்தேகத்தை அப்போதே ஏற்படுத்தியது எனலாம்.

எது எப்படி இருப்பினும் பொலிஸ் மா அதிபரின் நேரடி கட்டுப்பாட்டில் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரட்ன, பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் சுதத் நாகஹமுல்ல ஆகியோரின் ஆலோசனைக்கு அமைய முன்னெடுக்கப்பட்டுள்ள புதிய விசாரணைகளில், விரைவாக மர்மம் துலக்கப்பட்டு கொலை சந்தேக நபர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் அதுவரை நாம் அவதானத்துடன்.

Share.
Leave A Reply