மும்பை: ஷீனா போராவைக் கொலை செய்வதற்கு முன்னதாக விஷ ஊசி போட்டு தன்னையும் கொல்ல முயற்சித்ததாக தாயார் இந்திராணி மீது பரபரப்பு குற்றச்சாட்டுத் தெரிவித்துள்ளார் அவரது மகன் மிக்கயில் போரா.ஸ்டார் இந்தியா சேனலின் முன்னாள் தலைமை செயலதிகாரி பீட்டர் முகர்ஜியின் 2வது மனைவி இந்திராணி முகர்ஜி ஆவார். கடந்த 2002ம் ஆண்டு பீட்டர் முகர்ஜியை மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டார் இந்திராணி.
இந்திராணிக்கு முதல் கணவர் மூலம் ஷீனா போரா என்ற மகளும், மிக்கயில் போரா என்ற மகனும் உண்டு. ஆனால், சமுதாயத்தில் அவர்களைத் தனது தம்பி, தங்கை எனக் கூறி ஏமாற்றி வந்துள்ளார் அவர்.
கவுரவக் கொலை…
இந்நிலையில், கடந்த 2012ம் ஆண்டு ஷீனா கொலை செய்யப்பட்டார். தனது மூன்றாம் கணவர் பீட்டரின் முதல் தார மகனைக் காதலித்ததால் ஷீனா கவுரவக் கொலை செய்யப் பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த 2012ம் ஆண்டு ஷீனா கொலை செய்யப்பட்டார். தனது மூன்றாம் கணவர் பீட்டரின் முதல் தார மகனைக் காதலித்ததால் ஷீனா கவுரவக் கொலை செய்யப் பட்டதாகக் கூறப்படுகிறது.
கைது…
இந்தக் கொலை தொடர்பாக இந்திராணி, அவரது முன்னாள் கணவர் சஞ்சீவ் கண்ணா மற்றும் கார் டிரைவர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முக்கிய சாட்சி…
இந்த வழக்கில் முக்கிய சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ளார் ஷீனாவின் சகோதரர் மிக்கயில் போரா. ஷீனாவை இந்திராணி கொலை செய்ததற்காக உண்மைக் காரணம் தனக்கு தெரியும் என தெரிவித்துள்ள மிக்கயில், விரைவில் அதனை ஊடகங்களுக்கு கூறப்போவதாகவும் அறிவித்துள்ளார்.
கொலை முயற்சி... இந்நிலையில், ஷீனாவைப் போலவே தன்னையும் இந்திராணி கொல்ல முயற்சித்ததாக பரபரப்பு குற்றச்சாட்டைத் தெரிவித்துள்ளார் மிக்கயில். இது தொடர்பாக அவர் கூறுகையில், ‘என்னை கொலை செய்வதற்கு எனது தாய் இந்திராணி 3 முறை முயற்சி செய்தார். புனே மனநல மருத்துவமனையில் 6 மாதம் என்னை அடைத்து வைத்தார்.
போதைக்கு அடிமை…
பின்னர் அங்குள்ள டாக்டர்களின் உதவியுடன் அங்கிருந்து மீண்டு வந்தேன். பின்னர் என்னை போதைக்கு அடிமையாக செய்தார். 2011ல் மறுவாழ்வு மையத்தில் சேர்ந்து சிகிச்சை பெற்று அதிலிருந்தும் மீண்டு வந்தேன்.
விஷ ஊசி போட்டு…
2012 ஏப்ரல் 24ம் தேதி ஷீனா கொலை செய்யப்படுவதற்கு முன் எனக்கு விஷ ஊசி போட்டு கொல்ல முயற்சித்தார். ஆனால் அதிர்ஷ்டவசமாக நான் தப்பித்தேன்’ எனத் தெரிவித்துள்ளார்.