காதல் விவகாரம் காரணமாக பொலிஸ் அதிகாரி கண்டித்ததால் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தற்கொலை செய்து கொள்ள மருந்து குடித்த சம்பவம் கடந்த சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது.
அதனையறிந்த காதலியும் ஞாயிற்றுக்கிழமை மருந்து குடித்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வவுனியா பொலிஸ் நிலைய பிரிவுக்குட்பட்ட மகாறம்பைக்குளம் பொலிஸ் காவலரண் ஒன்றில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் (23 வயது) சுந்தரபுரம் பகுதியைச் சோந்த (வயது 20) யுவதி ஒருவரை காதலித்துள்ளார்.
இருவருக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாட்டையடுத்து கதலன் ஆகிய பொலிஸ் உத்தியோகத்தர் காதலியுடன் கதைக்காது தவிர்த்துள்ளார்.
இதனையடுத்து குறித்த காதலி வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு குறித்த விடயம் தொடர்பில் தெரியபடுத்தியுள்ளார்.
உடனடியாக காதலன் ஆகிய பொலிஸ் உத்தியோகத்தரை அழைத்த அதிகாரி அவரை கண்டித்துள்ளார்.
இதனால் மனஉளைச்சலுக்குள்ளாகிய பொலிஸ் உத்தியோகத்தர் சனிக்கிழமை தற்கொலை செய்து கொள்ள மருந்து குடித்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதனையறிந்த காதலியும் நேற்று ஞாயிற்றுக்கிழமை மருந்து குடித்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இவை தொடர்பான விசாரணைகளை வவுனியா பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.