மட்டக்களப்பு மாவட்டத்தின் களுதாவளை கடற்கரையில் சுமார் 5000 கிலோவுக்கு மேற்பட்ட நெத்தலி மீன்கள் கரைவலையில் பிடிபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த மீன் அறுவடை மூலம் அதிகளவான இலாபம் கிடைத்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஏனைய மீனினங்களின் அறுவடைக்காக கரைவலை வீசிய போது குறித்த நெத்தலி மீன் இனம் பெருவாரியாக கிடைத்ததாக மீனவர்கள் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளனர்.