வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் தொண்டைமாநாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலய வருடாந்த மஹோற்சவத்தின் இரதோற்சவம் இன்று வெகு சிறப்பாக இடம்பெற்றது.
செல்வச்சந்நதி முருகன் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் கடந்த 14ம்திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. திருவிழாவின் 13ம் நாளான இன்று தேர்த்திருவிழா வெகுசிறப்பாக இடம்பெற்றது.
காலை ஆலய பிரதமகுரு தலைமையில் இடம்பெற்ற வசந்தமண்டப பூஜையை தொடர்ந்து தேர்த்தோற்சவம் இடம்பெற்றது. வரலாற்றுச்சிறப்புமிக்க இந்த தேர்திருவிழாவைக்காண நாட்டின் பல பாகங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான அடியார்கள் ஆலயத்திற்கு வருகைதந்திருந்தனர்.
அடியார்கள் காவடிகள், தீச்சட்டி, அங்கப்பிரதட்சை போன்றவற்றைச் செய்து நேர்த்திக் கடன்களை நிறைவேற்றினர்.
தெல்லிப்பளை துர்க்கை அம்மன் ஆலய தேர்த்திருவிழா ( வீடியோ)
வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ் தெல்லிப்பளை துர்க்கை அம்மன் ஆலய வருடாந்த மஹோற்சவத்தின் 10ம் திருவிழாவான தேர்த்திருவிழா இன்று வெகு சிறப்பாக நடைபெற்றது.
300 ஆண்டுகள் பழமைவாய்ந்த தெல்லிப்பளை அருள்மிகு துர்க்கை அம்மன் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் கடந்த 17ம்திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. 10ம் நாளான இன்று தேர்த்திருவிழா வெகுசிறப்பாக இடம்பெற்றது.
காலை 8.00 மணியளவில் வசந்தமண்டப பூஜை மற்றும் யாகசால பூஜைகள் இடம்பெற்று தொடர்ந்து தேர் வெளிவீதிஉலா இடம்பெற்றது. வரலாற்றுச்சிறப்புமிக்க இந்த தேர்திருவிழாவைக்காண நாட்டின் பல பாகங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான அடியார்கள் ஆலயத்திற்கு வருகைதந்திருந்தனர்
அடியார்கள் காவடிகள், தீச்சட்டி, அங்கப்பிரதட்சை போன்ற நேர்த்திக் கடன்களை நிறைவேற்றினர்.
கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய தேர்த்திருவிழா (28-08-2015) அன்று நடைபெற்றது (வீடியோ)
கிளிநொச்சி மண்ணின் புகழ்பூத்த நகரின் மையத்தில் அமைந்துள்ள கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய தேர் திருவிழா இன்று சிறப்பாக நடைபெற்றது. கிளிநொச்சி எட்டுத்திசைகளில் இருந்து இன்று காலை கிளிநொச்சி கந்தன் ஆலயத்தில் திரண்ட மக்கள் கந்தப்பெருமானின் இரதோற்சவத்தை கண்டு களித்து வணங்கி தங்கள் நேர்த்திக்கடன்களையும் நிறைவேற்றினர்.
https://www.facebook.com/ilakkiyainfo