தவறு திருத்தம்:

சென்ற வாரம் ஒரு பெயர் குழப்பம். ஒரேவிதமான பெயர்கள்  காரணமாக ஏற்பட்ட குழப்பம்.  தம்பாப்பிள்ளை மகேஸ்வரன் தலைமையில் இயஙங்கிய இயக்கத்தின் பெயர்  “ரெனா”  என்று குறிப்பிட்டுவிட்டேன.

“ரெனா”   என்பது அமரர் அமிர்தலிங்கத்தின் இரண்டாவது மகன் பகீரதனால் ″தமிழ் தேசிய இராணுவம்”  என்னும் குழுவையே குறிக்கும்.

இதன் தோற்றமும் அழிவும் குறித்து முன்னமே விளக்கியிருந்தேன்.

தம்பாபிள்ளை  மகேஸ்வரன் தலைமையில் இயங்கிய  இயக்கம்  “தமிழிழீழ இராணுவம்” . இது சுருக்கமாக TEA  என்று அழைக்கப்பட்டது.

ஒபரோய் தேவன் உருவாக்கிய இயக்கம் “தமிழீழ விடுதலை இராணுவம்”. சுருக்கமாக (TELA) என்று அழைக்கப்பட்டது.

ஜெகன் உருவாக்கிய இயக்கம் உருவாக்கிய இயக்கம் “ரெலி” என்று சுருக்கமாக அழைக்கப்பட்டது.

ரெலோ, ரெனா, ரெலா, ரெலி பெயர் குழப்பம் தலை சுற்ற வைக்கிறதல்லவா? இவற்றில் உடைபாபாடுகளோடு தற்போது மிஞசியிருப்பது “ரெலோ” மட்டுமே.

தம்பாபிள்ளை மகேஸ்வரன் லன்டனில் இராசயன விஞ்ஞானம் படித்தவர்.

பானாங்கொடை சிறையிலிருந்து தப்பி ஓடி. பின்னர் மீண்டும் கைதானார். மட்டக்களப்பு சிறையுடைப்பு மூலமாக இவரும் வெளியே வந்தார்.

பனாங்கொடை சிறையிலிருந்து தப்பியதை வைத்து “பனாங்கொடை மகேஸ்வரன்” என்று அழைக்கப்பட்டார்.

பாரிய கொள்ளை

1984இல் நடைபெற்ற வங்கிக்கொள்ளையென்று பரபரப்பாக பேசப்பட்டது.  மட்டக்களப்பில் காத்தான்குடி மக்கள் வங்கியல் புகுந்த இளைஞர் கோஷ்டியொன்று அங்கிருந்த நகைகளையும், பணத்தையும் சுருட்டிக்கொண்டு தப்பிச்சென்றுவிட்டது.

கொள்ளைபோன  நகைகளும், பணமும் மூன்று கோடி ரூபாய்களுக்கு மேல் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டது.

இலங்கையில் நடைபெற்ற மிகப் பாரிய வங்கிக்கொள்ளை என்ற பெயரையும் அந்த நடவடிக்கை சம்பாதித்துக் கொண்டது.

தமிழீழ இராணுவம் (TEA) கச்சிதமாக மேற்கொண்ட   நடவடிக்கையே அதுவாகும்.

மட்டக்களப்பில் உள்ள பன்குடாவெளியில் சில வீடுகளில் கொண்டுபோய் நகைகளை புதைத்து வைத்தனர்.

பொலிசாரின் தேடுதல் வேட்டையின் தீவிரம் குறையும் போது நகைகளை யாழ்பாணத்திற்கும், தமிழ் நாட்டுக்கும் கொண்டு செல்வதுதான் நோக்கம்.

நகைகளை புதைத்து வைத்த வீடொன்றில் இருந்த பெண்மணிகளுக்கு ஒரு யோசனை “பெரும் தொகையாக புதைக்கப்பட்டுள்ள நகைகளில்  கொஞ்சம் எடுத்து விற்றுவிட்டால் என்ன?”

யோசனையை நிறைவேற்றினார்கள். தமிழீழ இராணுவத்தை சேர்ந்த சிலருக்கும் அந்த யோசனையில் பங்கிருந்தது.

செங்கலடியில் உள்ள நகைக்கடையில் நகைகளை கொடுத்து    பணம் பெறப்பட்டது.

தகவல் கசிந்தது

இதற்கிடையே தமிழீழ இராணுவ இயக்கத்தினரால் புதைத்து வைக்கப்பட்ட நகைகளில் பெரும்பகுதி யாழ்பாணத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

ஒரு பகுதி நகைகள் மட்டும் தொடர்ந்தும் பன்குடாவெளியில்  உள்ள இரு வீடுகளில் பொலிதீன் பைகளில் போட்டு புதைக்கப்பட்டிருந்தன.

செங்கலடியில் நகைகளின் விற்பனை மூலமும, இரகசியத்தை பேணமுடியாத இயக்க உள்நிலை காரணமாக பொலிசாருக்கு தகவல் கசிந்துவிட்டது.

பன்குடாவெளியில் உள்ள வீடொன்றை ஏறாவூர் பொலிசார் சுற்றிவளைத்தனர்.  வீட்டுக்குள் தமிழீழ இராணுவ முக்கியஸ்தர் வரதன் சிக்கிக்கொண்டார்.

indexவளவைத் தோண்டினார்கள். தோண்டத் தோண்ட தங்க நகைகள் வந்துகொண்டிருந்தன.

பொலிசாரின் தீவிர கவனிப்பில் வரதன் தனக்குத் தெரிந்த தகவல்களையெல்லாம் ஒப்பிவித்தார்.

பன்குடாவெளியில் மற்றொரு வீட்டில் புதைக்கப்பட்டிருந்த நகைகளும் மீட்கப்பட்டன.

யாழ்பாணம் சங்கானையிலும் ஒரு வீட்டிலிருந்தும்  நகைகள் கைப்பற்றப்பட்டன. மீண்டும்  கைப்பற்றிய நகைகளின் பெறுமதி 12 இலட்சம் ரூபாய் என்று தெரிவிக்கப்பட்டது.

மீதி நகைகள் தமிழீழ இராணுவத்தால் தமிழ்நாட்டுக்கு கொண்டுசெல்லப்பட்டன.

ராஜயோகம்

வாகனங்கள் அலுவலகங்கள், தம்பாப்பிள்ளை மகேஸ்வரனின் உறவினர்களின் ஆதிக்கம் என்பவற்றின் மத்தியில்  தமிழ் நாட்டில் ராஜபோகம் நடத்தியது தமிழீழ இராணுவம்.

கொள்கை, கோட்பாடு, இயக்க்கட்டுப்பாடு என்பவை பற்றி துளியும் கவலைப்படாத இயக்கங்களில் தமிழீழ இராணுவமும் ஒன்று.

ஏற்கனவே இருந்த கொஞ்ச நஞ்சக் கட்டுப்பாட்டையும் திடீரென்று கிடைத்த காற்றில் பறக்கச் செய்துவிட்டன.

இதற்கு ஒரு உதாரணம் கூறுகிறேன்.

தமிழ் நாட்டில் கோடியக்கரையில் தமிழீழ இராணுவமுகாம் ஒன்று இருந்தது.

கடற்கரைக்கும் முகாமுக்கும் வாகனங்களில் மின்னல் வேகத்தில்  பறந்து திரிவார்கள்.

பாடசாலைகள் விடும் நேரத்தில் என்றால் வேகம், வெட்டி ஓடும் லாவகம் மேலும் அதிகமாக இருக்கும்.

ஒரு நாள் அந்த விபரீதம் நடந்தது.

கண்மண் தெரியாமல் வந்த வந்த தமிழீழ இராணுவ வாகனம் பாடசாலை சிறுவர்கள் மீது  மோதியது. சிறுவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள்.

கத்திகள், பொல்லுகளோடு ஊரே திரண்டுவிட்டது. பொலிஸ் தலையிட்டு காப்பாற்றியது,

srilankaபயங்கரத் திட்டம.

தமிழ் நாட்டில் இருந்த தம்பாப்பிள்ளை மகேஸ்வரனுக்கு பயங்கரமான திட்டம் ஒன்று மூளையில்  உதித்தது.

சென்னை மீனம்பாக்கம் விமான  நிலையத்திலிருந்து  கொழும்பு வரும் “ஏர் லங்கா” விமானத்தில் ஒரு குண்டை வைத்துவிடவேண்டும.

குறித் நேரத்தில் வெடிக்கும்  (டைம் பாம்) அந்தக் குண்டு, விமானம் கொழும்பு விமான நிலையத்தில் தரையிறங்கி, பயணிகள் வெளியேறிய பின்னர் வெடிக்கும்.

திட்டத்தை நிறைவேற்ற  மீனம்பாக்கம் விமானநிலையத்தில் பணிபுரிந்த சிலரது உதவியும் பெறப்பட்டது.

ஏர் லங்காவில் பணியாற்றிய இந்தியாவை சேர்ந்த இருவரை கைக்குள் போட்டுக்கொண்டார்கள.

பயணிகளின் பொதிகளோடு குண்டு வைக்கப்பட்ட சூட்கேசையும் சேர்த்துவிடவேண்டும்.

பொதுகளோடு பொதியாக அது விமானத்தில் கொழும்பு போய்ச சேர்ந்துவிடும்.

திட்டமிட்டபடி 1984 ஆகஸ்ட் இரண்டாம் திகதி சென்னை விமான நிலையத்திற்கு சூட்கேசில் குண்டு சென்றது.

பொதிகளோடு பொதியாக சூட்கேஸ் வைக்கப்பட்டு, விமானத்தில் ஏற்றப்படத் தயாரானது.

சுங்க அதிகாரிகளில்  ஒருவருக்கு அந்த சூட்கேசில் சந்தேகம்  வந்துவிட்டது. சூட்கேசை எடுத்து, அது யாருடையது என்று பயணிகளிடம் விசாரித்தார்.

வந்தது ஆசை

அந்த சுங்க அதிகாரி சூட்கேசை தூக்கிக்கொண்டு தனது அறைக்குச் சென்றார்.

அவர் நினைத்திருந்தால் உடனடியாகவே சூட்கேசை திறந்து பரிசோதித்திருக்கலாம். செய்யவில்லை. அதற்கு காரணம் இருந்தது.

“சூட்கேசுக்குள் கடத்தல் தங்கம்தான் இருக்க வேண்டும். பாரமாக வேறு இருக்கிறது. மெல்ல அமுக்கிக் கொண்டால் என்ன? என்று அந்த அதிகாரிக்கு ஆசை வந்துவிட்டது.

தனது காலடியில் மேசைக்கு கீழே சூட்கேசை பத்திரமாக வைத்துக்கொண்டார்.

சூட்கேஸ் கைமாறிவிட்டது. விமானத்தில் ஏற்றப்படவில்லை. சென்னை விமான நிலையத்துக்குள் வெடித்துவிடப்போகிறது என்று தமிழ் ஈழ இராணுவ உறுப்பினர்களுக்கு விளங்கிவிட்டது.

பயணிகள் அனுப்ப வந்த பார்வையாளர்கள் போல் நின்று அனைத்தையும் அவர்கள் கவனித்துக்கொண்டிருந்தார்கள்.

விமான நிலையத்தை விட்டு வெளியே ஓடி, பொதுத் தொலைபேசி ஒன்றில் இருந்து விமான நிலையத்தோடு தொடர்பு கொண்டனர்.

“விமான நிலையத்தில் ஒரு சூட்கேசுக்குள் குண்டு இருக்கிறது. உடனே அப்புறப்படுத்துங்கள்” என்று தொலைபேசியில் தகவல் சொன்னார்கள்.

“ தங்கத்தை கடத்த முற்பட்டவாகள் தான் கயிறு விடுகிறார்கள்” என்று நினைத்து சுங்க அதிகாரி அலச்சியமாக இருந்துவிட்டார்.
மறுபடியும் தொலைபேசியில் தகவல் சொன்னார்கள்.

“அனாமதேய மிரட்டல், வழக்கமான ஏமாற்று” என்று நினைத்து பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் தம்பாட்டில் இருந்துவிட்டனர்.

மூன்றாவது தடவை சூட்கேசின் நிறத்தையும் கூறி தகவல் சொல்லப்பட்டது.

Evening-Tamil-News-Paper_60678827763சந்தேகம்
தகவல் அறிந்த சுங்க அதிகாரிக்கும்  “உண்மையாக இருக்குமோ? என்று சந்தேகம் வந்துவிட்டது.  ஊழியர் ஒருவரை அழைத்து சூட்கேசை வெளியே கொண்டு செல்லுமாறு பணித்தார்.

சூட்கேசோடு ஊழியர் செல்ல, சுங்க அதிகாரியும், பாதுகாப்பு உத்தியோகத்தர்களும் கூடவே சென்றனர்.

விமான நிலைய  கட்டிடத்தைவிட்டு அவாகள் வெளியேற முன்னர்.

குண்டு வெடித்தது!!

பயங்கரமான சப்தம்!!

எங்கும் ஒரே புகை மூட்டம்.

கட்டிடம் இடிந்து வீழ்நதது.

இலங்கையர் உட்பட முப்பதுக்கு மேட்பட்டோர் பலியானார்கள். நூறுபேர்வரை காயமடைந்தனா.

தமிழ் நாடெங்கும் அதிர்ச்சி. தமிழக முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர் திவிர புலன் விசாரனைக்கு உத்தரவிட்டார்.

ஈழப் போராளிகள் குண்டு வைத்திருப்பார்கள் என்று தமிழக மக்கள் நம்ப மறுத்தார்கள்.

தமிழக மக்களை பலியாக்கும் நடவடிக்கையை ஈழப்போராளிகள் ஒரு போதும் செய்யமாட்டார்கள் என்ற நம்பிக்கையும் அதற்கு காரணமாகும்,

இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல் ஈ.பி.ஆா.எல்.எப்  சூட்டோடு சூட்டாக சென்னையில் சுவரொட்டிகளை ஒட்டியது.

“மீனம்பாக்கம் வெடி குண்டு அமெரிக்க சி.ஐ.ஏயின்  சதி. தமிழக மக்களுக்கும் ஈழப் போராளிகளுக்கும் இடையே விரிசலை தூண்டும் முயற்சி”

என்ற வாசங்களோடு அந்தச் சுவரெட்டிகள் காணப்பட்டன.

இதேநேரம் எம்.ஐி.ஆரை இந்திய மத்திய அரசு தொடர்பு கொண்டது.  மிக முக்கியமான செய்தியொன்றை அவாகுள் எம்.ஐி.ஆரின் காதில் போட்டார்கள்.

எம்.ஐி.ஆர் குழம்பி போனார்.

தொடரும்…

ஏவுகணைகள் -சில தகவல்கள்

B22936B18Misil antiaereo Blowpipe

நவீன யுத்தத்தில் ஏவுகணைத் தொழில் நுற்பம் முக்கிய பாத்திரம் வகித்து வருகிறது.

ஜெர்மனியின் விஞ்ஞானி டாக்டர் வெணர் வொன் பிரேனிக் என்பவர்தான் ஏவுகணை யுத்தத்தை  ஆரம்பித்து வைத்தவர்.

இவரை ஏவகணையின் தந்தை என்று சொல்லலாம.

ஏ1.ஏ2. ஏ3.ஏ4 என்ற பெயர்களில்  ஹிட்லரின் ஜெர்மன் படை ஏவகணைகளை வைத்திருந்தது.

ஜெர்மன் படைகளிடம் இருந்த ஏவகணைகளில் அதிக சக்தி வாய்ந்தது “வி2” என்ற பெயரிடப்பட்ட ஏவுகணையாகும்.

2150 இறாத்தல் எடை கொண்ட வெடிபொருளை 200மைல் தூரம் காவிச் சென்று இலக்கைத் தாக்கக்கூடியது.

இந்த ரக ஏவுகணைகள் மூலம் இலன்டன் நகர்மீது மட்டும் 1115 தடவைகள் 1944இல் தாக்குதல் நடத்தப்பட்டது.

1945 அணுகுண்டு தயாரிக்கும் வரை “வி2” ரக ஏவகணைதான் உலகில் அதி சக்தி வாய்ந்த ஆயுதமாக இருந்தது.

1945 மே மாதம் ஹிட்லரின் ஜெர்மனி வீழ்ச்சியடைந்தது.
அமெரிக்க படைகள், ஜெர்மன் எங்கும் சல்லடை போட்டுத் தேடி “வி2” ரக ஏவுகணைகளை உற்பத்தி செய்யக் கூடிய உதிரிப்பாகங்களை கைபற்றிக் கொண்டன.
இவற்றின் எடை ஒரு தொன்வரை  இருந்ததாம்.

300க்கு மேற்பட்ட வாகன்ங்களில் எல்லாவற்றையும் பத்திரமாக கொண்டு போய் சேர்த்தது  அமெரிக்கா.

சேவியத் யூனியனும் தனது பிடியில் வந்த ஜெர்மன் பகுதியில் தேடி “வி2” ரக ஏவுகணைகளை எடுத்துக்கொண்டது. விஞ்ஞானிகள் சிலரையும் பிடித்துக்கொண்டது.

ஆரம்ப கால ஏவுகணைகள்   குறித்த இலக்குகளை துல்லியமாக தாக்குவதில் பல தவறுகளை செய்தன.

ஆனால் நவீன ஏவகணைகள்  கம்பியுட்டர் மூலமே கட்டுப்படுத்தப்பட்டு, இலக்குகளை துல்லியமாக தாக்கி அழிக்ககூடியவையாகும்.

ஆனால் இந்த ஏவகணைகளை தடுத்து அழிக்ககூடிய ஏவுகணைகளும் பாவனையில் இருக்கின்றன.

நவீனரக ஏவகணைகள் நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.

ltte-usa-arrest-20121217-2

1.தரை-தரை ஏவகணைகள்: இவற்றில் நெடுந்தூர, நடத்தர, குறந்தூர ஏவகணைகள் இருக்கின்றன.

இவவை அணு ஆயதங்களையும் சுமந்து செல்லக் கூடியவை. கண்டம்விட்டு கண்டம் பாயும் ஏவகணைகள் என்று சொல்வது இவற்றைதான். நீர் மூழ்கிக்கப்பல்கள், யுத்தக் கப்பல்களில் இருந்தும் இவற்றை ஏவமுடியும்.

தரை- ஆகாய ஏவகணைகள்: விமானங்களை தாக்கியழிக்கவே இவை பயன்படுத்தப்படுகின்றன.

தரையில் வைத்து ஏவக்கூடிய ஏவகணைகள், தோளில் வைத்து ஏவப்படும் சிறிய ரக ஏவகணைகள் என்று பல்வேறு ரகங்களில் இருக்கின்றன.

ராடர் மூலம் செலுத்தப்படும் ஏவகணைகளும் இருக்கின்றன. கெரில்லாப் போர் முனைகளுக்கு தோளில் வைத்து ஏவப்படும் ஏவகணைகளே ஏற்றவையாக உள்ளன.

இலக்கை தேடிக் கண்டுபிடிக்கும் மோப்ப சக்தியும் நவீன விமான எதிர்ப்பு ஏவகணைகளுக்கு இருக்கிறது.

வெப்பதை நாடிச்செல்லக் கூடியவை. குறிப்பிட்ட டெசிபல்களுக்கு மேட்பட்ட ஒலியை நாடிச் செல்வன என்று பல ரகங்களில் இருக்கின்றன.

தரையிலிருந்து தரைக்கு வரும் ஏவகணைகளை சந்தித்து அழிக்கக்கூடிய தரை-ஆகாய ஏவுகணைகளும் இருக்கின்றன.
ack-ack-20140616-1விடுதலைப் புலிகள் பயன்படுத்திய   சிறிய ரக இலகு விமானங்களை தாக்கும் பீரங்கி துப்பாக்கி

3. ஆகாய-தரை  ஏவுகணை:- விமானங்களிலிருந்து தரையிலுள்ள இலக்குகளைத் தாக்க இவ்வகை ஏவகணைகள் பயன்படுத்தப்படுகின்றன.

இலக்கை தவறாகக் கணித்து ஏவினால் அது ஏவகணையின் குறறம் அல்ல.

4.ஆகாய -ஆகாய ஏவுகணைகள்:- இவை போர் விமானம் ஒன்றிலிருந்து மற்றோரு போர் விமானத்தை தாக்க பயன்படுத்தப்படுகின்றன.

நம்நாட்டு யுத்த முனையில் படையினரால் ஆகாய- தரை  ஏவுகணையும், புலிகளால் தரை-ஆகாய ஏவுகணையும் பயன்படுத்தப்பட்டுள்ளன.

மோட்டாரில் இருந்து ஏவப்படும் ஷெல், பீரங்கியில் இருந்து ஏவப்படும் குண்டுகள் போன்றவை ஏவுகணை ரகத்தில் சேர்ந்தவையல்ல.
அவை கனரக ஆயத வகைகளை சேர்ந்தவையாகும்.

pix3_072814

கோழித்திருடனுக்கும், பிக்பொக்கட்காரனுக்கும் மரணதண்டை அளித்த இயக்கங்கள்!! : (அல்பிரட் துரைப்பா முதல் காமினிவரை-41)


மண்டைதீவு இராணுவ முகாமில் கைப்பறிய ஆயுதங்களை பார்வையிட்ட பிரபாகரன்: (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – 40)

 

Share.
Leave A Reply