அமெரிக்காவைச் சேர்ந்த யுவதியொருவர் மீன்பிடிப்பதன் மூலம் இணையத்தில் மிகவும் பிரபலமாகியுள்ளார்.

26 வயதான டேர்சி அராஹில் எனும் இந்த யுவதி அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தைச் சேர்ந்தவர்.

அழகிய தோற்றம் கொண்ட இவர் நீச்சலுடை அணிந்த நிலையில் தான் மீன்பிடிக்கும் காட்சிகளை படம்பிடித்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வந்தார்.

தற்போது இவருக்கு சுமார் ஒரு லட்சம் ரசிகர்கள் உள்ளனர்.

பெண்களாலும் மீன்பிடித்து சாதிக்க முடியும் என நிரூபிப்பதற்கு தான் விரும்பியதாக டேர்சி அராஹில் கூறுகிறார்.

1187639“மீன்பிடிப்பது நடுத்தர வயதுடைய ஆண்களுக்கான வேலை என பெரும்பாலானோர் எண்ணுகின்றனர்.

எனவே யுவதிகளான எங்களாலும் மீன்பிடிக்க முடியும் என நிரூபிப்பது மிகவும் திரில்லாக உள்ளது என்கிறார் டேர்சி.

118764623 அடி நீளமான தனது படகின் மூலம் கடலில் பயணம் செய்து அவர் மீன்களை பிடிக்கிறார்.

தூண்டில் மூலம் மட்டுமல்லாது சுழியோடிச்சென்றும் பாரிய மீன்கள் மற்றும் சிங்கி இறால்களை டேர்சி அராஹில் பிடித்துள்ளார்.

11876Untitled-5“நீச்சலுடை அணிந்து கொண்டு, 6 அடி நீளமான மீனை நான் தூக்கி வைத்திருப்பதை பார்க்கும் பலர் அதிர்ச்சியடைகின்றனர்” என அவர் தெரிவித்துள்ளார்.

பெரிய மீன்களுடன் போராடுவதைவிட வேறு எதையும் நான் அதிகம் விரும்பவில்லை என அவர் கூறுகிறார்.

1187648இதுவரை தான் பிடித்த மீன்களிலேயே மிகப் பெரியது 8 அடி நீளமான ஒரு சுறாவாகும் என டேர்சி தெரிவித்துள்ளார்.

“அப்போது மிகப் பெரிய மோதல் ஏற்பட்டது.

1187638இறுதியில் நானே வென்றேன். ஆனால், அதை நான் மீண்டும் கடலிலேயே விட்டுவிட்டேன்.

பாதுகாக்கப்படும் இனத்தைச் சேர்ந்த உயிரினங்கள் எல்லாவற்றையும் நான் இப்படியே செய்கிறேன்” என அவர் கூறுகிறார்.

1187640ஆனால், மீன்பிடிப்பதில் மாத்திரம் திறமையானவரல்லர் டேர்சி அராஹில். றியல் எஸ்டேட் நிறுவனமொன்றில் பணியாற்றம் அவர், புளோரிடா அத்லாந்திக் பல்கலைக்கழகத்தில் குற்றவியல் நீதித்துறையில் உயர்கல்வி கற்கின்றமை குறிப்பிடத்தக்கது.

1187645

Share.
Leave A Reply