முட்டை ஒன்றின் மேல்புறத்தில் அரேபிய எழுத்தின் வடிவத்தில் அல்லா என்ற வடிவம் காணப்பட்ட சம்பவம் ஐஸ்லாந்து பகுதியில் பதிவாகியுள்ளது.

ஐஸ்லாந்தைச் சேர்ந்தவர் அனிஷா ஜூசாப் இவரது கணவர் பாரித் ஆகியோர் கேக் செய்வதற்காக முட்டை ஒன்றை 1 அமெரிக்க டொலர் கொடுத்து வாங்கியுள்ளார்.

முட்டையை வீட்டுக்கு எடுத்து வந்து பார்க்கும் போது முட்டையின் மேல் புறத்தில் அல்லா என ”அல்லா” அரேபிய எழுத்தின் வடிவம், காணப்பட்டுள்ளது.

இது குறித்து அனிஷா கூறும் போது, நாங்கள் அதிசயமாக ஆசிர்வதிக்கபட்டவர்களே. இது யாராலும் முட்டையில் செதுக்கபட்டவில்லை. இந்த அடையாளம் இது ஒரு சுத்தமான இதயமாக அனைத்து முஸ்லீம்களையும் மன்னித்ததன் அடையாளமாக காணப்படுகின்றது.

இந்த அடையாளம் உலக சமாதானத்திற்கு அழைப்பு விடப்பட்டு இருக்கின்றது என்றார்.

சூரிய ஒளியில் அந்த அடையாளத்தை பார்த்த போது எனக்கு மெய்சிலிர்த்தது. இதனை கவனமாக ஒரு கண்னாடி பெட்டிக்குள் பார்வைக்கு வைப்பேன்.

விரும்புபவர்கள் பார்த்து செல்லலாம் . நான் எப்போதும் இந்த முட்டையை பாதுகாத்து வருவேன் என்றார்.

name-of-ALLAH-embossed-on-the-side-of-an-egg

Share.
Leave A Reply