மும்பையில் புறாக்கள் ஒருசேர அழகாக பறக்கும் காட்சியை நிறைய படங்களில் பார்த்திருக்கிறோம். சென்னை மெரினா, எலியட்ஸ் கடற்கரைகளில் இதே காட்சியை வேறுவிதமாக, அதாவது புறாவுக்கு பதிலாக காக்கைகள் ஒன்றாக பறப்பதை காணலாம்.

பார்க்க அவ்வளவு அழகாக, ரசிக்கும் காட்சியாக இல்லை என்றாலும், காக்கையைப் பற்றிய கதைகளும், காலங்காலமாக அதைப்பற்றிய நம்பிக்கைகளும் நாம் அதை அடித்து விரட்டுவதற்கு சற்றே, மனதில் தடையை ஏற்படுத்தும்.

சமீபத்தில் காக்கை ஒருவேளை முட்டாளாக இருக்குமோ? எனத் தோன்றும் வகையில், அது மழை பெய்து கொண்டிருந்தபோது, ஒரு காரின் ‘வைப்பர்’ மீது அமர்ந்தது. அந்தக் காரின் உரிமையாளர் அந்த கார் வைப்பரை இயக்கினார்.

அந்தக் காக்கையின் காலின் கீழ் உள்ள உலகமே நிலையின்றி ஆடும்போதும், அது கொஞ்சம்கூட அசைந்து கொடுக்கவே இல்லை.

அனேகமாக வைப்பர் மீது அமர்ந்த காக்கை ‘நீ என்ன செய்தாலும் நான் அசைய மாட்டேன்!’ என்று தெளிவாக முடிவு செய்து உட்கார்ந்திருக்கும் போல! ஊஞ்சலில் ஆடுவதுபோல அது வைப்பர் பிளேடில் தொங்கிக் கொண்டு காரை ஓட்டுபவருக்கு டாட்டா காட்டியபடி குஷியாக செல்லும் காட்சி, உங்கள் பார்வைக்கு, வீடியோவாக.

மேலும் செய்திகளை  பார்வைிட
https://www.facebook.com/ilakkiyainfo

Share.
Leave A Reply