உலகிலேயே மிகக்குள்ளமான மனிதரான நேபாள நாட்டைச் சேர்ந்த சந்த்ரா பகதூர் டான்ஜி உடல்நலக் குறைவால் உயிரிழந்தார்.
இவர் 2012ஆம் ஆண்டில் கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்தார்.
54.6 செ.மீ. உயரமுள்ள இவர் உலகின் மிகக் குள்ளமான மனிதர் என்ற புகழைப் பெற்றார்.
நேபாள நாட்டைச் சேர்ந்த இவர் நிமோனியா நோய் காரணமாக வெளிநாட்டில் தங்கியிருந்து தான் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் தனது 75 ஆவது வயதில் உயிரிழந்தார்.