நெல்லை: உல்லாசமாக இருக்க தடையாக இருந்ததால் தலையணையில் அமுக்கி கணவரை கொலை செய்த மனைவி, கள்ளக்காதலனுடன் சிக்கினார்.
இந்த பரபரப்பு சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-நெல்லை மாவட்டம் தேவர்குளம் அருகே உள்ள சொக்கநாச்சியார்புரத்தைச் சேர்ந்தவர் மாரியப்பன் (51). இவர், அப்பகுதியில் டீக்கடை வைத்திருந்தார்.
இவரது மனைவி குருவம்மாள் (45). இவர்களுக்கு 2 மகன், ஒரு மகள் உள்ளனர். இவர்கள் மதுரை மற்றும் சென்னையில் தங்கி படித்து வருகின்றனர்.மாரியப்பனின் டீக்கடைக்கு அதே ஊரைச் சேர்ந்த உறவினர் பெரியசாமி என்ற சின்னராஜ் (48) அடிக்கடி வந்து சென்றார்.
இதனால் சின்னராஜூக்கும் குருவம்மாளுக்கும் ஏற்பட்ட பழக்கம், கள்ளக்காதலாக மாறியது. அடிக்கடி உல்லாசமாக இருந்ததாக தெரிகிறது. இது கணவர் மாரியப்பனுக்கு தெரியவரவே, மனைவியையும் சின்னராஜூவும் கண்டித்தார். இதுதொடர்பாக மாரியப்பனுக்கும், சின்னராஜிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருக்கும் மாரியப்பனை தீர்த்துக்கட்ட சின்னராஜ், குருவம்மாள் திட்டமிட்டனர். இதன்படி கடந்த 27ம் தேதி இரவு வீட்டில் மாரியப்பன் தூங்கிய பிறகு சின்னராஜை குருவம்மாள் வரவழைத்தார்.

இருவரும் சேர்ந்து தலையணையால் மாரியப்பன் முகத்தை அமுக்கி கொலை செய்தனர். கொலையை மறைப்பதற்காக உடலை தூக்கில் தொங்கவிட்டு மாரியப்பன் தற்கொலை செய்துகொண்டதாக நாடகமாடினர்.
இதுபற்றி தேவர்குளம் போலீசார் விசாரணை நடத்தினர்.
பிரேத பரிசோதனை அறிக்கையில் மாரியப்பன் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
சந்தேகத்தின்பேரில் குருவம்மாளிடம் வ விசாரித்தபோது கள்ளக்காதலனுடன் சேர்ந்து மாரியப்பனை கொலை செய்தது தெரியவந்தது.போலீசாரிடம் குருவம்மாள் கொடுத்த வாக்குமூலம்:

எனக்கும், சின்னராஜூக்கும் இடையே 5 ஆண்டாக பழக்கம் இருந்தது. என் கணவர் தினமும்  குடித்துவிட்டு வந்து தூங்குவார். அப்போது சின்னராஜை வீட்டிற்கு வரவழைத்து உல்லாசமாக இருப்பேன்.

கணவர் உயிரோடு இருந்தால் நாங்கள் ஜாலியாக இருக்க முடியாது என்று கருதி இருவரும் சேர்ந்து கடந்த 27ம்தேதி இரவு மதுபோதையில் வந்த கணவருக்கு சாப்பாட்டில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்தேன்.
அயர்ந்து தூங்கிய பிறகு அதிகாலை 3 மணியளவில் சின்னராஜிக்கு போன் செய்து வரவழைத்தேன். பின்னர் அவர், காலை பிடித்துக் கொள்ள நான் தலையணையால் முகத்தை அமுக்கி கொலை செய்தோம்.
இவ்வாறு குருவம்மாள் கூறியுள்ளார்.பஞ்சாயத்து தலைவியின் தந்தைகைது செய்யப்பட்ட சின்னராஜிக்கு 2 மகன் உள்ளனர். இவரது மகள்ஆறுமுகத்தம்மாள் தடியம்பட்டி பஞ்சாயத்து தலைவராக உள்ளார்.
Share.
Leave A Reply