ரேஷ்மா குரேஷி. இந்தப் பெயர் நினைவிருக்கிறதா?

2014-ம் ஆண்டு அலகாபாத்தில் தன் சகோதரியுடன் நடந்து சென்றுகொண்டிருந்த ரேஷ்மாவின் முகத்தில் மைத்துனன் ஆசிட் வீச, முகம் உருகிப் போய், இடது கண்ணை இழந்தார்.

எத்தனையோ கோரிக்கைகள் வைத்தும், அரசு ரேஷ்மாவின் சிகிச்சைக்கு உதவவில்லை. இண்டிகோகோ தளத்தில் நிதிதிரட்டித்தான் ரேஷ்மாவுக்கு சிகிச்சை செய்யப்பட்டது.

இன்று, ரேஷ்மா ‘மேக் லவ் நாட் ஸ்கார்ஸ்’ அமைப்புடன் இணைந்து, யூடியூபில் அழகுக் குறிப்புகளை பகிர்ந்துகொள்கிறார்.

மேலோட்டமான அழகுக் குறிப்பைச் சொல்லிவிட்டு, ஆழமாக மனதில் தைக்கும் கருத்து ஒன்றை வீடியோவில் சொல்கிறார் ரேஷ்மா. கேட்கும்போதே ‘நறுக்’கென்று இருக்கிறது.

Share.
Leave A Reply