இச் சம்பவத்தில் மரியதாஸ் பிங்ரன் (வயது 33) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்தார். இவரது மனைவி மற்றும் பிள்ளைகள் மடுவுக்கு சென்றுள்ளனர்.
இந் நிலையில் அதிக மதுபானம் அருந்திய இவர் 40 அடி உயரம் உள்ள நான்காவது மாடியின் பின் பக்கமாக குதித்துள்ளதாக சம்பவத்தை கண்டவர்கள் பொலிஸாருக்கு தெரிவித்தனர்.
அளவுக்கு அதிகமாக மதுபானம் அருந்தினால், அவர் என்ன செய்வார் என்று அவருக்கே தெரியாது என மனைவி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
மரணவிசாரணையினை யாழ். போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டதுடன் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சகோதரியின் வீட்டுக்குச் சென்றவர் மீது வாள் வெட்டு
06-09-2015
இணுவில் கந்தசாமி கோயில் பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்குள் புகுந்த முகமுடிக் கொள்ளையர்கள் அங்கிருந்த ஒருவர் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்திவிட்டு, அங்கிருந்த நகை மற்றும் பணம் என்பவற்றை ;ளையடித்து சென்றுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் நேற்று வியாழக்கிழமை (03) இடம்பெற்றுள்ளது.
இந்த வாள் வெட்டுச் சம்பவத்தில், மூன்று பிள்ளைகளின் தந்தையான சிகாமணி சுகந்தன் (வயது38) என்பவரின் இரு முழங்கால்களும் வாள்வெட்டுக்கு இழக்காகிய நிலையில், குறித்த யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வாள்வெட்டில் காயமடைந்தவரின் சகோதரியின் வீட்டுக்குள் நுழைந்த கொள்ளையர்கள், குடும்பத்தில் உள்ள அனைவரையும் மிரட்டி 35 பவுண் நகை மற்றும் 40,000 ரூபாய் பணத்தை கொள்ளையடித்து செல்ல முற்பட்டுள்ளனர்.
வீட்டில் உள்ள அனைவரும் அபாயக்குரல் எழுப்பவே, அங்கிருந்த நபர் தனது சகோதரியின் வீட்டுக்கு ஓடிச் சென்றுள்ளார்.
அங்கு நின்ற கொள்ளையர்கள் ஓடிச்சென்றவர் மீது சரமாரியாக வாள்வெட்டை மேற்கொண்டு விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை சுன்னாகம் குற்றத்தடுப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.