திரு­கோ­ண­மலை மண்ணின் மைந்தன், இலங்­கை வாழ் தமிழ்­மக்­களின் காவலன், பாராளு­மன்ற சம்பிரதாயங்களை நன்­க­றிந்த வழக்­க­றிஞன், நேர்மை மிக்கான், திண்­ணிய நெஞ்­சத்தான், செலச்­சொல்ல வல்லான் இரா. சம்­பந்தன் இலங்கைபாரா­ளு­மன்­றத்தின் எதிர்க்­கட்சித் தலை­வ­ராக பத­வி­யேற்­றமை ஜன­நா­யக விழு­மி­யங்கள் மீண்டும் மலர வேண்டும் என்ற வேட்கை துளிர்க்­கின்ற இக்­கால கட்­டத்தில் நம்­பிக்­கை­ தரும் நிகழ்­வெ­னலாம்.

திரு­கோ­ண­மலை நீதி­மன்­றத்தில் வழக்­காடும் வேளை சிங்­க­மென கர்ச்­சித்த அன்­னாரின் கர்­ஜனை பல்லாண்டுக­ளாக பாராளு­மன்­றத்தில் ஒலிக்­கி­றது. மாற்றுக் கொள்­கை­யா­ளரும் ஏற்­றுக்­கொள்ளும் வண்ணம் வாதத்தை முன்­வைத்து நமது நலம்­பே­ணுவார்.

இந்தத் தரு­ணத்தில் சம்­பந்தன் ஆற்­றிய பணிகள் சில ஞாப­கத்­துக்கு வரு­கின்­றன. 1977 ஆம் ஆண்டு என்று ஞாபகம்.. தந்தை செல்­வாவின் வேண்­டு­கோ­ளினைத் தொடர்ந்து, அவர் அர­சி­யலில் ஈடு­பட்டார்.

பாராளு­மன்ற அர­சி­யலில் ஈடு­பட்ட நாட்­தொட்டு தனக்கு நிறைய வருவாய் தந்த வழக்­க­றிஞர் தொழிலைக் கைவிட்டார்.

1977-, -1983 காலப்­ப­கு­தியில் பாராளு­மன்ற உறுப்­பி­ன­ராகப் பணி­யாற்­றினார். பின்னர் 2001ஆம் ஆண்டு தொட்டு பாராளு­மன்ற உறுப்­பி­ன­ராக இருக்­கின்றார்.

வழக்­க­றி­ஞ­ராக

வழக்­க­றிஞர் தொழில் ஆற்­றிய காலத்தில் மிகவும் வினைத்­தி­ற­னுடன் செயற்­பட்டார். வழக்­கு­களை மிகவும் நுட்­ப­மாகக் கையாண்டு வெற்­றி­யீட்­டினார்.

திரு­கோணமலையில் பர­ப­ரப்­பாகப் பேசப்­பட்ட ஒரு கொலை­ வ­ழக்கில் ஆஜ­ரா­கி­ய­போது, அந்த ஸ்தானத்­துக்கு, அர­சடிச் சந்­திக்கு, தானே நேராகச் சென்று பல கோணங்­களில் நிலை­மையை ஆராய்ந்து வாதங்­களை முன்வைத்து மறு­த­ரப்­புக்கு ஆஜா­ரா­கி­யி­ருந்த கொழும்பில் இருந்து வருகை தந்த பிர­பல சட்­டத்­த­ர­ணியின் வாதங்கள் சுக்­கு­ நூ­றாகும் வண்ணம் வழக்கை நடத்­தினார். வெற்­றியும் கண்டார்.

தமிழ் நீதி­மன்ற மொழி­யாக அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட பின்னர் திரு­கோ­ண­மலை மாவட்ட நீதி­மன்­றத்தில் முதன்­முதலாக தமிழில் நடை­பெற்ற வழக்கில் ஆஜ­ரா­கி­யி­ருந்தார்.

மறு தரப்பில் வழக்­க­றி­ஞ­ராக அ.அமிர்­த­லிங்கம் ஆஜ­ராகி இருந்தார். அப்­போது சம்­பந்தன் இன்று போல் சரளமாகத் தமிழில் உரை­யாற்­ற­ மாட்டார்.

ஆனால் அமிர்­த­லிங்கம் அடுக்கு மொழியில் மிடுக்­குடன் வாதங்­களை முன்­வைத்தார். ஆயினும் சம்­பந்தன் சட்ட நுணுக்­கங்­களை முன்­வைத்து தான­றிந்த தமிழில், தனக்கே உரி­யபா­ணியில் வாதிட்டார். தீர்ப்பும் அவர் கட்­சிக்­கா­ர­ருக்குச் சார்­பாக அமைந்­தது.

அன்று திரு­கோ­ண­மலை மாவட்ட நீதி­ப­தி­யாக இருந்த, நீதி­ய­ரசர் அப்­துல்­காதர் திரு­கோ­ண­ம­லையில் பெரிய கடையில் சின்ன முற்­ற­வெளியில் அமைந்­தி­ருந்த பொது­சே­வைகள் கழ­கத்­துக்கு மாலை வேளை­களில் உள்­ளக விளை­யாட்­டுக்­காக வரு­வ­துண்டு.

அங்கு ஒக்ஷன் பிரிட்ஜ் விளை­யாடிக் கொண்­டி­ருந்த போது எங்­க­ளிடம் ஒரு­ த­டவை இவ­ரது சட்ட நுணுக்கம், வழக்­காடும் வாதத்­திறம் பற்றிப் பின்­வ­ரு­மாறு கூறினார்.

சம்­பந்தன் உயர்­நீ­தி­மன்றம் போன்ற வழக்­காடு மன்­றங்­களில் ஆஜ­ராகி வாதிட்டால் அகில இலங்கை ரீதியில் பிர­பல்யம் பெறுவார் என்று நம்­மிடம் கூறி­ய­துண்டு.

சன்­சோணி ஆணைக்­குழு முன்­னி­லையில்

திரு­கோ­ண­ம­லையில் சன்­சோணி ஆணைக் குழுவின் முன்­னி­லையில் சம்­பந்தன் ஆங்­கி­லத்தில் சாட்­சியம் அளித்தார். அப்­போது சில அமைப்­புக்­களின் சார்பில் ஆஜ­ரான சட்­டத்­த­ரணி ஒரு கேள்விக் கணையைத் தொடுத்தார்.

திரு­கோ­ண­ம­லையில் சில பிர­தே­சங்­களில் பௌத்த விகா­ரைகள் பண்­டைய காலந்­தொட்டு காணப்­ப­டு­கின்ற நிலையில் வட, கிழக்கு தமிழர் தாயகம் என்ற தங்கள் நிலைப்­பாடு எப்­படி நியா­ய­மாகும்?

இதுவே அவர் வாத­மாகும். சம்­பந்தனின் பதில் எப்­படி அமையப் போகி­றது என்று ஆவ­லுடன் காத்­தி­ருந்தோம்.

பௌத்த மதம் சீனா, ஜப்பான், கம்­போ­டியா போன்ற பல நாடு­களில் பரவிக் காணப்­ப­டு­வதால் அவற்றை சிங்­கள பிர­தே­ச­மென அறி­வுசால் நண்­பரால் வாதாட முடி­யுமா? அவ்­வாதம் குதர்க்­க­மாக அமை­யாதா?

அங்கு அவர்கள் மதத்தால் பௌத்­தர்­க­ளாக இருப்­பினும், மொழியால், இனத்தால், கலா­சா­ரத்தால் வேறுபட்டவர்கள் என்­பதை ஏன் அறி­வுசால் நண்­பரால் புரிந்து கொள்­ள­மு­டி­ய­வில்லை?

மேலும், தமிழ் மொழியில் மணி­மே­கலை போன்ற பௌத்த மதக்­காப்­பி­யங்கள் உண்டு என்­ப­தையும், தமிழ் மக்களில் ஒரு­சாரார் பௌத்­தர்­க­ளாக வாழ்ந்­தி­ருக்­கலாம் என்­ப­தையும் அறி­வுசால் நண்­ப­ருக்குக் கூறி­வைக்க விரும்­பு­கிறேன்.

இப்­படி சம்­பந்தன் பட்­டென்று கூறி­வைக்க, அவையில் செவி­ம­டுத்த நாம் வியப்­புற்றோம். ஏன் நீதி­ய­ரசர் சன்சோணியின் முகத்தில் கூட வியப்­பு­ணர்வு முகிழ்த்­ததை நாம் கண்டோம்.

அது வன்­செயல் வெடித்த காலம். பண்­குளம் என்ற தமிழ் கிராமம், கடற்­ப­டை­யினர் சிலர் நள்­ளி­ரவில் அனு­ம­தி­யின்றி முகா­மி­லி­ருந்து வெளியேறி அக்­கி­ரா­மத்­தினுள் நுழைந்து தாக்­கு­தலில் ஈடு­பட்­டனர்.

காலையில் இதனை அறிந்­ததும், சம்­பந்தன் அவர்கள், இங்கு வந்த சில­ரிடம் தாக்­குதல் பற்­றிய தக­வல்­களைத் திரட்டி, அப்­போ­தைய ஜனா­தி­ப­தியின் செய­லா­ள­ருடன் – மனிக்­டீ­வெல என்று ஞாபகம்- தொலை­பே­சியில் தொடர்பு கொண்டு விரை­வாக இயங்­கினார்.

அப்­போ­தைய மூதூர் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் தங்­கத்­துரையுடன் தொடர்பு கொண்டு உடனே அக்­கி­ரா­மத்­துக்குத் தாங்கள் இரு­வரும் செல்ல வேண்­டிய அவ­சி­யத்தை வலி­யு­றுத்­தினார்.

நாம் அங்கு உடனே சென்று உரிய பாது­காப்பு நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­ளா­விட்டால், அக்­கி­ரா­மத்து மக்கள் பயம் கார­ண­மாக, பாது­காப்பு கருதி நக­ரத்தை நாடுவர். எல்லைக் கிரா­மங்கள் பறி­போய்­விடும். என்ற கவ­லையை வெளியிட்டார்.

அங்கு சென்ற அவர் பாது­காப்பு அதி­கா­ரி­க­ளுடன் வாதிட்டு, அப்­ப­டை­யி­னரை முகா­மினுள் முடக்­கி­வைக்­கவும், பாதுகாப்பு நட­வ­டிக்­கை­களில் பொலி­ஸாரை ஈடு­ப­டுத்­தவும் கட்­ட­ளை­களைப் பெற்றார்.

Join-Tnaஇராஜ தந்­திரம்

வகுப்புக் கல­வரம் நாட்டில் வெடித்த போது, திருக்­கோ­ண­ம­லை­யிலும் நள்­ளி­ரவில் பாதிப்­புக்கள் ஏற்­பட்­டன. சம்பந்தன் வீட்டின் முன்­ப­கு­தியில் கூட பாதிப்­புக்கள் காணப்­பட்­டன.

மறுநாட் காலை நாமும் அங்கு சென்­றி­ருந்தோம். அப்­போ­தைய கிழக்கு மாகாண உதவி பொலிஸ் மாஅ­திபர் அங்கு வந்தார். சம்­பந்தன் நிலை­மை­களை விளக்கிக் கூறினார். இவற்­றினை அமை­தி­யாகக் கேட்­ட­றிந்த பின்னர், அவ்­வ­தி­காரி சொன்னார்:

ஐயா! யாழ்ப்­பா­ணத்தில் சில தமிழ்த் தலை­வர்­களின் வீடுகள் தாக்­குண்ட போது, நான் அங்கு சென்று விசாரணைகளை மேற்­கொண்­டி­ருந்தேன்.

அவர்கள் பதற்றத்­துடன் காணப்­பட்­டனர். ஆனால், நீங்கள் எவ்­வித பதற்றமும் இன்றி, நிதா­ன­மாகக் காணப்­ப­டு­கி­றீர்கள். இது எப்­படி என்றார்.

சிறு­வ­யதில் எனது தந்­தையார் கூறிய கூற்­றைத்தான் நினைத்துப் பார்க்­கிறேன். எமது குல­தெய்வம் வில்லூன்றிக் கந்தன் எம்மை எத்­த­ரு­ணத்­திலும் காப்பான்.

இடை­யூ­றுகள் ஒன்றும் செய்யா. என்­பதே எனது தகப்­ப­னாரின் கூற்­றாகும். இதுவே எனது துணை­யாகும்..இப்­படிச் சொன்னார் சம்­பந்தன். ஆம் சம்­பந்தன் வில்­லூன்றி முருக பக்தன். திரு­கோ­ண­மலை காவல் தெய்­வமாம் காளி பக்தன்.

இரும்பு மனிதன் நாக­நாதன், அமிர்­த­லிங்கம் போன்­றோ­ரிடம் காணப்­பட்ட அசா­தா­ரண துணிச்­சலை இவ­ரிடம் காண்­கிறேன்.

ஆனால் ஒரு வித்­தி­யாசம். மித­வாத அடிப்­ப­டையில், யதார்த்தைப் புரிந்து கொண்ட, விளை­வு­களை சீர்­தூக்கிப் பார்க்கும் துணிச்சல், இவர் தம் துணிச்சல். இதுவே ஒரு தலை­வ­ரிடம் நாம் எதிர்­பார்க்கும் இரா­ஜ­தந்­திரம் சார்ந்த துணிச்சல்.

TNA082914bஇன்­னொரு சம்­பவம். மாவட்ட சபைத் தேர்தலில் பங்கு பெறு­வ­தில்லை என்று சுதந்­திரக் கட்சி தீர்­மா­னிக்­கி­றது. சம்­பந்தன் சுதந்­திரக் கட்சித் தலைவி ஸ்ரீமாவோ அம்­மை­யா­ரோடு தொடர்பு கொண்டார்.

திரு­கோ­ண­ம­லையில் மாவட்ட சபைத்தேர்தலில், தங்­கத்­து­ரையை ஆத­ரித்து ஐக்­கிய தேசியக் கட்­சியை எதிர்க்க சுதந்­திரக் கட்சி முன்­வந்­தது. ஈற்றில் தங்­கத்­துரை வெற்றி பெறு­கிறார்.

தேர்தல் முடி­வுகள் வெளியா­னதும், இர­வோடி­ர­வாக ஐக்­கிய தேசியக் கட்சி ஆத­ர­வா­ளர்­களால் திரு­கோ­ண­மலை சுதந்­திரக் கட்­சியைச் சார்ந்த சிங்­கள மக்­களின் வீடுகள் தாக்­கப்­ப­டு­கின்­றன.

சம்­பந்தன் சிங்­கள சகோ­த­ரர்­களின் வீடு­க­ளுக்கு விரைந்து சென்று ஆறுதல் கூறி, பாது­காப்­புக்கு ஏற்­பா­டு­களைச் செய்து கொடுத்தார்.

நான் மாணவப் பரு­வத்தில் கொழும்பு சென்றால், பாராளு­மன்ற பொது­மக்கள் கல­ரியில் அமர்ந்து, அக்­கால அமர்­வு­களை அவ­தா­னித்­துள்ளேன்.

பண­டா­ர­நா­யக்கா, ஜி.ஜி பொன்­னம்­பலம், கொல்வின் ஆர். டீ .சில்வா, ஜய­வர்த்­தனா, பீட்டர் கெனமன், என்.எம். பெரேரா, பிலிப் குண­வர்த்­தன, சுந்­த­ர­லிங்கம் இன்னோரன்ன பாராளுமன்ற உறுப்பினர்களின் வாதங்களை செவிமடுத்துள்ளேன்.

அந்த பரம்பரையினரின் வாதத் திறனை, சொல்லாற்றலை, எல்லாவற்றுக்கும் மேலாக அவர்களிடம் யான் கண்ட இங்கிதத்தை, இன்று சம்பந்தனிடம் காண்கிறேன்.

அண்மைக் காலங்களில் ஆரோக்கியமற்ற பாராளுமன்ற அமர்வுகளைப் பார்த்திருக்கிறோம். வாசுதேவ நாணயக்காரா போன்ற பாராளுமன்ற அனுபவஸ்தர்கள் கூட இங்கிதமற்ற வார்த்தைகளைக் கூச்சமின்றி பிரஸ்தாபித்துள்ளனர். சபாநாயகர் பொதுமக்கள் கலரியில் இளைஞர்கள், மாணவர்கள் அமர்ந்துள்ளனர் என்று எச்சரித்தார்.

இப்படியான சூழ்நிலையில் சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவராகிறார். இங்கிதம் அறிந்த, பாராளுமன்ற சம்பிரதாயங்களை நன்கறிந்த, இடித்துரைக்க வல்ல இரா .சம்பந்தனின் ஆற்றுப்படுத்தலில் பாராளுமன்றம் ஏறுநடை போடும் என்று நம்புகிறோம்.

-வே.வரதசுந்தரம்-

Share.
Leave A Reply