பின்னர் ஜாமீனில் வெளியே வந்த மகா தலைமறைவானார். மேலும் ஜி.ஜி.ரமேஷ் கொலையால் மகாவுக்கும், ஜி.ஜி.ரமேஷுக்குமான பகை மேலும் அதிகரித்தது, ரமேஷைப் போலவே ரவியையும் கொலை செய்ய மகா திட்டமிட்டு வந்தார்.இந்நிலையில், வேலூர் காகிதப்பட்டறை பகுதியில் நேற்றிரவு கிருஷ்ண ஜெயந்தி விழா நடைபெற்றது. இதில் ஜி.ஜி.ரவி கலந்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த மகா, இந்த விழாவில் ரவியைக் கொல்ல திட்டமிட்டார்.
அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை ஆடைகளுக்குள் மறைத்து வைத்து பக்தர்கள் போல கூட்டத்திற்குள் நின்றபடியே ரவியைக் கண்காணித்துள்ளனர்.கிருஷ்ண ஜெயந்தி விழா முடிந்து தோட்டப்பாளையத்தில் உள்ள தாரகேஸ்வரர் கோவிலுக்கு ஜி.ஜி.ரவி மற்றும் அவரது ஆட்கள் இரவு 8.40 மணியளவில் வந்தனர்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஜி.ஜி.ரவியின் ஆட்கள் சுமார் 30 பேர் மகாவை துரத்திக் கொண்டு ஓடினர். காட்பாடி சாலையில் பேருந்து ஒன்று குறுக்கே வந்ததால், ரவியின் ஆட்களிடம் சிக்கினார் மகா.
இதில் சம்பவ இடத்திலேயே ரவுடி மகா துடிதுடித்து உயிரிழந்தார். பின்னர் அக்கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியது. தகவல் அறிந்து விரைந்து வந்த வேலூர் சரக டி.ஐ.ஜி. தமிழ்ச்சந்திரன், போலீஸ் சூப்பிரண்டு செந்தில் குமாரி மற்றும் போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினார்கள்.மகாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையே காயம் அடைந்த ஜி.ஜி.ரவி சிகிச்சைக்காக வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைக்கு பின்னர் வீடு திரும்பினார்.
இந்த சம்பவங்களால் வேலூரில் பதட்டமான சூழ்நிலை நிலவுகிறது. காட்பாடி சாலை, காந்திரோடு, மெயின் பஜார், ஆற்காடு சாலை, தனியார் மருத்துவமனை, பழைய பஸ் நிலையம் உள்ளிட்ட இடங்களில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன.
அந்த பகுதியில் 400-க்கும் மேற்பட்ட அதிரடி படை போலீசார் குவிக்கப்பட்டனர். அதிமுக பிரமுகரின் ஆட்களால் ரவுடி கொடூரமாக நடு ரோட்டில் வைத்துக் கொலை செய்யப்பட்டது வேலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரவியின் மகன்கள், தம்பி கைது: இந்தக் கொலை வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தி வரும் போலீசார், ஜி.ஜி.ரவியின் மகன்கள் தமிழ்மணி,கோகுல், ரவியின் தம்பி செல்வம், அவரது மகன்கள் ரஞ்சித், கார்த்தி, சஞ்சீவ் மற்றும் உறவினர் சிலம்பரசன் ஆகியோரைக் கைது செய்துள்ளனர்.