தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் மணந்தார் திக்விஜய் சிங் ராயை, காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் மணந்தார்.

இருவருக்கும் சென்னையில் கடந்த வாரம் திருமணம் முடிந்துள்ளது. இந்தத் தகவலை அம்ருதா தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்தார்.

இதுகுறித்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் அம்ருதா ஞாயிற்றுக்கிழமை குறிப்பிடும்போது, “திக்விஜய் சிங்குடன் எனக்கு கடந்த வாரம் சென்னையில் திருமணம் இந்து முறைப்படி நடந்து முடிந்தது.

பிறகு நாங்கள் இந்த திருமணத்தை பதிவும் செய்து கொண்டோம் என்பதை எனது நண்பர்களுக்கு தெரிவித்து மகிழ்வுடன் தெரிவித்து கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

இதில் மேலும், “திக்விஜய் உடன் கொண்ட காதலுக்காக மட்டும் என அவரை மணம் முடித்துள்ளேன்.

எனவே, அவரது சொத்துக்கள் அனைத்தையும் அவரது மகன் மற்றும் மகள்களின் பெயருக்கு மாற்றி விடுமாறு ஏற்கனவே கேட்டுக் கொண்டிருக்கிறேன்.

அவருடனான இந்தப் புதிய பயணத்தில் நான் எனது கௌரவமான பணியை மேற்கொள்ள இருக்கிறேன்” என்று அம்ருதா கூறியுள்ளார்.

unnamedகாங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச் செயலாளரும், மூத்த தலைவருமான திக்விஜய் சிங்குக்கு வயது 68. இவருக்கு ராஜ்யசபா தொலைக்காட்சியின் 44 வயது செய்தி வாசிப்பாளர் அம்ருதா ராயுடன் காதல் தொடர்ந்து வந்தது.

பிறகு இருவரும் வெளிப்படையாக ஒத்துக் கொண்ட காதல் திருமணத்தை சென்னையில் இரகசியமாக செய்தது ஏன் எனக் கேள்வி எழுந்துள்ளது.

இந்த திருமணத்திற்கு திக்விஜயின் சகோதரர் லஷ்மண்சிங் மற்றும் அவரது குடும்பத்தினர் எவரும் அழைக்கப்படவில்லை எனத் தெரிய வந்துள்ளது.

இது குறித்து திக்விஜய் சிங்கின் ஒரே மகனும், மத்தியப் பிரதேசம் மாநிலம் ரகோகரின் காங்கிரஸ் எம்.எல்.ஏவுமான ஜெய்வர்தன்சிங்கை தொடர்பு கொண்டு கேட்டபோது கருத்து கூற மறுத்து விட்டார்.

எனினும், இந்தத் திருமணத்தை பொறுத்தவரை அவர் தம் தந்தைக்கு ஆதரவளிப்பதாக ஜெய்வர்தன் சிங்கின் நண்பர்கள் வட்டாரம் தெரிவிக்கிறது. இவருக்கு சமீபத்தில் திருமணம் நடந்தது.

காங்கிரஸ் கட்சியில் அதிரடியாக அரசியல் கருத்துக்கள் கூறுவதில் பெயர் பெற்ற அதன் மூத்த தலைவர் திக்விஜய் சிங்.

1993 முதல் 2003 வரை மபி மாநிலத்தில் இரண்டு முறை முதல்வராக இருந்தவருக்கு ஒரு பிரபல பெண் பத்திரிகையாளருடன் இரகசிய தொடர்புகள் இருப்பதாக சமூகவலைதளங்களில் படம் மற்றும் வீடியோவுடன் செய்திகள் பரவத் தொடங்கியது.

சுமார் 14 மாதங்களுக்கு முன் வெளியான அதில், அம்ருதா ராயுடன் திக்விஜய், ஒரு கோயிலில் பூஜை செய்வது போன்ற படக்காட்சியும் வெளியானது.

இதற்கு, தன் மீது கிளம்பிய புகாரை கடுமையாக மறுத்தார் திக்விஜய். இதன் பிறகு லேசாக அடங்கிய விவகாரம், மீண்டும் சில மாதங்களுக்கு பின் கிளம்பியது.

இதற்கு முடிவு கட்டும் விதத்தில் 68 வயது திக்விஜய் சிங், தனது ட்வீட்டர் பக்கத்தில் தனது உறவை உறுதி செய்தார்.

அப்போது திக்விஜய்சிங் கூறுகையில், ´அமிருதா ராயுடன் எனக்குள்ள உறவு இருப்பதை ஒத்துக்கொள்வதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை.

அவரும், அவருடைய கணவரும் பரஸ்பரம் விவாகரத்து தாக்கல் செய்துள்ளனர். இது, முடிவானால் எங்களுடைய உறவை நாம் முறைப்படுத்திக் கொள்வோம். அத்துடன் தனிநபருடைய வாழ்க்கையில் அத்து மீறுவதை நான் கடுமையாக கண்டிக்கிறேன்´ எனக் கூறினார்.

தொடர்ந்து, இதை உறுதி செய்து அமிருதா ராயும் தனது ட்வீட்டர் பக்கத்தில், ´எனது கணவரிடம் இருந்து நான் விலகி விட்டேன்.

நாம் இருவரும் பரஸ்பரம் விவாகரத்து தாக்கல் செய்துள்ளோம். இதன் பிறகு நான் திக்விஜயாசிங்கை மணம் செய்ய முடிவு செய்துள்ளேன்´ என எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.

திக்விஜய்சிங்கிற்கு மணமான தகவலை கேள்விப்பட்ட காங்கிரஸ் கட்சியினர் அவருக்கு வாழ்த்து சொல்ல முடியாமல் தவித்து வருவதாகக் கூறப்படுகிறது.

காரணம், தற்போது, அமெரிக்காவில் சிகிச்சைக்காக சென்றுள்ள தன் மகள் கார்னிகாவுடன் இருக்கும் திக்விஜய் தம் கைபேசியை அணைத்து வைத்திருப்பதாகக் தெரியவந்துள்ளது.

எனினும், அவரது மெயிலில் குவிந்து வரும் வாழ்த்துக்களுக்கும் திக்விஜய் பதில் அளிக்க நேரமில்லாமல் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இவர் அமெரிக்காவில் இருந்து செப்டம்பர் 12-ல் திரும்ப வரவிருக்கிறார். வந்த பிறகு தனது மறுமண அறிவிப்பை அதிகாரபூர்வமாக அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share.
Leave A Reply