எதிர்க்­கட்­சித் ­த­லைவர் பத­வியை தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு ஏற்றுக் கொண்டுவிட்­டது என்­ப­தற்­காக தமிழ் மக்­க­ளு­டைய பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்­வு­கி­டைத்து விட்­ட­தாக யாரும் அர்த்தம் கொள்­ளக்­கூ­டாது.

மக்கள் விரும்பாத எந்தத் தீர்­வையும் நாம் ஏற்­கப்­போ­வ­தில்லை என்று எதிர்க்­கட்­சித்­த­லை­வரும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்தன் தெரி­வித்தார்.

எதிர்க்­கட்­சித்­த­லை­வ­ராக பத­வி­யேற்­றுள்ள இரா.சம்­பந்­தனை பாராட்டிக் கௌர­விக்கும் வைபவம் ஞாயிற்றுக்கிழமை மாலை திரு­கோ­ண­மலை நக­ர­சபை மண்­டபத்தில் நடை­பெற்றது. அதில் கலந்துகொண்டு உரை­யாற்றும்போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

எதிர்க்­கட்சித் தலைவர் சம்­பந்தன் அங்கு தொடர்ந்து பேசு­கையில்;

மக்­களின் விருப்­பத்­துக்கு மாறாக நாம் எப்­பொ­ழுதும் நடந்துகொள்ளமாட் டோம். எமது இலக்கை நோக்கி நாம் முடியும் வரை தொடர்ந்து பய­ணித்துக் கொண்­டே­யி­ருப்போம்.

எமது இலக்­குக்கு எதிர்க்­கட்­சித் ­த­லைவர் பத­வி­ யென்­பது எப்­பொ­ழுதும் தடை­யாக இருப்­பதை நாம் ஏற்றுக்கொள்­ள­மாட்டோம்.

sampanthan-trinco-welcome-3

எனக்குத் தரப்­பட்ட எதிர்க்­கட்சித் தலைமை பத­வி­யா­னது எனக்­கு­ரி­ய­தல்ல, அது எமது மக்­க­ளுக்­கு­ரி­ய­தாகும், அத்­துடன், அந்த பதவி எமது கட்­சிக்­கு­ரி­ய­தாகும். எமது தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பு என்னைப் பாரா­ளு­மன்றக் குழுத்த­லை­வ­ராக நிய­மித்­ததன் கார­ண­மாக இப்­ப­தவி கிடைத்­துள்­ளது.

இப்­ப­தவியை நான் பணி­வு­டனும் அடக்­கத்­துடனும் ஏற்­றி­ருக்­கின்றேன். அதற்­காக எமது மக்­க­ளுக்கும் எம்­கட்சி சார்ந்த பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கும் நன்றி கூறக்கட­மைப்­பட்­டி­ருக்­கின்றேன்.

பாரா­ளு­மன்ற சம்­பி­ர­தா­யத்­தின்­படி இப்­ப­தவி எமது கட்­சிக்கு வந்து சேர்ந்­துள்­ளது. எமது கட்­சிக்கு பிர­தம கொரடா பத­வி­யொன்று உண்டு.

அப்­ப­த­வியை இன்­னு­மொரு எதிர்க்­கட்­சி­யான மக்கள் விடு­தலை முன்­ன­ணிக்கு கொடுக்கத் தீர்­மா­னித்தோம். அவர்­களின் கோரிக்­கைக்கு அமை­வாக இதனை செய்தோம்.

இந்த முடி­வுக்கு எமது பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் அனை­வரும் தமது பூர­ண­மான சம்­ம­தத்தைத் தெரி­வித்­தி­ருந்­தார்கள்.

இதன் நிமிர்த்­தந்தான் எதிர்க்­கட்சி கொர­டாப்­ப­தவி மக்கள் விடு­தலை முன்­ன­ணிக்கு வழங்­கப்­பட்­டது. கடந்த ஜன­வரி மாதம் 8ஆம் திகதி பாரிய அர­சியல் மாற்­ற­மொன்று நாட்டில் ஏற்­பட்­டது.

sampanthan-trinco-welcome-1அண்­மையில் நடை­பெற்ற பாரா­ளு­மன்றத் தேர்தல் ஊடாக தேசிய அர­சாங்­க­மொன்று அமைக்­கப்­பட்­டுள்­ளது. ஜனா­தி­பதித் தேர்­த­லுக்கும் பாரா­ளு­மன்றத் தேர்­த­லுக்கும் இடையில் ஒரு அர­சாங்கம் ஆட்­சி­பு­ரிந்து வந்­தது.

அது ஒரு அது பெரும்­பான்மைப் பல­மற்ற அர­சாங்­க­மாகும். ஆகையால் அந்த அர­சாங்­கத்தால் முக்­கி­ய­மான விட­யங்­களைச் செய்ய முடி­ய­வில்லை.

பாரா­ளு­மன்றத் தேர்தல் நடை­பெற்ற காலத்தில் எதிர்­பார்த்­தது போல ஐக்­கிய தேசியக் கட்­சியும் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியும் சேர்ந்து ஆட்சி அமைத்­துள்­ளன.

விஷே­ட­மாக ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியைச் சார்ந்­த­வர்கள் ஒன்­றாக இணைந்து 19ஆவது அர­சியல் சாச­னத்தின் அடிப்­ப­டையில் தேசிய அர­சாங்­கத்தை அமைத்­தி­ருக்­கின்­றார்கள். இதன் மூலம் இந்த அர­சாங்கம் பாராளுமன்றத்தில் பெரும்­பான்­மையைப் பெறும்.

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் உத­வி­யுடன் ஆளும் அரசு மூன்றில் இரண்டு பெரும்­பான்­மையைப் பெறும் வாய்ப்­புண்டு.

ஏதா­வ­தொரு விட­யத்­துக்கு நாம் அவர்­க­ளுடன் சேர்ந்து வாக்­க­ளித்தால் பாரா­ளு­மன்­றத்தில் 2ஃ3 பெரும்­பான்மை வரக்­கூடும்.

sampanthan-trinco-welcome-4இந்த அர­சாங்கம் அமைக்­கப்­பட்­டதன் முக்­கி­ய­மான அடிப்­படை என்­ன­வென்றால் இந்த நாட்டில் நல்­லாட்சி ஏற்­ப­ட­வேண்டும் என்­பதே ஆகும்.

அத்­துடன் ஊழல் முடி­வுக்கு கொண்­டு­வ­ரப்­ப­ட­வேண்டும். மனித உரிமை மதிக்­கப்­பட வேண்டும். சட்ட ஆட்சி இருக்க வேண்டும். யாராக இருந்­தாலும் சட்டம் மதிக்­கப்­பட வேண்டும்.

பாரா­ளு­மன்­றத்தின் கௌரவம் பேணிப்­பா­து­காக்­கப்­பட வேண்டும் என்­ப­தற்­கா­க­வாகும். இவை­யெல்லாம் நல்­லாட்­சியின் சிறந்த அம்­சங்­க­ளாகும்.

கடந்த 9 ஆண்­டு­களில் மேற்­படி பண்­பு­களில் பல்­வேறு குறை­பா­டுகள் காணப்­பட்­டன. நாடு நல்­லாட்­சி­யி­லி­ருந்து வெகு­தூரம் விலகிச் சென்­றி­ருந்­தது. இந்த குறை­பாடு ஏற்­பட அடிப்­ப­டைக்­கா­ர­ணங்கள் பல இருந்­தன.

சமத்­துவம் இருக்­க­வில்லை. இதனால் நிரந்­த­ர­மான சமா­தானம் ஏற்­ப­ட­வில்லை. சமத்­து­வத்தை உண்­டாக்க எடுக்­கப்­பட்ட முயற்­சிகள் தோல்­வி­கண்­டன.

இதனால் யுத்­த­மொன்று கூட மூண்­டது. 30 வரு­டங்கள் அந்த யுத்தம் நீடித்­தது. தமிழ் இளை­ஞர்கள் அர­சாங்­கத்­தையும் அர­ச­ப­டை­க­ளையும் எதிர்த்து 30 வரு­டங்கள் போரா­டி­னார்கள். இது ஒரு சாதா­ரண விட­ய­மல்ல, பெரிய சாதனை. இதை­யாரும் மறுக்க முடி­யாது.

இன்று தமிழ் மக்­க­ளு­டைய பிரச்­சினை சர்­வ­தேச மய­மாக்­கப்­பட்­டுள்­ளது.பொறுப்புக் கூற வேண்­டி­ய­வர்கள் பொறுப்புக் கூற­வேண்டும் உண்மை அறி­யப்­பட வேண்டும். நீதி­வ­ழங்­கப்­பட வேண்டும்.

பாதித்­த­வர்­க­ளுக்கு பரி­காரம் தேடப்­பட வேண்டும் என சர்­வ­தேச சமூகம் கூறு­கின்­றது . இவ்­வி­த­மான அழி­வுகள் இந்த நாட்டில் மீண்டும் ஏற்­ப­டாமல் உரிய ஏற்­பா­டுகள் மேற்­கொள்­ளப்­பட வேண்டும்.

குறிப்­பாகச் சொல்லப்போனால் இன்று காணப்­படும் தேசியப் பிரச்­சி­னைக்குத் தீர்வு காணப்­பட வேண்டும். இதுதான் நமது குறிக்­கோ­ளாகும்.

எதிர்க்­கட்­சியைச் சார்ந்­த­வர்கள் என்ற வகையில் எமது கட்சி இவ்­வி­ரண்டு விட­யங்­க­ளிலும் கவனம் செலுத்தும்.

தேசிய இனப்­பி­ரச்­சி­னைக்குத் தீர்வு காணும் விட­யத்தில் நாமும் மும்­மு­ர­மாக ஈடு­ப­டுவோம். அக்கடமையிலிருந்து விலகிச் செல்­ல­மாட்டோம்.

ஏனைய விட­யங்­களில் நாட்டில் முன்­னேற்றம் காணப்­பட வேண்­டு­மாயின் தேசிய இனப்­பி­ரச்­சி­னைக்கு உட­ன­டி­யான தீர்வு காணப்­பட வேண்டும்.

என்ன வித­மான தீர்வு தரப்­பட வேண்­டு­மென்­பதை தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில் தெளி­வாகக் கூறி­யி­ருக்­கின்றோம். நாங்கள் தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில் கூறி­யி­ருப்­பது புரட்­சி­க­ர­மான விட­ய­மல்ல. நியா­ய­மான நீதி­யான கோரிக்­கை­யாகும்.

உலகில் பல­நா­டு­களில் பல்­வேறு இனம், மதம், மொழி சார்ந்த மக்­க­ளுக்கு அரச சாசன ரீதி­யாக, சிறந்த ஒழுங்­குகள் செய்­யப்­பட்­டதன் நிமித்தம் ஆட்சி பகிர்ந்­த­ளிக்­கப்­பட்டு, இறைமை பகிர்ந்­த­ளிக்­கப்­பட்டு, அந்த மக்கள் தங்கள் தலை­வி­தியைத் தாங்­களே நிர்­ண­யிக்­கக்­கூ­டிய வகையில் ஆட்சி ஒழுங்­குகள் உண்டு.

நாட்டைப் பிரிக்­கும்­ப­டி­யாக நாங்கள் கோர­வில்லை. பிள­வு­ப­டுத்தக் கேட்­க­வில்லை. ஒரு­மித்த நாட்­டுக்குள் தமிழ் மக்­களும் சம­பி­ர­ஜை­க­ளாக வாழக்­கூ­டிய விதத்தில் போதிய சுயாட்­சி­யைப்­பெற்று வாழ­வேண்டு மென்று விரும்­பு­கின்றோம். சமா­தானத் தீர்­வொன்றே நல்­லாட்­சிக்­கான அத்­தி­வா­ர­மாக இருக்­க­மு­டியும்.

அந்த அத்­தி­வா­ர­மில்­லாமல் இந்த நாட்டில் நல்­லாட்­சியை உரு­வாக்க முடி­யாது. எனவே தமிழ்த் தேசி­யக்­கூட்டமைப்பு எதிர்க்­கட்­சிப்­ப­த­வியை ஏற்­றி­ருக்கும் இவ்­வே­ளையில் என்­ன­மா­திரி நாம் செயற்­ப­ட­வேண்டும், திட்ட­மிட்டுக் கொள்ள வேண்டும் என்­பதில் நாம் தெளி­வாக இருக்­கின்றோம். நடை­பெற்றுக் கொண்­டி­ருக்­கின்ற மாற்­றங்கள் நாம் எதிர்­பா­ராத மாற்­றங்­க­ளாகும்.

மஹிந்த ராஜபக் ஷவை எதிர்த்துப் போட்­டி­யிட்ட மைத்­தி­ரி­பால சிறி­சேன வெற்றி பெற்றார். எதிர்க்கட்சியிலிருந்த ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை பிர­த­ம­ராக நிய­மித்தார்.

இது ஒரு துணிச்­ச­லான செய­லாகும். ரணி­லுக்கு பாரா­ளு­மன்­றத்தில் பெரும்­பான்மை பலம் இருக்­க­வில்லை. பெரும்­பான்­மை­பலம் இல்­லாத ஒரு எதிர்க்­கட்சித் தலை­வரை பிர­த­ம­ராக நிய­மித்­தமை பாரிய சாத­னை­யாகும்.

அவ்­வாறு அவர் செய்­த­மைக்­கு­ரிய காரணம் ஜனா­தி­பதி தேர்தல் நடை­பெற்ற போது மக்­க­ளுக்கு ஒரு வாக்­கு­றுதி வழங்­கி­யி­ருந்தார். நான் வெற்­றி­பெற்றால் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை பிர­த­ம­ராக்­குவே என்று கூறி­யி­ருந்தார்.

தேர்­தலின் பின்னர் மக்கள் ஆணையின் அடிப்­ப­டையில் ரணிலை பிர­த­ம­ராக்­கினார். மஹிந்த ராஜபக் ஷ அண்மையில் நடை­பெற்ற பாரா­ளு­மன்றத் தேர்­தலில் போட்­டி­யிட்­ட­போது ஐக்­கிய மக்கள் சுதந்­திரக் கூட்­டணி பெரும்­பான்­மை­யாக வெற்றி பெற்­றாலும் மஹிந்­தவை நான் பிர­த­ம­ராக நிய­மிக்க மாட்டேன் என தனது நிலைப்­பாட்டைத் தெளி­வாகக் மைத்­தி­ரி­பால சிறி­சேன கூறினார்.

பகி­ரங்­க­மாகக் கூறினார். மக்கள் தனக்குத் தந்த ஆணையைத் தொட­ரவே விரும்­பு­கின்றேன் என அடித்துக் கூறினார். இதனால் தான் கடும் முயற்சி செய்தும் மஹிந்­த­வினால் 100 ஆச­னங்­களைக் கூட இத்­தேர்­தலில் பெற­மு­டி­ய­வில்லை.

இம்­மாற்­றங்­களை நாம் அவ­தா­னிக்க வேண்டும். இம்­மாற்­றங்­களை சாதா­ர­ண­மாக எடை­போ­ட­மு­டி­யாது. சாதாரண­மாக நடை­பெறக் கூடி­ய­து­மல்ல.

இது எமக்குக் கிடைத்­தி­ருக்கும் சந்­தர்ப்­பங்கள் ஆகும். இம்­மாற்­றங்கள் நடந்­ததன் கார­ண­மா­கவே நாம் நியா­யத்தின் அடிப்­ப­டையில் நீதியின் பிர­காரம், சத்­தி­யத்தின் பின்­ன­ணியில் தீர்வைப் பெற­லா­மென்று நம்புகின்றோம்.

மஹிந்த பாரா­ளு­மன்றத் தேர்­தலில் வெற்­றி­ய­டைந்­தி­ருந்தால் எதிர்­பார்க்கும் எந்­த­வி­ட­யமும் நடை­பெ­ற­மு­டி­யாது. ஆகை­யினால் இதை நாம் கவ­னத்தில் எடுத்­துக்­கொள்ள வேண்­டு­மென்­பது நமது கட­மை­யாகும்.

என­வேதான் நாம் மிகவும் நிதா­ன­மாகச் செயற்­பட வேண்­டி­ய­கா­லக்­கட்­டத்­தி­லி­ருக்­கின்றோம். பக்­கு­வ­மாக செயற்­ப­ட­வேண்­டி­யுள்­ளது. சர்­வ­தேச சமூ­கத்தின் ஆத­ரவை தக்­க­வைக்க வேண்­டிய அவ­சியம் எமக்­குண்டு. எங்களைப் பொறுத்­த­வரை நியா­ய­மாக நடப்போம். எமது இலக்கில் மிகவும் தெளி­வாக இருக்­கின்றோம்.

நாட்டைப் பிரிக்­காமல் ஒரே நாட்­டுக்குள் சம­பி­ர­ஜை­க­ளாக வாழ விரும்­பு­கின்றோம் என்­பதே எமது எதிர்­பார்ப்­பாகும். இந்தச் செய்­தியை சர்­வ­தேச சமூ­கத்­துக்கு தொடர்ந்து சொல்ல விரும்­பு­கின்றோம். இதை சர்­வ­தேச சமூகம் ஏற்­றுக்­கொள்ள வேண்டும்.

இந்த நாட்டைச் சேர்ந்த பல தரப்பு சிங்­கள மக்கள் தமிழ் மக்­களின் நீண்­ட­காலப் பிரச்­சினை தீர்க்­கப்­ப­ட­வேண்டுமென்று இப்­பொ­ழுது விரும்­பு­கின்­றார்கள். அவர்­களின் ஆத­ரவை நாம் பெற­வேண்டும்.

வட­கி­ழக்கைப் பொறுத்­த­வரை முஸ்லிம் சமூ­கத்தின் ஆத­ர­வையும் பெற்­றுக்­கொள்­ள­வேண்டும். அவர்­களை அரவ­ணைத்துச் செல்­ல­வேண்டும்.

நாங்கள் எத்­த­கைய பிரச்­சி­னை­களை அனு­ப­விக்­கின்­றோமோ அதே பிரச்­சி­னை­களை அவர்­களும் அனு­ப­விக்­கின்­றார்கள் எதிர்­நோக்­கு­கின்­றார்கள் ஆகையால் அவர்­க­ளையும் நாம் அர­வ­ணைத்­துச்­செல்ல வேண்டும். ஒழிவு மறை­வின்றி நாம் செயற்­ப­ட­வேண்­டி­யுள்­ளது.

எம்மை நம்­பி­யி­ருக்கும் மக்­களை நாம் கைவி­ட­மு­டி­யாது. மக்கள் விரும்­பாத எந்தத் தீர்­வையும் நாம் ஏற்­றுக்­கொள்ளப் போவ­தில்லை.

பொருத்­த­மற்ற எந்தத் தீர்­வையும் நாம் ஏற்­றுக்­கொள்­ள­மு­டி­யாது. தீர்வு சம்­பந்­த­மாக தமிழ்த் தேசி­யக்­கூட்­ட­மைப்­புக்கும் அர­சாங்­கத்­துக்கும் இடையில் பேச்­சு­வார்த்தை நடை­பெ­று­மாக இருந்தால் தீர்வு பற்­றிய முடிவை எடுப்­ப­தற்­குமுன் மக்­க­ளுடன் ஆத­ர­வா­ளர்­க­ளுடன் புத்­தி­ஜீ­வி­க­ளுடன் பேசி தீர்­மா­னத்­துக்கு வருவோம்.

அதை­வி­டுத்து தன்­னிச்­சை­யாக செயற்­ப­டப்­போ­வ­தில்லை. எனவே எந்த முடி­வாக இருந்­தாலும் ஜன­நாயகரீதியா­கவே முடி­வுகள் மேற்­கொள்­ளப்­படும். எவ்­வாறு இருந்­தாலும் இன்­றைய சூழலில் யதார்த்­த­மாகச் செயற்­ப­ட­வேண்­டி­யது அவ­சி­ய­மா­கி­றது.

எதிர்க்­கட்சி தலைவர் பதவி எமக்கு கிடைத்­ததால் எல்லாம் முடிந்து விட­வு­மில்லை தீர்ந்து விட­வு­மில்லை. அண்ணன் அமிர்­த­லிங்கம் 1977 ஆம் ஆண்டு எதிர்க்­கட்சித் தலை­வ­ராகத் தெரிவு செய்­யப்­பட்டார்.

அப்­பொ­ழுது எமக்கு பாரா­ளு­மன்­றத்தில் 18 ஆச­னங்கள் இருந்­தன. ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சிக்கு எட்டு ஆச­னங்கள் மாத்­தி­ர­மே­யி­ருந்­தன.

நாம் இரண்டாம் பெரும்­பான்மைக் கட்­சி­யாக இருந்தோம். அப்­பொ­ழுது நான் பாரா­ளு­மன்­றத்­துக்கு முதல்­மு­றை­யாகச் சென்­றி­ருந்தேன் அண்ணன் அமிர்­த­லிங்­கத்­துக்­குப்­பின்னால் எனது ஆசனம் அமைந்­தி­ருந்­தது.

நாங்கள் அவ­ருக்கு பூர­ண­மான ஆத­ரவை நல்­கினோம் ஒற்­று­மை­யாக இருந்தோம். இன்று நாம் பாது­காக்­க­வேண்­டிய விடயம் எமது ஒற்­று­மை­யாகும்.

எவ்வாறு இருந்த போதிலும் இன்று நாம் பலமாக இருக்கின்றோம். ஏன் நாம் பலமாக இருக்கின்றோம் எமது மக்கள் எம்மை அதிகப்படியாக ஆதரித்து 16 உறுப்பினர்களை வெற்றிபெற வைத்ததன் நிமித்தம் மக்களின் ஒற்றுமையான ஆணையின் அடிப்படையில் நாம் பலம் பெற்று நிற்கின்றோம்.

நாம் இன்னும் அதிகப்படியான ஆசனங்களை வென்றிருக்க முடியும். திருகோணமலையில் ஐக்கிய தேசியக் கட்சியும் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியும் இணைந்து கேட்டதன் காரணமாக இரு ஆசனங்களை எம்மால் பெறமுடியாமல் போய்விட்டது.

இன்னுமொரு ஆசனம் கிடைத்திருக்கலாம். எவ்வாறு இருந்த போதிலும் இதுவொரு நல்ல வெற்றியாகும். எல்லோரும் எமது வெற்றியை மதிக்கின்றார்கள். நாட்டின் ஆட்சியாளர்கள் மதிக்கின்றார்கள்.

சிங்கள மக்கள் மதிக்கின்றார்கள். தமிழ்த் தேசியக்கூட்டமைப்பானது தமிழ் மக்களின் விசுவாசமான கட்சியென ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள் என்பதை சிங்கள மக்களும் புத்திஜீவிகளும் ஏற்றுக்கொள்கின்றார்கள்.

சர்வதேச சமூகம் ஏற்றுகொள்கிறது. இது இன்னும் பலமடையும் எதிர்க்கட்சியின் தலைமைப்பதவி கிடைத்திருப்பது எமக்கு இன்னும் பலம்சேர்க்கும்.

எனவே நாம் தெளிவாக சிந்தித்து பிரிவு பட்டு நிற்காமல் செயற்பட வேண்டுமெனக் கேட்டுக்கொள்கின்றேன் என்றார். திருகோணமலை தமிழரசுக் கட்சிக் கிளையின் ஏற்பாட்டில் நடைபெற்ற இப்பாராட்டு வைபவத்திற்கு கோ.சத்திய சீவராஜா தலைமை தாங்கினார்.

சம்பந்தனுக்கு மரியாதை அழிப்பது உங்கள் கடமை: மாவை

tkn-09-08-nt-01-ndk

அறுபது வருடங்களாக இந்த நாட்டில் பலதையும் இழந்த சிறுபான்மை சமூகம் தந்தை செல்வா அவர்களின் பாசறையில் பொறுமையுடன் போராடி இன்று ஓரளவு தலைநிமிர்ந்து நிற்கும் சிறிய ஒளிக்கீற்றாக இந்த மண்ணின் மைந்தன் ஒரு எதிர்க்கட்சி தலைவராக இன்று பரிணமிக்கின்றார்.

இலங்கை சிறுபான்மை சமூகத்தின் குரலாக வாழும் அவருக்கு நீங்கள் மரியாதை அழிப்பது மிகவும் பெருமைக்குரியது.

அது உங்களின் கடமையும் கூட ஏனன்றால் அவர் உங்கள் மண்ணின் சொந்தக்காரன் என மாவை சேனாதிராஜா எம்.பி. தெரிவித்தார்.

திருகோணமலை நகர சபை கேட்போர் கூடத்தில் இலங்கைப் பாராளுமன்றத்தின் எதிர்கட்சித் தலைவராக தெரிவான கௌரவ இரா.சம்பந்தனுக்கு பாராட்டும் கௌரவிப்பு நிகழ்வும் இடம்பெற்றது.

தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா. பாராளுமன்ற குழுக்களின் பிரதி தலைவர் செல்வம் அடைக்கலநாதன் கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் சி.தண்டாயுதபாணி மற்றும் வடக்கு கிழக்கில் இருந்து தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,

எங்கள் இனம் அளிக்கப்பட்டிருக்கின்றது. இழப்புக்களை அதிகம் கொண்டிருக்கின்றது. இவர்களின் விடிவுக்காக அகிம்சைப் போராட்டம் பின் ஆயுதப் போராட்டம் பின்னர் அரசியல் ரீதியான இராஜதந்திரப்போராட்டம் என இன்று நாம் களத்தில் நிற்கிறோம்.

இன்று எமக்கு கிடைத்த தலைவர் அவர்களைப் பற்றி இந்தியப் பிரதமர் மோடி குறிப்பிடும்போது இலங்கையின் மூத்த அரசியல்வாதி மட்டுமல்ல ஆசியாவின் மூத்த அரசியல்வாதி என்று பெருமையாக குறிப்பிட்டார்.

அந்தளவுக்கு தகுதியும் தரமும் கொண்ட தலைவரை நாம் பெற்றுள்ளோம். இந்த எதிர்கட்சி தலைமை என்பது இந்தநாட்டின் ஜனாதிபதியோ பிரதமரோ அள்ளிக்கொடுத்த ஒன்றல்ல.

இந்த நாட்டின் ஜனநாயாக மரபின் படி கிடைத்த ஒன்று. மேலும் எமது போராட்டத்தின் ஒரு அங்கீகாரமே இந்தப்பதவி என்று குறிப்பிட்டார்.

tkn-09-08-nt-01-ndkஎதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தனுக்கு திருகோணமலையில் நேற்று முன்தினம் அளிக்கப்பட்ட வரவேற்பு வைபவத்தின் போது எடுத்த படம். இரா. சம்பந்தனுக்கு பொன்னாடை போர்த்தி கிரீடம் அணிவித்து கெளரவிக்கப்படுவதையும் அருகில், குழுக்களின் பிரதித் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், மாவை சேனாதிராஜா எம்.பி ஆகியோரையும் காணலாம்.

Share.
Leave A Reply