ஜோதிடத்தில் உள்ள ஒவ்வொரு ராசிக்கும் ஓர் தனிச்சிறப்பு உண்டு என்று சொல்வார்கள். அதிலும் ஒருவரின் குணம், எதிர்காலம், அமையும் வாழ்க்கை என்று பல விஷயங்களை அவரின் ராசியை வைத்தே ஜோதிடர்கள் கூறுவார்கள்.

ஆனால் ஜோதிடம் பார்ப்பது எல்லாம் மூடநம்பிக்கை என்று பலரும் கூறுவோம். இருப்பினும் நம் ராசிக்கு நமக்கு என்ன நடக்கும் என்பதை தெரிந்து கொள்ள பலருக்கும் ஆர்வம் இருக்கும். அதை தெரிந்து கொள்ளவும் முயற்சிப்போம்.

இப்போது நாம் பார்க்கப் போவது எந்த ராசிக்காரர்கள் காதலில் அதிக ஆர்வம் கொண்டிருப்பார்கள் என்பதைப் பற்றி தான். இதை எப்படி கூற முடியும் என்று பலரும் கேட்கலாம். ஆனால் கொஞ்சம் படித்து தான் பாருங்களேன்…

07-1438928397-1-astrology-601

காதலில் அதிக ஈடுபாடுள்ள ராசிகள்
காதல் என்று வரும் போது, அதில் ரிஷபம், கடகம், கன்னி, தனுசு, மீனம் போன்ற ராசிக்காரர்களுக்கு ஈடுபாடு அதிகம் இருக்குமாம்.

07-1438928404-2-lovemeaning-600

குணங்கள்
இந்த 5 ராசிக்காரர்கள் காதலிப்பார்கள், காதலில் ஆர்வம் இருக்கும், காதலர்களை சேர்த்து வைப்பார்களாம். ஆனால் திருமணம் என்று பார்க்கும் போது, இவர்களின் சொந்த ஜாதகத்தை வைத்தே சொல்ல முடியுமாம்.

07-1438928411-3-tauruss

ரிஷப ராசிக்காரர்கள்
இதில் ரிஷப ராசிக்காரர்கள் காதலித்தவரையே திருமணம் செய்து கொள்ள வேண்டுமென்று உறுதியுடன் இருப்பார்களாம்.
07-1438928416-4-virgoo

கன்னி ராசிக்காரர்கள்
கன்னி ராசிக்காரர்களைப் பற்றி சொல்ல வேண்டுமானால், அவர்கள் எப்போதும் காதலித்துக் கொண்டே இருப்பார்களாம்.

07-1438928422-5-horoscope

சுக்கிரன் நிலை
சுக்கிரன் ஒருவரின் ஜாதகத்தில் நல்ல நிலையில் இருந்தால், அந்த ஜாதகர் காதலித்தவரையே திருமணம் செய்து கொள்வாராம். அதுவே சுக்கிரன் மோசமான நிலையில் இருந்தால், அந்த ஜாதகர் காதல் தோல்வி அல்லது திருமணத்திற்கு பின் துணையை விரைவில் பிரியக்கூடுமாம்.

07-1438928430-6-wedding13

களத்திர ஸ்தானம்
எந்த ஒரு ராசி அல்லது லக்னமாக இருந்தாலும், களத்திர ஸ்தானம் என்னும் 7, 8 ஆம் வீடுகளைக் கொண்டே எந்த மாதிரியான திருமணம் நடைபெறும் என்று கூற முடியுமாம்.
07-1438928437-7-jathagam

பெற்றோர் பார்த்து நடத்தும்
திருமணம் ஒருவரின் ஜாதகத்தில் 7, 8 ஆம் அதிபதிகள் நல்ல நிலையில் இருந்து, கெட்ட கிரகங்களின் பார்வை இல்லாமல் இருந்தால், அந்த ஜாதகருக்கு பெற்றோர் பார்த்து நடத்தும் திருமணம் நடைபெறுமாம்.
07-1438928443-8-wedding11
களஸ்திர மற்றும் பூர்வ புண்ணிய ஸ்தானம்
ஒருவரின் ஜாதகத்தில் களஸ்திர மற்றும் பூர்வ புண்ணிய ஸ்தானங்கள் மிகவும் வலிமையாக இருந்தால், அவர் அத்தை, மாமன் முறையிலேயே திருமணம் நடைபெறுமாம்.

Untitled

காமத்தின் சின்னம் தராசு !

thoolaam

 மேஷம் முதல் துலாம் வரையில் ஜாதக கட்டத்தை எண்ணிக்கொண்டு வந்தால் துலாம் ராசி ஏழாவது ராசியாகவரும் ஒரு ஜாதகத்தில் ஏழாம் இடத்தை களஸ்திர ஸ்தானம் காமஸ்தானம் என்று அழைப்பார்கள்

மனிதர்களுக்கும் சரி மற்ற உயிரினங்களுக்கும் சரி இறைவனால் கொடுக்கப்பட்ட காம உணர்வு என்பது மிகவும் முக்கியமானது குறிப்பாக காம உணர்ச்சியின் தராதரத்தை பொறுத்தே ஒரு மனிதனின் கெளவரம் அமைகிறது.

காமம் என்பது ஒரு மனிதனுக்கு அதிகமாகும் போது அவனது உடல்நலம் பாதிப்படைகிறது. மனமோ கொந்தளிப்பான நிலையை அடைகிறது.

அந்த நேரத்தில் எவ்வளவு பெரிய அறிவாளியாக இருந்தாலும் திறமைசாலியாக இருந்தாலும் வீரனாக இருந்தாலும் தடுமாற்றத்தை அடைகிறான்.

அதே போலவே ஜாதகத்தில் எழாவது இடம் அல்லது எழாமிடத்தின் அதிபதி தீயகிரகத்தின் சாரம் பெற்று இருந்தாலோ அல்லது தீய கிரகத்திற்குரிய இடமாக இருந்தாலோ மனிதன் புத்தி தடுமாறி படுகுழியில் விழுந்து விடுகிறான்.

அதே நேரம் காமம் கட்டுக்குள் இருந்தால் அதாவது எல்லை மீறாமல் நெரிபடுத்தபட்டு இருந்தால் எவ்வளவு இக்கட்டான நிலையிலும் சமாளித்து ஒருவன் முன்னுக்கு வந்துவிடுவான்.

களத்திரஸ்தானமான துலாம் ராசியின் சின்னம் துலாக்கோல் அல்லது தராசு ஆகும்.

தராசின் இரு முனைகளிலும் இரண்டு தட்டுகளால் ஆனது அதே போலவே ஆண்களின் மர்ம உறுப்பும் காட்சி தருகிறது.

இதை சூசகமாக சுட்டிக்காட்டவே தராசை எழாவது ராசியின் சின்னமாக நமது பெரியவர்கள் தீர்மானம் செய்திருக்கிறார்கள் தராசு சின்னத்தை இந்த ராசிக்கு கொடுத்ததற்கு வேறொரு காரணமும் உண்டு தராசின் இரு முனைகளும் எந்த பக்கம் கனம் அதிகமாக இருக்குமோ அந்த பக்கம் சாயக்கூடியது.

காம உணர்சிகள் அதிகமாகும் போது உடல் உறுப்புகள் சாய்ந்து விடுகிறது. அதாவது கீழ் நிலைக்கு வந்து விடுகிறது.

எந்த புறமும் சாயாமல் சரியாக இருப்பதே தராசின் இலட்சணமாகும். காம எண்ணமும் மிகுதி அடையாமலும் தகுதி குறையாமலும் சமமாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால் அது வாழ்வின் சிறந்த லட்சணமாக கருதப்படும். சுருங்க சொல்வது என்றால் காம உணர்வு சமமாக இருக்க வேண்டும்.

ஏழாவது ராசியான துலாத்தின் அதிபதி சுக்கிரன் இவரை அசுர குரு என்றும் ஜோதிட நூல்கள் சொல்கின்றன குருவாக இருப்பவர் சிஷ்யர்களுக்கு நல்வழி காட்ட வேண்டும். அவர்கள் நல்லதை செய்யும் போது பாராட்டி பக்க துணையாகவும் இருக்க வேண்டும்.

ஆனால் அசுர குருவான சுக்கிராட்சாரியார் தனது நல்ல மாணவன் மாவலி தானம் வழங்கும் போது வண்டு வடிவம் எடுத்து கெண்டியிலிருந்து நீர்வராமல் தடுத்தார் இதனால் தனது ஒற்றை கண்ணையும் இழந்தார்.

காமம் கூட அப்படி தான் சாதகத்தை மட்டும் பார்க்கும் ஒரே ஒரு கண்தான் அதற்கு உண்டு பாதகத்தை காட்டும் கண் அதற்கு இல்லை உலகத்தையே வளர்ச்சி பாதைக்கு ஜனசமூக விருத்திக்கு அழைத்து செல்லும் உயரிய உணர்வாக இருந்தாலும் சில்லறை தனமான அடிமை உணர்ச்சிக்கு மனிதனை ஆட்படுத்தி நற்செயல்களை தடுத்து விடும்.

எனவே சுக்கிரனை போல் நல்லதை தடுக்காமலும் கீழ்த்தரமான புலனுணற்சிகளுக்கு ஆட்படுத்தமலும் காமம் சமமாக இருக்க வேண்டும் என்பதை உணர்த்தவே தராசு என்ற சின்னம் துலாம் ராசிக்கு தரப்பட்டு இருக்கிறது.

ஜாதகத்தில் கேந்திர பகுதியான ஏழாமிடம் சிறப்பாக அமைந்து விட்டால் மனிதனின் இல்லறம் நல்லறமாக இருக்கும் நல்லறமான இல்லறத்தில் பிறக்கும் குழந்தைகளே சமூக வளர்ச்சிக்கு தூண்களாக இருப்பார்கள்.
இல்லறம் கெட்டுவிட்டால் குடும்பம் மட்டுமல்ல நாடும் கெட்டு விடும். அதனால் தான் தராசு போல் நீதி வழியில் நின்று காம உணர்ச்சியை பயன்படுத்த வேண்டும் என்பதே நம் முன்னோர்களின் விருப்பம்.
Share.
Leave A Reply