தென்னிலங்கை ஹினிதும்பத்துவ பகுதியில் திருமணமாகாத 27 வயதான ஆசிரியை ஒருவர் கர்ப்பக் கலைப்பு மேற்கொள்ள முற்பட்டு கடும் சுகவீனமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
அவர் சுகமடைந்த பின்னர் பொலிசார் அவரிடம் மேற்கொண்ட விசாரணைகளில் அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகின.
குறித்த கர்ப்பத்திற்கு 16 வயதுச் சிறுவனே காரணம் என ஆசிரியை தெரிவித்திருந்தார். இதன் பின்னர் சிறுவனை கைது செய்து விசாரணை செய்த பொலிசார் அவன் தெரிவித்த தகவல்களால் அதிர்ச்சியடைந்தனர்.
குறித்த சிறுவன் ஆசிரியையின் வீட்டுக்கு அருகிலேயே வசிப்பதாகவும் அவனை சிறுவயதிலிருந்தே சிறுவனுக்கு பிரக்தியோகமாக கல்வி கற்பித்து வந்ததாகவும் அவன் தெரிவித்துள்ளான்.
13 வயதில் இருந்து குறித்த ஆசிரியை தன்னை தனது அந்தரங்க தேவைகளுக்குப் பயன்படுத்தி வந்ததாகவும் அவன் தெரிவித்துள்ளான்.
சிறுவன் ஆசிரியையைக் கர்ப்பமாக்கியதை அறிந்து சிறுவனின் பெற்றோர் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளதுடன் இது தொடர்பாக சிறுவர் நன்னடத்தை அதிகாரிகளையும் பொலிசாரையும் அணுகியுள்ளதாகத் தெரியவருகின்றது.