மும்பை: ஒவ்வொரு பெற்றோரும் பார்க்க வேண்டிய கொடுமையான காட்சி இது. நாளை நம் பிள்ளைகளுக்கும் கூட இப்படி நேர்ந்து விடலாம்.
எந்த இடத்திலும், எந்தச் சூழ்நிலையிலும் குழந்தைகளை (எந்த வயதினராக இருந்தாலும் சரி) அறிமுகம் இல்லாதவர்களிடம் விட்டுச் செல்லக் கூடாது என்பதற்கு இது நல்ல பாடம். இது ஒரு வர்த்தக மாலில் நடந்த அக்கிரமச் சம்பவம்.

அங்குள்ள பொம்மைக் காரில் ஒரு சிறுவனை ஏற்றிக் கொண்டு உலா வருகிறார் அந்த மாலின் ஊழியர் ஒருவர்

தனிமையான இடத்திற்கு வந்ததும் பொம்மைக் காரை நிறுத்தி விட்டு அந்த சிறுவனை கட்டாயப்படுத்தி முத்தம் கொடுக்கிறான் இந்தக் கயவன்.
அந்தக் குழந்தை அவனிடமிருந்து விடுபட முயன்றும் முடியாமல் வலுக்கட்டாயமாக அணைத்து முத்தமிடுகிறான் இந்த வக்கிரப் புத்தி நபர். இதை யாரோ ஒருவர் மறைந்திருந்து படம் பிடித்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.

அந்தப் பக்கமாக சிலர் சத்தம் போட்டபடி வந்ததைத் தொடர்ந்து அந்த வக்கிரப் புத்தி மனிதன் அந்தச் சிறுவனை விட்டு விட்டு எழுகிறான்

Share.
Leave A Reply