பிரான்ஸ் நாட்டில் உள்ள ஏ.டி.எம் மையத்தில் பணம் எடுக்க சென்ற பெண் ஒருவரை பின் தொடர்ந்து வந்த 2 இரண்டு பெண்கள் அவரை கொடூரமாக தாக்கி பணம் பறிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரான்ஸ் தலைநகரான பாரீஸ் நகரில் உள்ள ஏ.டிஎம் மையம் ஒன்றில் நடுத்தர வயதுள்ள பெண் ஒருவர் கடந்த புதன்கிழமை பணம் எடுப்பதற்காக சென்றுள்ளார்.

இந்த பெண்ணை தூரத்தில் இருந்து இரண்டு இளம்பெண்கள் கண்காணித்துள்ளனர்.

ஏ.டி.எம் எந்திரத்தில் தனது அட்டையை நுழைத்து பணம் எடுக்கும் நேரத்தில் அந்த இரண்டு பெண்களும் அவர் பின்னால் வந்து அமைதியாக நின்றுள்ளனர்.

இந்த நேரத்தில் பணம் எந்திரத்தில் இருந்து வெளியே வந்த அடுத்த கணம், பின்னால் நின்று இருந்த இரண்டு பெண்களில் ஒருவர் நடுத்தர வயதுள்ள பெண் மீது பாய்ந்து அவரை கீழே தள்ள முயற்சித்துள்ளார்.

இரண்டு பெண்களில் மற்றொருவர் எந்திரத்திலிருந்து வந்த பணத்தை அபகரிக்க முயன்றுள்ளார்.

திடீர் தாக்குதலை எதிர்பாராத நிலைகுலைந்த அந்த பெண்மணி, இரண்டு பேரையும் சமாளித்து தனது பணத்தை அபகரிக்க முடியாமல் நீண்ட நேரம் போராடியுள்ளார்.

எனினும், இருவரின் பலத்திற்கு ஈடுக்கொடுக்க முடியாத அந்த பெண், தனக்கு உதவ யாராவது வருவார்களா என சாலையை சுற்றி அச்சத்துடன் பார்க்கிறார்.

ஆனால், நடைப்பாதையில் சென்ற நபர்கள் இந்த கொடூர தாக்குதலை வேடிக்கை பார்த்தனரே தவிர உதவிக்கு யாரும் இல்லை.

பெண்ணிடமிருந்து பணம் பறித்த இருவரும் அங்கிருந்து கூலாக நடந்து சென்றுவிடுகின்றனர்.

ஆனால், இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் பொலிசாரின் உதவியை கூட நாடவில்லை.

ஏனெனில், இதே பகுதியில் பல வழிப்பறி சம்பவங்கள் தினந்தோறும் அரங்கேறி வருகிறது.

போக்குவரத்து கமெராவில் பதிவான இந்த தாக்குதல் காட்சிகள் குறித்து பேசிய பாரீஸ் நகர பொலிஸ் ஆணையரான டாமியன் வாலோட், திருட்டு சம்பவங்கள் ஒவ்வொரு இடங்களிலும் தினந்தோறும் நடந்து வருகிறது.

குறிப்பாக, ரோமானிய நாட்டை சேர்ந்த மரியானா காண்டாக்(25) சந்தரா பசியு(35) என்ற இரண்டு பெண்கள் திருட்டு ராணிகளாக வலம் வந்துக்கொண்டு இருக்கின்றனர்.

பாரீஸில் உள்ள முக்கிய இடங்களில் எதிர்பாராமல் தாக்குதல் நடத்தி பணம் பறிப்பதே இந்த கும்பலின் அன்றாட செயலாக இருக்கிறது.

எனினும், வழிப்பறி குற்றங்கள் தொடர்பாக சந்தேகத்திற்குரிய நபர்களை கைது செய்துள்ளதாகவும், தற்போது அதிகரித்துள்ள வழிப்பறி சம்பவங்களை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணையர் தெரிவித்துள்ளார்.

2C1B70B900000578-0-image-a-15_14419716127792C1B70C100000578-0-image-a-16_14419716196002C1B70C500000578-0-image-a-17_14419716286732C1B70CB00000578-0-image-a-19_14419719098612C1B6F8300000578-0-image-a-13_1441971590995lady_theif_004lady_theif_005

Share.
Leave A Reply