குடும்ப தலைவர், கணவர்,தந்தை, எம்முடன் இல்லாத காரணத்தால் தாம் நாளாந்தம் செய்யும் அன்டறாட வேலைகளை கூட செய்யமுடியாமல் பெரும் சிரமப்படுவதாக நீண்ட காலமாக எவ்வித வழக்குகளும் இன்றி சிறையில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளின் உறவினர்கள் கண்ணீருடன் தெரிவித்துள்ளனர்.
சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு சிறையில் வாடும் தமிழ் அரசிய் கைதிகளை விடுதலை செய்யுமாறு கோரி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இடம்பெற்றது
இதில் கலந்து கொண்டிருந்த சிறைக்கைதிகளின் உறவுகள் தமது நிலமைகளைச்சொல்லி அழுத காட்சி அங்கிருந்த பலரை சோகத்தில் ஆழ்த்தியது.
இதில் கலந்து கொண்ட சிறைக் கைதியொருவரின் மனைவி கருத்து தெரிவிக்கையில்,
2007 ம் ஆண்டு எனது கணவர் வீட்டில் இருந்த சமயம் வெள்ளை வானில் வந்த சிலரால் கூட்டிச்செல்லப்பட்டார்.
இன்றிலிருந்து நான் அவரை தேடி அலைந்து வருகின்றேன். எந்தவிதமான பதிலும் இதுவரை எனக்கு கிடைக்கவில்லை.
கணவர் இல்லாமல் பிள்ளைகளை வளர்க்கவோ வேலைகளுக்கு செல்லவோ முடியாமல் உள்ளது, கணவர் இல்லாமல் பெண்களாகிய நாங்கள் வீதிகளில் நடமாட கூட முடியாமல் உள்ளது, வாழ்வாதாரத்தில் கூட நாங்கள் மிகவும் பின்தங்கியுள்ளோம்.
எமது நிலை தொடர்பில் எவரும் எந்த உறுதிப்பாடும் இதுவரை தெரிவிக்கவில்லை, தயவு செய்து எங்கள் நிலமைகளை மாற்ற உதவி செய்யுங்கள் என்று கண்ணீருடன் தெரிவித்தார்.
காணொளியை முழுமையாக பார்க்கவும்