நேற்று யாழ் அச்சுவேலியில் இடம்பெற்ற விபத்தி ஒன்பது மாத குழந்தை உட்பட 34 பேர் காயமடைந்து யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்கென அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் அதிஸ்ட வசமாக தப்பிய 9 மாத குழந்தை சிறு காயங்களுடன் தப்பியது பலரையும் வியப்பில் அழ்த்தியள்ளது.
காரணம் மிகவும் ஆபத்தான விபத்தில் பலாின் நிலை கவலைக்கிடமான நிலையில் இச் சிறுமி தப்பியமை பலரையும் திகில் அடையச் செய்துள்ளது.
யாழ்ப்பாணம், அச்சுவேலி விபத்தில் ஒருவர் பலி: 23 பேர் காயம் -(படங்கள்)
12-09-2015
இன்று காலை 10.30 மணியளவில் மினி வான் – லொறி மோதி கொடூர விபத்துக்குள்ளாகி உள்ளது. இதில் லொறிச் சாரதி தலையில் படுகாயங்களுக்கு உள்ளாகி மரணமடைந்தார். இருவருக்கு கால்கள் துண்டாடப்பட்டுள்ளன.
பருத்தித்துறையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற 750 ஆம் இலக்க மினிவானும், யாழ்ப்பாணத்தில் இருந்து அச்சுவேலி நோக்கிச் சென்ற லொறியுமே நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகி உள்ளது.
சம்பவத்தில் காயமடைந்த 21 பேர் யாழ்ப்பாணம் பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
பொலிஸார் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.