தமிழ் மக்­களின் நீண்ட காலப் பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்­வு­காணும் நோக்­கு­ட­னேயே எமது அர­சியல் பயணம் ஆரம்பித்­தது.

அத­னைக் ­க­ருத்தில்கொண்டு நாம் மிகுந்த அர்ப்­ப­ணிப்­புடன் எமது சேவையை முன்­னெடுத்து வரு­கின்றோம். எமக்­கி­டையில் எந்­த­வி­த­மான பிரி­வி­னை­களும் கிடை­யாது. சில கருத்து முரண்­பா­டுகள் அவ்­வப்­போது ஏற்படலாம்.

வெறு­மனே அதை பெரி­து­ப­டுத்­து­வதில் ஒரு சில ஆங்­கில, சிங்­கள ஊட­கங்கள், முனைப்­பா­க­வுள்­ளன. நாம் எமது பணி­களை ஒற்­று­மை­யுடனேயே முன்னெ­டுக்கின்றோம் என்று வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரி­வித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புக்குள் முரண்­­பாடுகள், கருத்து மோதல்கள் அதி­க­ரித்து வரு­வது தமிழ் மக்கள் மத்தியில் மிகுந்த விச­னத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளமை தொடர்பில் வட­மா­காண முத­ல­மைச்சர் விக்கினேஸ்வரனிடம் வின­விய போதே அவர் மேற்­கண்­ட­வாறு கூறினார்.

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு ஓர் ஜன­நா­யகக் கட்சி என்ற வகையில் கருத்து மோதல்கள் இடம்­பெ­று­வது சர்வசா­தா­ரண விடயம்.

அதனை ஏன் பெரி­து­ப­டுத்த வேண்டும் என்று வினா எழுப்­பிய முத­ல­மைச்சர் இவை அனைத்­தையும் நாம் பெரி­து­ப­டுத்­து­வதில் எவ்­வித அர்த்­தமும் இல்லை.

எமது நோக்கம் நன்­றாக அமைய வேண்டும் அது­மாத்­தி­ர­மின்றி எவரும் தனது கருத்தைக் கூற பரி­பூ­ர­ண­மான உரி­மை­யு­டை­ய­வர்­க­ளாவர்.

அந்த வகையில் நாம் வெறு­மனே உணர்ச்சி வசப்­பட வேண்­டிய அவ­சி­ய­மில்லை. என்னைப் பொறுத்­த­மட்டில் தமிழ் மக்­க­ளுக்கு நான் மிகவும் விசு­வா­ச­மா­கவும் இத­ய­சுத்­தி­யு­டனும் தொடர்ந்து செயற்­ப­டுவேன் என்றார்.

யாழ்ப்­பா­ணத்­தி­லுள்ள முத­ல­மைச்­சரின் இல்­லத்தில் கடந்த புதன்­கி­ழமை மாலை இடம்­பெற்ற சந்­திப்பில் மிகவும் மனம் திறந்து உரை­யாற்­றிய அவர், நாம் அனை­வரும் தமிழ் மக்­களின் துயர்­து­டைக்கும் பணிக்­காக புறப்பட்­ட­வர்கள், அந்த வகையில் அனை­வ­ருமே எமது பணி­களை மிகவும் நேர்த்­தி­யாக மேற்­கொண்டு வருகின்றோம் என்றே கரு­து­கின்றேன்.

பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் தமி­ழ­ர­சுக்­கட்­சியின் தலை­வ­ரு­மான மாவை சேனா­தி­ராஜா அவர்­களும் காசியானந்தன் அவர்­களும்  மட்­டக்­க­ளப்பு சிறையிலிருந்தபோது, நான்   நீதி­ப­தி­யா­க­  இ­ருந்­த­போது 1979 ஆம் ஆண்டில் என்னால் விடுவிக்­கப்­பட்­டார்கள்.

நீதி­யின்பால் சார்ந்த அவர்­களை பல கால சிறை வாசத்தின் பின்னர் விடு­வித்தேன். அதனால் என்னை உடனேயே மட்­டக்­க­ளப்­பி­லி­ருந்து தண்­டனை தரும் விதத்தில் மாற்­றி­விட்­டார்கள்.

அன்று தொடக்கம் எனக்கு மாவையைத் தெரியும். தமிழ் மக்­களின் ஈடேற்­றத்­துக்­காக சளைக்­காது குரல் கொடுத்து வரும் ஒருவர் அவர்.

அவர் மீது நான் மிகுந்த மரி­யாதை வைத்­துள்ளேன்.  அவரும் என் மீது மிகுந்த அன்பு கொண்­டவர். எமக்­கி­டையே எந்­த­வி­த­மான பிரச்­சி­னை­களும் கிடை­யாது.

சில­வே­ளை­களில் ஒரு சில வார்த்­தைகள் சொற்கள் தவ­றான கருத்தை கொடுக்­கலாம். சற்று நிதா­ன­மாக சிந்தித்துப் பார்த்தால் அதில் தவ­றில்லை என்­பது புல­னாகும்.

அது­போன்­றது தான் இதுவும். எமக்­கி­டையில் எந்தப்­பி­ரச்­சி­னையும் இல்லை என்றார்.

தென்­னி­லங்கைக் கட்­சிகள் கூட்­ட­மைப்­புக்குள் பிளவை ஏற்­ப­டுத்தி அதில் குளிர்­காய முனை­கின்­றன. இவ்வாறான சூழ்­நி­லையில் அதற்கு வாய்ப்­ப­ளிப்­ப­தாக கட்சித் தலை­வர்­களின் நட­வ­டிக்­கைகள் அமையக் கூடாதல்­லவா? என்று எழுப்­பிய வினா­வுக்கு முத­ல­மைச்சர் தொடர்ந்து கூறு­கையில்,

தமிழர் பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு கிட்­டு­வ­தற்­கான தரு­ணங்கள் நெருங்கி வந்த ஒவ்­வொரு சந்­தர்ப்­பத்­திலும் வெண்ணைய் திரண்டு வந்­த­போது தாழி உடைந்த கதை­யான நிலை­மையே நில­வி­வந்­தது.

எனவே, இனி­மேலும் நாம் அவ்­வாறு செயற்­ப­டக்­கூ­டாது. எமது ஒற்­று­மையை நாம் கட்டி வளர்க்க வேண்டும். சிறு­சிறு பிரச்­சி­னை­க­ளைக்­கூட பூதா­க­ர­மாக்கும் நோக்­கு­ட­னேயே  தென்­னி­லங்கை கட்­சி­களின் செயற்­பா­டுகள் அமைந்­துள்­ளன.

“அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு”என்ற ரீதியில் எமது ஒரு­மித்த செயல்பாடுகள் அமை­வது அவ­சியம்.

எதிர்­கட்­சித்­த­லை­வ­ராக இரா.சம்­பந்தன் அவர்கள் தெரிவு செய்­யப்­பட்­ட­மைக்கு நான் மிகுந்த மகிழ்ச்சி கொண்டேன்.

ஆளு­மை­மிக்க தலைவர் அவர். அந்­த­வ­கையில்,அவர் தனது பொறுப்பை உணர்ந்து செயற்­ப­டுவார் என்­பதில் எந்த­வி­த­மான சந்­தே­கமும் எனக்கு இல்லை.

காலத்தை சரி­யான வகையில் பயன்­ப­டுத்திக் கொள்ள வேண்­டி­யது மிகவும் அவ­சியம். விரைவில் நாம் ஒன்றுகூடி பேசி தமிழ் மக்­களின் நெருக்­க­டி­களைப் போக்க அடுத்த கட்ட நகர்­வுகள் என்ன என்­பது தொடர்பில் தீர்­மா­னிப்போம்.

மக்கள் எம்­மீது மிகுந்த நம்­பிக்­கையை வைத்­துள்­ளார்கள். அந்த நம்­பிக்கை வீண்­போ­காத வகையில் செயற்படவேண்­டி­யது எமது தலை­யாயக் கடமை. நாம் எமது மக்­களின் பிரச்­சி­னைகள் நெருக்­க­டி­களைப் போக்க ஒன்­றி­ணைந்து செயற்­ப­டுவோம்.

எமது ஒன்­றி­ணைந்த சக்­தியை முறி­ய­டிக்கும் செயற்­பா­டு­களில் எவரும் ஈடு­ப­டு­வார்­க­ளே­யானால் நிச்­சயம் அவர்­க­ளுக்கு தோல்­வியே கிட்டும்.

எமது மக்கள் யுத்­த­வ­டுக்­களைத் தாங்­கி­ய­வர்­க­ளா­கவும் அதி­லி­ருந்தும் மீட்சி பெற இய­லா­த­வர்­க­ளா­கவும் காணப்ப­டு­கின்­றனர்.

இன்று இளை­ஞர்­களின் பிரச்­சினை,கண­வன்­மாரை இழந்த பெண்­களின் பிரச்­சினை, வயோ­தி­பர்­களின் பிரச்சினை, முன்னாள் போரா­ளி­களின் பிரச்­சினை எனப் பல்­வேறு பிரச்­சி­னைகள் தீர்க்­கப்­ப­டாமல் உள்ளன.அவற்­றுக்கு நாம் தீர்வு காண­வேண்டும்.

தற்­போது கிடைத்­துள்ள சந்­தர்ப்­பத்தை நாம் சாத­க­மாகக் கையாள்­வது அவ­சியம். யுத்­தக்­குற்­றச்­சாட்­டுக்கள் தொடர்பில் சர்­வ­தேச விசா­ரணை விவ­காரம் முனைப்புப் பெற்­றுள்­ளது.

அது தொடர்பில் நாம் துரி­த­மா­கவும் வினைத்­தி­ற­னு­டனும் செயற்­ப­ட­வேண்டும். இவ்­வா­றான பல்வேறு கட­மைகள் எம்­முன்னே விரிந்து கிடக்கும் நிலையில், நாம் சிறு­சிறு விட­யங்­களில் முரண்­ப­டு­வதும் சச்­ச­ர­வு­களில் ஈடு­ப­டு­வதும் வேண்­டாத காரியம்.

இதனை ஒரு­சில ஊட­கங்கள் பெரி­து­ப­டுத்தி அதில் குளிர்­காய முனை­கின்­றன. எனவே மக்கள் அது தொடர்பில் குழப்­ப­ம­டையக் கூடாது என்று விளக்­கினார்.

போர்க்­குற்­றங்கள் தொடர்பில் சர்­வ­தேச விசா­ர­ணையை வலி­யு­றுத்தி வட­மா­காண சபை தீவிர முயற்­சியில் ஈடு­ப­டு­வ­தாகக் கூறப்­ப­டு­கின்­றதே என்று வின­விய போது, அதற்கு சிரித்­துக்­கொண்டே பதி­ல­ளித்த முதலமைச்சர் விக்­னேஸ்­வரன், இப்­போ­தெல்லாம் எமக்கு வேலைப்­பளு அதிகம் என்று கூறி முடித்­து­விட்டார்.

வட­ப­குதி அபி­வி­ருத்தி தொடர்பில் ஏதேனும் நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட்­டுள்­ள­னவா என்று வின­விய போது,

நாம் பல்­வேறு முத­லீட்­டா­ளர்­க­ளுடன் விரி­வான பேச்­சுக்­களை முன்­னெ­டுத்து வரு­கிறோம். எமது வளங்கள் எந்த வகை­யிலும் சுரண்­டப்­ப­டாமல் மக்­களின் வாழ்­வா­தா­ரத்தை கட்­டிக்­காக்கும் வகையில் அபி­வி­ருத்­தித்­திட்­டங்கள் அமை­வது மிகவும் இன்­றி­ய­மை­யா­த­தாகும். அதற்­கான நட­வ­டிக்­கை­களை முழு­வீச்சில் முன்­னெ­டுத்து வரு­கின்றோம்.

வட­ப­குதி மக்­களின் கல்வி, கலா­சாரம் அனைத்­தையும் கட்­டிக்­காப்­பதில் நாம் திட­சங்­கற்ப்பம் பூண்­டுள்ளோம் என்றும் தெரி­வித்தார்.

தமிழ் மக்­களின் நீண்ட எதிர்­பார்ப்­பு­க­ளுக்கு தீர்வு பிறக்கும் வகையில் வட­மா­காண சபையின் நட­வ­டிக்­கைகள் அமைய வேண்டும் என்­பதே தமிழ் மக்கள் அனை­வ­ரதும் எதிர்­பார்ப்­பாகும். அது தொடர்பில் உங்கள் கருத்து எவ்­வாறு உள்­ளது என்று வின­விய போது,

நாம் மக்­களால் மக்­க­ளுக்­காகத் தெரிவு செய்­யப்­பட்­ட­வர்கள். எம்­மி­டையே எந்த வித­மான போட்­டியும், பொறா­மையும் இருக்­கக்­கூ­டாது; அவ்­வாறு தான் நாம் இன்று வரை அனை­வரும் செயற்­பட்டு வரு­கின்றோம்.

அதை எதிர்­கா­லத்­திலும் கடை­பி­டிப்போம்.மக்கள் எம்­மீது கொண்ட அதீத நம்­பிக்­கையே பல்­வேறு நெருக்கடிகளுக்கு மத்­தி­யிலும் எம்மை ஆத­ரித்து முன்­னி­லைப்­ப­டுத்தி வந்­துள்­ளன.

எனவே, தமிழர் பிரச்­சினை சாண் ஏற முழம் சறுக்கும் நிலைக்கு செல்­லா­தி­ருப்­பதை உறுதி செய்­வது எமது தார்மிகக் கடமை. அதனை நாம் செவ்­வனே செய்வோம்.தமி­ழர்­க­ளுக்கு விடிவு பிறக்கும் வகையில் நாம் செயற்படுவோம்.

இன்றைய குழப்பகரமான சூழலில் தமிழ் மக்களுக்கு நீங்கள் கூற விரும்புவது என்ன என்ற கேள்விக்கு முதலமைச்சர் பதிலளிக்கையில்

தமிழ் மக்கள் மனம் தளரக்கூடாது. சிறுவிடயங்களை எண்ணி கவலை கொள்ளத்தேவையில்லை. நாம் அனைவரும் மிகுந்த விட்டுக்கொடுப்புடனும் புரிந்துணர்வுடனும் தொடர்ந்து செயற்படுவோம்.

வெற்றி கிடைக்கும் என்பதில் எவரும் கிஞ்சித்தும் சந்தேகம் கொள்ளத்தேவையில்லை. அதேபோன்று ஊடகங்களும் தங்கள் தார்மிகப் பொறுப்பை உணர்ந்து செயற்படுவது அவசியமாகும்.

இன்று கிட்டியுள்ள சந்தர்ப்பத்தை நாம் சரியாகப் பயன்படுத்தி வெற்றி கொள்ள சாத்தியமான அனைத்தையும் மேற்கொள்வோம். அதேவேளை அனைவரது ஒத்துழைப்பும் எமக்கு இன்றியமையாததாகும்.

இவ்வாறு வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் விளக்கினார்

முத­ல­மைச்சர் எம்­முடன் இணக்­க­மாகச் செயற்­ப­டு­கிறார்: மாவை எம்.பி. கூறு­கிறார்

mavaia

வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி.விக் னேஸ்­வ­ரனை பத­வி­யி­லி­ருந்து நீக்­கு­வ­தற்கு கூட்­ட­மைப்­பினர் எந்­த­வித முயற்­சி­யிலும் ஈடு­ப­ட­வில்லை.

நாம் சுமு­க­மான உற­வையே பேணி வரு­கின்றோம். முத­ல­ மைச்சர் விக்னேஸ்வ­ர­னுக்கும் கூட்­டமைப் பின் தலைவர் இரா.சம்­பந்­த­னுக்­கு­மி­டையில் விரைவில் பேச்­சுக்கள் இடம்­பெ­ற­வுள்­ளன.

தமிழ் மக்­களைக் குழப்­பி­ய­டிக்கும் உள்­நோக்­கத்­து­ட­னேயே இவ்­வா­றான தக­வல்கள் கசிய விடப்­ப­டு­கின்­றன என்று தமி­ழ­ர­சுக்­கட்­சியின் தலைவர் மாவை சேனா­தி­ராஜா நேற்­றுக்­காலை வீர­கே­சரி வார வெளி­யீட்­டுக்குத் தெரி­வித்தார்.

தமி­ழ­ர­சுக்­கட்­சியின் செயற்­குழு கூட்டம் வெள்ளியன்று கொழும்பில் இடம்­பெற்ற சமயம் வட­மா­காண முதலமைச்சர் தேர்தல் காலத்தில் கூறிய கருத்­துக்கள் தொடர்பில் ஏதேனும் ஆரா­யப்­பட்­டதா? தமி­ழ­ர­சுக்­கட்சி அவரை

பத­வி­யி­லி­ருந்து விலக்க முயற்­சிப்­ப­தாக தக­வல்கள் கூறு­கின்­றன. இது தொடர்பில் உங்கள் கருத்­தென்ன என்று வினா­விய போதே அவர் இவ்­வாறு கூறினார்.

முத­ல­மைச்சர் எம்­மோடு மிகவும் இணக்­க­மாகச் செயற்­ப­டு­கின்றார். அவருக்கும் எமக்கும் எவ்வித கருத்து மோதல்களும் கிடையாது நாம் விரைவில் சந்தித்துப் பேசவுள்ளோம் என்றும் அவர் கூறினார்.

Share.
Leave A Reply