சென்னை: விஜய் டிவியில் தொகுப்பாளினியாக பணியாற்றி வரும் நடிகை ரம்யா தனது கணவரைப் பிரிந்தது உண்மைதான் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்.
நானும் எனது கணவரும் முறைப்படி பிரிந்து விட்டோம் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்து, தன்னைப் பற்றிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் ரம்யா.
“திருமணமான ஒரே ஆண்டில் விவாகரத்து கேட்கும் ரம்யா” என்று ஒரு செய்தியை சில மாதங்களுக்கு முன்பு நாம் கொடுத்திருந்தோம். தற்போது இந்த செய்தியை உண்மையாக்கி இருக்கிறார் ரம்யா.
விவாகரத்து குறித்து ரம்யா கூறியவற்றை இங்கே காணலாம்.
ரம்யா – அபராஜித் டிவி தொகுப்பாளினியும் நடிகையுமான ரம்யாவுக்கும் – அபராஜீத் என்பவருக்கும் கடந்த ஆண்டு(2014) பிப்ரவரி மாதம் திருமணம் நடந்தது.
இவரது திருமணத்துக்கும் சரி, திருமண வரவேற்புக்கும் சரி, மொத்த கோலிவுட்டே திரண்டு வந்து வாழ்த்தியது. ரஜினி, கமல் போன்ற பெரிய நடிகர்கள் தவிர மற்ற இளவட்ட நடிகர்கள் அத்தனை பேரும் திரண்டுவந்து ரம்யாவை வாழ்த்திச் சென்றனர். அந்த அளவு திரையுலகத் தொடர்புகள் மிகுந்தவர் ரம்யா.
ஓ காதல் கண்மணி
திருமணத்திற்குப் பின்பும் தனது நடிப்பைத் தொடர்ந்து ரம்யாவிற்கு மணிரத்னம் இயக்கிய ஓ காதல் கண்மணி திரைப்படத்தில் ஒரு சிறிய வேடம் கிடைத்தது. துல்கரின் தோழியாக அந்தப் படத்தில் நடித்திருந்த ரம்யா கொடுத்த பாத்திரத்தை சிறப்பாக செய்திருந்தார். இதனால் தற்போது அவருக்கு மேலும் பட வாய்ப்புகள் வந்து குவிகின்றது என்று கூறுகின்றனர்.
இருவரின் சம்மதத்துடன்
“என்னைப் பற்றிய அனைத்து வதந்திகளுக்கும் நானே முற்றுப்புள்ளி வைத்து விடுகிறேன், எனது திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்து விட்டது. இருவரின் பரஸ்பர சம்மதத்துடன் நாங்கள் இருவரும் பிரிந்து விட்டோம்” என்று கூறியிருக்கிறார்.
நான் உங்களை விரும்பி
எனது நண்பர்கள் நலம் விரும்பிகள், ஊடக நண்பர்கள் அனைவரிடம் நான் ஒன்றைக் கேட்டுக் கொள்கிறேன் இது எனது தனிப்பட்ட விஷயம். மேலும் இது இரண்டு குடும்பங்களுக்கு இடையேயான பிரச்சினை. எனவே இந்த விசயத்தைப் பற்றி யாரும் என்னிடம் கேட்க வேண்டாம் என்று தனது நண்பர்களுக்கு கோரிக்கை விடுத்திருக்கிறார் ரம்யா.
அனைவருக்கும் நன்றி
எனது முழுக் கவனமும் தற்போது எனது வேலையின் மீதுதான் உள்ளது, இந்த விஷயத்தில் எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியிருக்கிறார் ரம்யா. ரம்யாவின் இந்த முடிவிற்கு அவரது ரசிகர்கள் பலரும் ஆதரவளித்திருப்பது குறிப்பிடத்தக்கது… Show Thumbnail