நியூயார்க் நகரின் Bronx தெருவில் அப்பாவி மனிதர் ஒருவரை Pitbull வகை நாய்கள் 2 காட்டுமிராண்டித்தனமாக தாக்கிய சம்பவம் பார்வையாளர்களை அதிர்ச்சியடைய வைத்தது.
வெறி நாய்களின் தாக்குதலுக்கு ஆளான அந்த நபர் முதலில் அவற்றை துரத்த பெருமுயற்சி எடுத்துள்ளார், ஆனால் அந்த நாய்கள் விடாமல் துரத்தி கடித்து குதறியுள்ளது.
நாய்களின் உரிமையாளர் Cynthia Oliver என்பவருடன் அவரது குடியிருப்பிற்கு முன்பு வைத்து இந்த மனிதர் கடுமையாக வாக்குவாதம் செய்திருந்ததாக பொலிஸ் தரப்பு தகவல் தெரிவிக்கின்றன.
வாக்குவாதம் எல்லை மீறவே Cynthia தமது 2 நாய்களை அந்த மனிதருக்கு எதிராக கட்டவிழ்த்து விட்டிருக்கிறார்.
தெருவில் நாய்களால் காட்டுமிராண்டித்தனமாக ஒருவர் தாக்கப்படுவதை கண்டிருந்த பார்வையாளர்கள் அவரை காப்பாற்ற எத்தனிப்பதும்,
அந்த நாய்கள் விடாமல் துரத்தி வந்து கடித்து குதறுவதும் பார்வையாளர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.