சென்னை: தொடர்ந்து 3 ஹாட்ரிக் வெற்றிப் படங்களை கொடுத்த நடிகை சுருதிஹாசன் தற்போது 100 கோடி படங்களின் நாயகி என்ற பெருமையைப் பெற்றிருக்கிறார்.
அக்சய் குமாருடன் இணைந்து நடித்த கப்பர் இஸ் பேக், ஜான் ஆப்ரஹாமுடன் இணைந்து நடித்த வெல்கம் பேக் மற்றும் மகேஷ்பாபுவுடன் இணைந்து நடித்த ஸ்ரீமந்துடு 3 படங்களுமே 100 கோடி வசூலைக் குவித்திருக்கின்றன.
இதன் மூலம் ஒரே வருடத்தில் மூன்று 100 கோடிப் படங்களில் நடித்த நாயகி என்ற பெருமையை தட்டிச் சென்றிருக்கிறார் சுருதிஹாசன்
சுருதிஹாசன்
இந்த வருடம் நடிகை சுருதிஹாசனுக்கு மிகவும் வெற்றிகரமான ஆண்டாக அமைந்திருக்கிறது. சமீபத்தில் ஒரு விலையுயர்ந்த காரை வாங்கிய நடிகை சுருதிஹாசன் தொடர்ந்து வெற்றிப் படங்களில் நடித்து ஹிட் நாயகி என்ற அந்தஸ்தை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார்.
100 கோடிகளின் நாயகி
இந்த வருடத்தில் மட்டும் மூன்று 100 கோடிப்படங்களில் நடித்திருக்கிறார் சுருதி. அக்சய் குமாருடன் இணைந்து நடித்த கப்பர் இஸ் பேக், ஜான் ஆப்ரஹாமுடன் இணைந்து நடித்த வெல்கம் பேக் மற்றும் மகேஷ்பாபுவுடன் இணைந்து நடித்த ஸ்ரீமந்துடு 3 படங்களுமே 100 கோடி வசூலைக் குவித்திருக்கின்றன.
முன்னணி நடிகர்களுடன்
இதைத் தவிர தமிழில் விஜயுடன் புலி மற்றும் அஜீத்துடன் தல 56 படத்தில் நடித்து வருகிறார். விஜயின் புலி வரும் காந்தி ஜெயந்தியன்று வெளியாகவிருக்கிறது. அஜீத்துடன் நடித்திருக்கும் தல 56 திரைப்படம் தீபாவளி வெளியீடாக வரவிருக்கிறது.
இதைத் தவிர தமிழில் விஜயுடன் புலி மற்றும் அஜீத்துடன் தல 56 படத்தில் நடித்து வருகிறார். விஜயின் புலி வரும் காந்தி ஜெயந்தியன்று வெளியாகவிருக்கிறது. அஜீத்துடன் நடித்திருக்கும் தல 56 திரைப்படம் தீபாவளி வெளியீடாக வரவிருக்கிறது.
நடிகை சுருதி ஹாசன் (அழகிய படங்கள் இணைப்பு )