பிரபாகரன் தான் தோற்பேன் எனத் தெரிந்தும் பல பிள்ளைகளை பலிகொடுத்தவர். போராளிகளையும், புலம்பெயர் மக்களையும் எமது மகடகள் தூக்கி எறிந்துவிட்டார்கள் என தெரித்துள்ளார் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக் கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராஜா.

புலம்பெயர் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே இவ்வாறு தெரிவித்தார். அதன் முழு விபரம் வருமாறு,

கேள்வி :– வணக்கம் ஐயா

மாவை :- வணக்கம்

கேள்வி :- உங்களிட்டை சில விசயங்கள் கதைக்கோணும் ஐயா. அதில தமிழரசுக்கட்சி பதிவு செய்தது பற்றியும் கதைக்கோணும் அதுக்கு முன்னம் சர்வதேச விசாரணை பற்றி கேட்டுட்டு கேக்கிறனே ஐயா ஏன் ஐயா தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உள்ளகவிசாரணையை வலியுறுத்திக் கொண்டேயிருக்குது எண்டு தெரிஞ்சுகொள்ளலாமோ

மாவை :- தம்பி முதல்லை ஒன்றை விளங்கிக்கொள்ளும். சர்வதேசவிசாரணை எண்டுறது வெற்றியடையப்போவதில்லை. எனவே தமிழரசுக்கட்சி வெற்றிடையாத எதையுமே செய்யவிரும்பாது.

இதனாலேயே நாம் சர்வதேச விசாரணை என்பதை கைவிட்டு கைபிரிட்ச் என்று சொல்லப்படுகின்ற சர்வதேச கண்காணிப்புடனான உள்ளக விசாரணையை ஆதரவளிக்க முன்வந்தோம்.

இதுவே சரியான முடிவு என்று நினைக்கின்றோம் அதோடை சர்வதேச விசாரணையில் வெற்றிபெற்ற நாடுகளையோ தண்டணை பெற்றவர்களையோ சொல்லமுடியாது.

கேள்வி :- அப்போ அய்யா கொசேவாவில் மிலோச்சவிக்கு தண்டணை வழங்கியவர்கள் எந்த விசாரணையில் ? அதோடை உள்ளக விசாரணை நடைபெற்ற நாடுகளை இதுவரை காடட முடியுமா?

மாவை :- தம்பி கொசோவா ஐரோப்பாவில் உள்ளது ஆகவே அதன் புவியியல் நலன் வேறு ஆகவே அதைவிட்டுவிடுவம் நாங்கள் தென்னாசியாவில இருக்கிறம் அது இந்திய நலனையும் சார்ந்ததாகவே உள்ளது.

எனவே இந்தியாவைமீறி நாம் சர்வதேச விசாரணை சாத்தியமாக்குவது என்பது நடக்காது எனவே இலங்கை விடயத்தில் இந்தியவை மீறி அமெரிக்கா தலையிடாது.

இருந்தபோதும் தமிழ்ர்கள் விடயத்தில் இந்தமுறை விருப்புடன் அமெரிக்கா செயற்படவிரும்புது. அதோடை புலிகள் இல்லாத காலத்தில் தமிழர்களுக்கு தீர்வை பெற்றுத்தர அமெரிக்கா முயற்சிக்கிறது. இது சீன தலையீட்டையும் அமெரிக்காக்கு நீக்க உதவும். அதை ஏன் உங்கை இருந்து கொண்டு குழப்புறியள் எண்டு தெரியேல்லை.

கேள்வி :- ஐயா உள்ளக விசாரணை மூலம் போர்க்குற்றம் செய்தவர்களுக்கு தண்டணை கிடைசிடும் எண்டு நினைக்கிறிங்களா? ஏனெண்டா இதுவரை நடைபெற்ற இனப்படுகொலைக்கு ஒரு விசாரணையோ, நிவாரணமோ வழங்காத அரசு இப்ப மட்டும் எப்படி முழுமையான சுதந்திரமான விசாரணை நடக்குமெண்டு நினைக்கிறியள்.

அதைவிட சம்பந்தன் ஐயா சர்வதேச விசாரணை முடிஞ்சுது அறிக்கைதான் வெளிவரக்கிடக்கு அதைவைச்சு விசாரணையை உள்நாட்டில மேற்கொண்டால் சரி எண்டுறார். உண்மையில என்னய்யா நடக்குது எனக்கு எண்டா ஒண்டும் விளங்கேல்லை.

மாவை:- ம்ம்ம்ம்… ஓம் சர்வதேச விசாரணை முடிஞ்சுதுதானே. புலம்பெயர்ந்து உங்க இருக்கிறவையிட்டை விசாரணை நடத்திமுடிச்சிட்டாங்கள் தானே கனபேர் எனக்குத் தெரிய சாட்சியம் குடுத்தவை தானே அதுகுன்ரை அறிக்கைதான் வரக்கிடக்கிடக்கு.

கேள்வி :- ஐயா ஐயா…. தஸ்மனின் அறிக்கை போர்க்குற்ற விசாரணை இல்லையே. அதோடை அடிச்சவனை விட்டுப்போட்டு அடிவாங்கினவனுட்டை மட்டும் என்ன நடந்தது எண்டு கேட்டு தீர்ப்புச் சொல்லுறதுதான் முறையோ.

அப்ப போர்க்குற்றம் செய்தவனை விசாரணை செய்யாமல் எப்படி அறிக்கை வரும் அய்ய்யா? ஏன் உள்ளகத்திலை சர்வதேசத்தை அனுமதிச்சு சுதந்திரமான விசாரணை நடத்தக்கூடாது?

மாவை:- அதுதான் உங்க உள்ள தமிழரிட்டை விசாரிச்சு அதனுடைய அறிக்கையை தான் இப்ப வெளியிடப் போறாங்கள் அதை இலங்கையிடம் கொடுத்து உள்ளக விசாரணை செய்ய ஐநாவுடன் அமெரிக்காவும் முயற்சி செய்யிது இப்ப உதை விட்டுட்டு வேறையை கேள்

கேள்வி :- ஐயா முக்கியமா நான் உங்களிட்டை கேட்கவந்ததை சொல்லுறன். தந்தை செல்வா தமிழரசுக்கட்சியைத் தொடங்கும் போது பெடறல் பாட்டி என்று தானே தொடக்கினார்.

அதாவது இலங்கை சமஸ்டிக்கட்சி என்றுதானே தொடக்கினார். அது பின்னர் தமிழரசுக்கட்சி என்டு மாறீட்டு அது எப்ப மாறினது. எண்டு தெரியுமா அதாவது தேர்தல் கமிசனில் பெடறல் பாட்டி எண்டிருந்தது எப்ப தமிழரசுக்கட்சி எண்டு மாறினது எண்டு சொல்லமுடியுமோ ஐயா?

மாவை:- ஓம் அது பெடறல் பாட்டி எண்டு ஆங்கிலத்திலை சொல்லுறது தமிழில தமிழரசுக்கட்சி எண்டுறது. தேர்தல் கமிசனில பெடறல் பாட்டி எண்டுதான் இருக்கு தமிழில நாங்கள் தமிழரசுக்கட்சி எண்டு எழுதுறநாங்கள் அது அப்ப இருந்து அப்பிடித்தான் பதிவில இருக்கு

கேள்வி :- ஐயா ஐயா இல்லையே. தந்தை செல்வா ஆரம்பிக்கும் போது பெடறல் பாட்டி எண்டு பதிவு செய்து போட்டு தமிழில் சமஸ்டிக்கட்சி என்றுதானே துவக்கினார்.

ஆனா அது எப்ப தமிழரசுக்கட்சி எண்டு எப்ப மாறினது எண்டதைத்தான் கேட்கவந்தன். ஏனெண்டால் நவாலியூர் சோமசுந்தரப் புலவரின் பேரன் பாலசுப்பிரமணியன். பிறகு இளமுருகனார் என்று பெயரை மாத்தினவர். அவுஸ்திரேலியாவில இருந்தவர் எங்கை எண்டு தெரியா இப்ப.

ஆனா அவர் 50 களில எண்டு நினைக்கிறன். எல்லாரும் அவருட்ட போய் சமஸ்டிக்கட்சி என்டுறதில இருக்கிறதிலை தெளிவில்லாமல் இருக்கு எண்டு சொல்ல தமிழரசுக்கட்சி எண்டு பெயரை வையுங்கோ எண்டு சொன்னாராம்.

அதுவே பிறகு தமிழரசுக்கட்சி எண்டு பெயராகிற்று அது பின்னர் தேர்தல் கமிசனிலும் பெயர்மாற்றம் செய்யப்பட்டது.

60களின் முன்னர் எண்டு நினைக்கிறன். பிறகு அவர் தமிழரசுக்கட்சியில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இருக்கும் போது பல மேடைகளில் ஒரு ஒழுங்கான பெயர் வைக்கத்தெரியாதவர்கள் எப்படி தமிழர்களுக்கு விடிவைப் பெற்றுத்தரப்போகின்றார்கள்.

நான்தான் இவர்களின் கட்சிக்கு தமிழரசுக்கட்சி என்று பெயரை வைச்சுக்கொடுத்தன். இப்படிப்பட்டி மேதாவிகள் இருக்கின்ற தமிழரசுக்கட்சியால் ஒருபோதும் தமிழர்களுக்குத் விடிவினை பெற்றுக்கொடுக்கவே மாட்டார்கள் என்று பேசிவந்தாராம் இதுபற்றித்தான் இப்ப கேட்க வந்தன் ஐயா

மாவை: – ஓம் அவர் தமிழ்க்காங்கிரஸ்ல இருந்தவர் ஆனால் அவர் தமிழரசுக்கட்சியில இருந்தார் என்று எனக்குத்தெரியா. இல்லடா ஆரம்பத்திலேயே அது பதிவுசெய்தது போலவே இப்பவும் இருக்கு உனக்கு உந்தக்கதை எல்லாம் யார் இப்ப சொன்னார்.

கேள்வி :– இல்லை ஒரு தேவைக்காக கேட்டன். ஆனா அவர் இலங்கை சமஸ்டிக் கட்சியில இருந்துதான் காங்கிரசுக்கு மாறினவர். மற்றது ஐயா தமிழீழக் கொள்கையை கைவிட்டுவிட்டம் எண்டு நீங்கள் இந்தியாவில கடைசியா நிக்கேக்கை ………… ….. ……….. சொன்னியளாம். என்னமாதிரி ஐயா

மாவை:- ஓம் இந்தியா தமிழீழக் கொள்கையை விடுங்கோ உங்களுக்கான தீர்வைத்தாறம் எண்டு சொன்னவை. ஏன் அமிர்தலிங்கத்தை 81 ஆண்டு இந்தியாவில வைச்சு இந்திராகாந்தி தமிழீழத்தை கைவிடுங்கோ உங்களுக்கு தீர்வைத் தரலாம் எண்டவா.

உந்தப் பிரபாகரன் தான் அதுக்கு உடன்படேல்லை. அமிர்தலிங்கம் அப்பவே விட்ட தமிழீழ கொள்கையை பிரபாகரன் தான் தோற்பன் எண்டு தெரிஞ்சும் பல பெடியளப் பலிகுடுத்தவன்.

ஏன் இப்பகூட இந்தியா எங்களைக் கூப்பிட்டு தமிழீழத்தை கைவிடச்சொல்லி கேட்டவங்கள் நாங்கள் ஓம் எண்டு சொல்லிப்போட்டு வந்தநாங்கள்.

கேள்வி :- ஐயா ஐயா ஒரு நிமிசம் ஐயா அண்டைக்கு வட்டுக்கோட்டையிலை ஆயுதத்தை எடுத்து இளைஞர்களிட்டை கொடுத்து ஆயுதப்போராட்டம் தான் எமக்கு தீர்வு எண்டு சொல்லி இளைஞர்களை உசுப்பேத்தி அப்ப இருந்து முள்ளிவாய்க்கால் வரை போராடப்புறப்பட்ட அத்தனை இப்பாவி இளைஞர்களையும் கொன்றுவிட்டு இன்று மறுபடியும் பதவிக்கு வந்து எதிர்கட்சியில் இருக்கும் சம்பந்தன் ஐயா இன்று பெடியள் போராடினது தவறு எண்டுறார்.

நீங்கள் தமிழீழத்தை கைவிட்டம் எண்டுறியள் யாரைக்கேட்டு விட்டியள். இதுக்காக இழந்த மக்கள்,  இளைஞர்கள் எத்தனைபேர். ….

மாவை :– யாரைக்கேட்கோணும் இவ்வளவும் கதைக்கிற புலம்பெயர் மக்களை போராளிகளை மக்கள் தூக்கித்தானே எறிஞ்சவையள். எங்களை மக்கள் தெரிவுசெய்தவையள் நாங்கள் எந்த முடிவையும் எடுப்பம் இதுபற்றி யாரும் என்ன கதைச்சாலும் எங்களுக்கு பறவாயில்லை….
(தொலைபேசி துண்டிக்கப்பட்டது)

Share.
Leave A Reply