ஹைதராபாத் :பேஸ்புக்கில் தோழி போல நடித்து 200 மாணவிகளின் நிர்வாணப்படங்களை சேகரித்து மிரட்டி பணம் பறித்து வந்த மாணவர் ஹைதராபாத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
பஞ்சாரா ஹில்ஸ் பகுதியை சேர்ந்த வெற்றிலை வியாபாரி ஒருவரின் மகன் அப்துல் மஜித். இவர் அங்குள்ள பொறியியல் கல்லூரியில் படித்து வந்தார்.
பேஸ்புக்கில் பெண்கள் பெயரில் போலி கணக்கு தொடங்கி தன்னை கல்லூரி மாணவியாக அறிமுகம் செய்து கொள்வார். குறிப்பாக பணக்கார மாணவிகளிடம் நெருக்கமான நட்பை உருவாக்கி கொள்வார்.
பின்னர் தனக்கு செக்ஸ்சில் அதிக நாட்டமிருப்பது போல அவர்களிடம் பேசுவார். அவர்களிடம் ஆபாசமாகவும் பேசுவார். பின்னர் மெல்ல மெல்ல அந்த மாணவிகளிடம் இருந்து நிர்வாணப்படங்களை அனுப்ப சொல்லியும் கேட்பார்.
இதனை நம்பிய மாணவிகள் அவருக்கு இமெயில் மூலம் தங்கள் படங்களை அனுப்பினர். இப்படி 200க்கும் மேற்பட்ட மாணவிகளில் படங்கள் அப்துல் மஜித்திடம் சேர்ந்தது.
இதற்கு பின்தான் அப்துல் மஜித் தனக்கு படங்கள் அனுப்பிய மாணவிகளிடம் கைவரிசையை காட்டத் தொடங்கினார்.
அந்த மாணவிகளிடம் தான் ஒரு போலீஸ் அதிகாரி என்றும் தன்னிடம் ஆபாசமாக பேசியதை சொல்லியும் உங்களது நிர்வாணப்படங்களை இணையதளத்தில் வெளியிட்டு விடுவேன் என்று கூறியும் பணம் கேட்டு மிரட்டத் தொடங்கினார்.
இதனால் பயந்து போன மாணவிகள் அப்துல் மஜித் கேட்ட பணத்தை கொடுத்துள்ளனர். ஒரு மாணவி ரூ.1 லட்சம் வரையும் இன்னொரு மாணவி 86ஆயிரம் ரூபாய் வரையும் அவரிடம் கொடுத்துள்ளனர்.
இப்படி கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பேஸ்புக் வழியாக அப்துல் மஜித் மாணவிகளை மிரட்டி வந்துள்ளார்ர்.
மேலும் நிர்வாணப் படங்களை அனுப்பாத மாணவிகளிடம் தன்னிடம் ஆபாசமாக பேசியதை வைத்து படத்தை அனுப்புமாறு தொடர்ந்து மிரட்டி வந்துள்ளார்.
அந்த பெண்களும் தங்கள் நிர்வாணப்படங்களை அனுப்பி வைத்துள்ளனர். அவர்களிடமும் மிரட்டி பணம் பறித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் அப்துல் மஜீத்தால் பாதிக்கப்பட்ட ஜனனி என்ற மாணவி தனது தாயிடம் கூறினார். தைரியமான அவரின் தாய் ஸ்வேதா பிரபு, தனது மகள் மூலமாகவே அப்துல் மஜீத் பற்றிய விவரங்களை சாட்டிங் மூலம் சேகரித்தார்.
மேலும் அவரது மிரட்டல்களை பதிவு செய்தார். தான் சேகரித்த அனைத்து ஆதாரங்களுடன், தனது மகள் ஜனனியுடன் சைதராபாத் போலீஸ் நிலையத்துக்கு சென்று நேரில் புகார் மனு அளித்தார்.
அப்துல் மஜித்தின் ஆட்டம் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. ஹைதராபாத் நகரில் நேற்று சைபர் கிரைம் போலீசார் அப்துல் மஜித்தை பொறி வைத்து பிடித்தனர்.
விசாரணையில் 200க்கும் மேற்பட்ட மாணவகளிடம் அப்துல் மஜித் போலி கணக்குகள் மூலம் நட்பு கொண்டிருப்பதும். ஏராளமான மாணவிகளின் நிர்வாணப்படங்கள் அவரது பேஸ்புக் பக்கத்தில் சேகரித்து வைக்கப்பட்டிருப்பதையும் கண்டுபிடித்தனர்.
இதனைத் தொடர்ந்து 80 மாணவிகள் அப்துல் மஜித் மீது புகார் அளித்துள்ளனர்.