தனது நிழலைக்கண்டு அச்சமடையும் குழந்தையின் வீடியோவொன்று இணையத்தை கலக்கி வருகிறது.
நடந்து செல்லும் பெண் குழந்தையொன்று, தற்செயலாக கீழே பார்த்தபோது தனது நிழலைக் கண்டு அச்சமடைவதும், அது என்னவென்று புரியாமல் அங்கிருந்து விலகி ஓட முற்பட்டபோது நிழலும் தன்னை பின் தொடர்வதையும் பார்த்து அக்குழந்தை பீதியடைந்து ஓடி விழுவதுடன் காயங்கள் எதுவும் ஏற்படவில்லையாம். அக்காட்சிகள் வீடியோவில் பதிவாகியுள்ளன.
வாகனத் தரிப்பிடமொன்றில் தனது தாய்க்கு அருகில் இக்குழந்தை நின்றுகொண்டிருந்தபோது இந்த வீடியோ பதிவுசெய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
குழந்தையின் தந்தை மைக் ஜேக்கப்ஸ் இவ்வீடியோவை பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார்.