யாழ். புங்குடுதீவில் படுகொலை செய்யப்பட்ட மாணவி லோகநாதன் வித்யாவின் சடலத்தின் கண் பகுதியில் இருந்து பெறப்பட்ட விந்தணுவை மரபணு பரிசோதனைக்கு உட்படுத்துமாறு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றம் இன்று (15) உத்தரவிட்டுள்ளது.
இந்த கொலை வழக்கு ஊர்காவற்துறை நீதவான் எஸ்.லெனின் குமார் முன்னிலையில் இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
கொலை செய்யப்பட்ட மாணவியின் சடலத்தின் கண் பகுதியில் இருந்து பெறப்பட்ட விந்தணு மாதிரியை மேலும் ஒரு தடயப் பொருளாக சட்ட வைத்திய அதிகாரி, நீதிமன்றதில் இன்று சமர்ப்பித்துள்ளார்.
இதற்கமைய இந்த விந்தணு மாதிரியை மரபணு பரிசோதனைக்காக, ஜின்டெக் நிறுவனத்திற்கு அனுப்பிவைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
ஏற்கனவே சந்தேகநபர்களிடமிருந்து பெறப்பட்டுள்ள மரபணுக்களுடன் அதனை ஒப்பீட்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திறக்கு நீதவான் எஸ்.லெனின் குமார் இதன்போது உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதேவேளை, சந்தேகநபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட மடிகணணி கையடக்க தொலைபேசி மற்றும் TAB ஆகியவற்றில், குற்றச்செயல் தொடர்பான காட்சிகள் அல்லது புகைப்படங்கள் இருந்தனவா என்பதை கண்டுபிடிக்குமாறு ஏற்கனவே நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
எனினும் மொரட்டுவை பல்கலைக்ழகத்தில் அதனை கண்டுபிடிக்க முடியாத நிலை உள்ளதாகவும் நீதிமன்றத்தில்
இன்று (16) சுட்டிக்காட்டப்பட்டது.
இதனையடுத்து குறித்த தடயப் பொருட்களை மேலதிக ஆய்விற்காக இலங்கை கணனி அவசர நடவடிக்கை பிரிவிற்கு அனுப்பிவைக்குமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
வழக்கு விசாரணையை இம்மாதம் 29 ஆம் திகதிக்கு ஒத்திவைத்த நீதவான் அதுவரை 9 சந்தேகநபர்களையும் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
நாங்கள் எந்தக் குற்றங்களையும் செய்யவில்லை.. எங்களை விட்டு விடுங்கள். நீதவானிடம் கெஞ்சும் வித்தியா கொலை சந்தேக நபர்கள்.
நாங்கள் எந்தக் குற்றங்களையும் செய்யவில்லை. எங்களை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க வேண்டாம் என்று புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழங்கில் கைதான சந்தேக நபர்கள் நீதவானிடம் கோரியுள்ளனர்.
சிறைக் கூடத்தில் தங்களை உறவினர்கள் பார்வையிடும் நேரத்தினையும் அதிகரிக்குமாறு சந்தேக நபர்கள் நீதவானிடம் தொடர்ந்து கோரிக்கை விடுத்துள்ளனர்.
இவர்களுடைய கோரிக்கைகளை நிராகரித்த ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதவான் எஸ்.லெனின்குமார் சந்தேக நபர்களை அனைவரையும் எதிர்வரும் 29 ஆம் திகதி செவ்வாக் கிழமைவரைக்கும் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறும் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த மே மாதம் பாடசாலைக்குச் சென்று கொண்டிருந்த புங்குடுதீவு மாணவி வித்தியா கடத்திச் செல்லப்பட்ட நிலையில் கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட பின் கொலை செய்யப்பட்டிருந்தார்.
இச் சம்பவம் தொடர்பாக 9 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு அவர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கும் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
குறித்த வழக்கு நேற்று ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதவான் எஸ்.லெனின்குமார் முன்னிலையில் விசாணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
வழக்கு விசாரணைக்காக மன்றில் ஆஜர் செய்யப்பட்டிருந்த முதலாவது சந்தேக நபர் தான் எந்தக் குற்றத்தினையும் செய்யவில்லை என்றும், தன்னை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க வேண்டாம் என்றும் கோரியிருந்தார்.
இதற்குப் பதிலளித்த நீதவான் குற்றங்கள் நடைபெறவில்லை என்பது விசாரணைகள் மூலம் தெளிவாக தெரியவரும். அதற்கு பின்னர் யார் குற்றவாளிகள், யார் சுற்றவாளிகள் என்று தீர்மானிக்க முடியும் என்றார்.
இதனைத் தொடர்ந்து 8 ஆவது சந்தேக நபரும் தாம்மை தனிப்பட்ட சிறைக் கூடத்தில் தடுத்து வைக்குமாறும், உறவினர்கள் பார்வையிடும் நேரத்தினையும் அதிகரிக்குமாறும் நீதவானிடம் கோரியிருந்தார்.
இதற்குப் பதிலளித்த நீதவான் சிறைக்குள் தனியாக வைத்திருப்பது, உறவினர்கள் கைதிகளை பார்வையிடும் நேரத்தினை அதிகரிப்பது என்பது அந்த சிறைச்சாலை அத்தியட்சகருடைய நிலைப்பாடாகும். அதற்கான கட்டளையினை நீதிமன்றம் பிறப்பிக்காது என்றார்.