வன்புணர்வுக்குட் படுத்தப்பட்டு கழுந்துநெரித்து கொலைசெய்யப்பட்ட 5 வயதான செயா சந்தவமியின் வீட்டை சுற்றி 2,000 அதிகமானோர் குழுமியிருப்பதால் அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அவரது சடலம் இறுதி கிரியைகளுக்காக கம்பஹா, கொட்டதெனியாவ, அகரங்கஹ பகுதியில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.

கம்பஹா, கொட்டதெனியாவ, அகரங்கஹ பகுதியில் வெள்ளிக்கிழமை (11) இரவு வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த வேளை காணாமல் போன 5 வயது சிறுமி, ஞாயிற்றுக்கிழமை(12) காலை சடலமாக மீட்கப்பட்டார்.

Untitled187-600x439அச்சிறுமி, பாலியல் துஷ்பிரயோகப்படுத்தப்பட்டு பட்டியொன்றினால் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

சிறுமியின் இறுதி கிரியை நிறைவடைந்ததன் பின்னர் சந்தேகநபரை கைதுசெய்யுமாறு கோரி அவரது வீட்டுக்குள் பலவந்தமாக நுழைந்த இருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

இந்த 2,000 பேரில் காலி, மாத்தறை மற்றும் குருநாகல் பகுதியில் இருந்து வந்தவர்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தின் பாவி அல்லது பாவிகள் யார் என்பதை வெளிப்படுத்த வேண்டும் என்றும் அங்கு குழுமியிருந்தோர் கோரியிருந்தனர்.

நாட்டிலுள்ள பிள்ளைகளின் பாதுகாப்பு தொடர்பில் கடும் சட்ட வரைபொன்றை உருவாக்க வேண்டியதன் அவசியம் தொடர்பில் நாடு முழுவதும் பேசப்படுவதற்கு காரணமான செயா சதெவ்மியின் இறுதிக்கிரியைகள் இன்று நடைபெற்றன.

5 வயது பூர்த்தியாவதற்கு சில தினங்களே எஞ்சியிருந்த நிலையில் இந்த சிறுமி, பாரியதொரு அசம்பாவிதத்தை எதிர்கொண்டார்.

இந்த சிறுமி பாலியல் வன்புணர்விற்குட்படுத்தப்பட்டு கழுத்து நெறிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டமை நேற்று உறுதியானது

சம்பவம் தொடர்பில் இதுவரையில் எந்தவொரு சந்தேகநபரும் கைது செய்யப்படவில்லை .

கிடைத்துள்ள தடயங்களை அடிப்படையாகக் கொண்டு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

வீட்டில் இருந்து 200 மீற்றர் தொலைவில் சிறுமியின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டதால், அந்த சூழல் தொடர்பில் அறிந்திராத ஒருவரால் சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி கொலை செய்ய முடியுமா என்ற கேள்வி எழுகின்றது.

இதேவேளை, செயாவின் இறுதிச் சடங்கு இடம்பெறும் போது அங்கு வந்த பெண் ஒருவர், தமது உறவுமுறை மகளொருவருக்கு நேர்ந்த இதனைப் போன்றதொரு அசம்பாவிதம் தொடர்பில் தகவல்களை வெளியிட்டார்.

கடந்த காலங்களில் இவ்வாறான கொடூர சம்பவங்கள் நாட்டின் சில பகுதிகளில் பதிவாகியிருந்தன.

யாழ்ப்பாணம் – புங்குடுதீவு பகுதியில் கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சிவலோகநாதன் வித்யா அவர்களுள் ஒருவராவார்.

இதேவேளை, கிளிநொச்சி – எள்ளுக்காடு பகுதியில் 3 வயது சிறுமி சந்திரகுமார் ஜெருசா துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி கொலை செய்யப்பட்டிருந்தார்.

இந்நிலையில், செயா சதெவ்மியை கொலை செய்தவர்களைக் கைது செய்யுமாறு கோரி காலியில் இன்று எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

 

கொடதெனியாவ சிறுமியின் இறுதிக் கிரியைகள்

2185-kotatheniya-murder-last-rite41370878612033665_903778956371100_685312811_nகொடதெனியாவயில் கொலை செய்யப்பட்ட சிறுமியின் இறுதிக் கிரியைகள் இன்று நடைபெற்றன. பெருந்திரளானோர் சிறுமிக்கு அஞ்சலி செலுத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.

Share.
Leave A Reply