மும்பை: தன் மனைவி அவருடைய குருவின் அறிவுரைப்படி தன்னுடன் பாலியல் உறவு கொள்ள மறுப்பதாக குற்றம்சாட்டிய கணவருக்கு பாந்த்ரா கோர்ட் விவாகரத்து வழங்கி உத்தரவிட்டுள்ளது. இந்த தம்பதியினர் கடந்த 2011ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.

கணவருக்கு 30 வயது ஆகிறது. இவர் தன் மனைவியிடம் இருந்து விவாகரத்து கோரி பாந்த்ரா குடும்பநல கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில் தனது மனைவி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை சுமத்தி இருந்தார்.

அந்த மனுவில், “திருமணத்தை தொடர்ந்து முதலிரவுக்கு வரும்போதே என் மனைவி ஒரு பாக்கெட் காண்டம்களை கொண்டு வந்தார். அவரிடம் எவ்வளவோ எடுத்துச் சொன்னேன். கேட்கவில்லை.

நான்கு மாதங்களுக்கு பிறகு அவருடைய குருவின் ஆலோசனைப்படி என்னுடன் பாலியல் உறவு கொள்வதற்கே மறுத்து விட்டார். அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு நமக்கு குழந்தையே வேண்டாம் என்று சொல்கிறார்.

என் குடும்பத்தினருடன் மனைவி அடிக்கடி சண்டை போடுகிறார். நான் வேலை செய்யும் அலுவலகத்துக்கும் வந்து தொந்தரவு செய்கிறார். இதனால் வேலை கெடுகிறது.

என் மனைவி என் அக்கவுண்ட்களை ‘ஹேக்’ செய்கிறார். என்னை அவமதிக்கும் வகையில் என் நண்பர்களுக்கு இ-மெயில் அனுப்புகிறார்.

என் குடும்பத்தை நன்கு கவனித்துக் கொள்ளக்கூடிய மனைவி வேண்டும் என்று விரும்பினேன். ஆனால் என் கனவுகள் அனைத்து தகர்ந்து போனது. எனவே என் மனைவியிடம் இருந்து எனக்கு விவாகரத்து வேண்டும்” என்று கோரியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.ஏ.மோரே, “கணவருடன் பாலியல் உறவு கொள்ள மறுப்பதற்கு மனைவியிடம் போதிய காரணம் இல்லை என்றும் மனைவியின் இந்த நடவடிக்கையானது மனரீதியாக கணவரை துன்புறுத்தும் செயலாக இருக்கிறது என்று கூறி, அவரிடம் இருந்து கணவருக்கு விவாகரத்து வழங்கி உத்தரவிட்டார்.

தன் கணவர் தன்னிடம் இயற்கைக்கு மாறான உறவு கொள்ள விரும்புகிறார் என்று மனைவி கூறிய குற்றச்சாட்டை நீதிபதி மோரே நிராகரித்து விட்டார்.

Share.
Leave A Reply