வெல்லவாய , மஹவெலமுல்ல பிரதேசத்தில் வீடொன்றுக்குள் புகுந்து பெண்ணொருவரை முத்தமிட முயன்ற நபரொருவர் நையப்புடைக்கப்பட்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த நபர் வீட்டினுள் புகுந்து பெண்ணை முத்தமிட முயன்றுள்ளார், இதனையடுத்து அப்பெண் தும்புத்தடியால் அந்நபரை தாக்கியுள்ளார்.

இதனால் தும்புத் தடியும் உடைந்துள்ளது. இதனையடுத்து அங்கு வந்து அவரைப் பிடித்த அயலவர்கள் நன்கு தாக்கி பின்னர் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

அந்நபர் திருட்டுச் சம்பவங்களுடனும் தொடர்புபட்டவர் என தெரிவிக்கப்படுகின்றது.

 

முன்னால் சென்ற காரை மோதியது பின்னால் சென்ற மோட்டார்சைக்கிள்

valvai_aaccide_01
யாழ் வடமராட்சி பகுதியில் இன்று நடந்த விபத்தில் ஒருவர் சிறு காயங்களிற்கு உள்ளானார்.

முன்னால் சென்று கொண்டிருந்த காரை, பின்னால் சென்ற மோட்டார்சைக்கிள் மோதியதில் இந்த விபத்து நடந்துள்ளது.

valvai_aaccide_02வல்வை சந்தியால் சென்று, அச்சுவேலிக்கு திரும்பிய காரை மோட்டார்சைக்கிள் மோதியது.

Share.
Leave A Reply