நியூயார்க்: பொறாமையும் அன்பின் வெளிப்பாடுதான் என நம்புபவரா நீங்கள்? இரண்டு குழந்தைகள் இருக்கும் வீட்டில் அம்மாவிடமோ, அப்பாவிடமோ, அன்பை ஹோல்சேலாக பெற விரும்பும் சில குட்டிக் குழந்தைகள் உடன்பிறந்த சகோதர-சகோதரிகளை பெற்றவர்கள் கொஞ்சுவதைக்கூட அனுமதிப்பதில்லை.

டைட்டன் என்கிற சைபீரியன் ஹஸ்கி வகை நாயை உரிமையாளர் கொஞ்சுவதைத் தடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது ஹோலி என்கிற பெண் ஹஸ்கி நாய். முதலில் உரிமையாளரின் கையைத் தடுக்கும் ஹோலி, அதீத கடுப்பில், டைட்டனை கொஞ்ச விடாமல் உரிமையாளரை தடுக்கும் நோக்கில் அவர் மீதே ஏறிக்கொள்கிறது.

பொறாமையின் அழகை இந்த அன்பான, சேட்டை வீடியோ நிச்சயமாக உங்களுக்கும் உணர்த்தும்!

சில நொடிகளில் மரம் ஏறும் சீனாவைச் சேர்ந்த 97 வயது பாட்டி: வீடியோ இணைப்பு

56516952-3f98-466f-968f-1ca0d52f6331_S_secvpf

நியூயார்க்: சத்தான உணவு நம்மை சுறுசுறுப்பாக இயங்க வைக்கும் என நமது பெற்றோர் அவ்வப்போது நமது சோம்பேறித்தனத்தை சுட்டிக்காட்டும்போது கூறுவர். கிட்டத்தட்ட அதை உண்மையாக்கும் விதமாக ஒரு சீனப் பாட்டியின் வீடியோ இணையத்தைக் கலக்கி வருகிறது.

‘எனது சொந்த ஊரில் மரமேறி நானே பழங்களைப் பறித்துப் போடுவேன்’ எனக் கூறும் அந்த மூதாட்டி, தற்போது தனது 97 வயதிலும் சரசரவென கண்ணிமைக்கும் நேரத்தில் மரத்தில் ஏறி இறங்கும் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

நமது வேகம் எல்லாம் கம்யூட்டருக்குள் இருக்கும் கேம்களை பரபரப்பாக விளையாடுவதில்தான். சிறு வயதில் ஒருமுறையாவது மரமேறி கிழே விழுந்தால்தான் அதன் சிறப்பான, இனிமையான அனுபவம் பற்றி பின்னாளில் ஊருக்கு உபதேசம் செய்ய முடியும். வயதான பின்னர் கதை சொல்லவாவது ஏதாவது செய்திருக்க வேண்டுமல்லவா?

பாட்டியிடமிருந்து மரம் ஏறப் பழகுவோமாக! இந்த வீடியோவைக் காண கிளிக் செய்யவும்..,

யானையிடமிருந்து மயிரிழையில் உயிர் தப்பிய இருவர்! (அதிர்ச்சி வீடியோ)
15-09-2015

janaiaa

ஜல்பைகுரி: மேற்குவங்க மாநில வனப்பகுதியில் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற இருவர் யானையிடம் இருந்து மயிரிழையில் உயிர் தப்பி இருக்கிறார்கள்.

மேற்குவங்க மாநிலம் ஜல்பைகுரி மாவட்டத்தின் வனப்பகுதியில் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், தனியாக யானை ஒன்று செய்வது அறியாமல் நின்று கொண்டிருந்தது.

யானைக்கு பயந்து கொண்டு அந்த சாலையில் சென்ற வாகனங்கள் வரிசைகட்டி நின்றன. ஆனால் அந்த யானை அங்கிருந்து செல்வதாக தெரியவில்லை.

இந்நிலையில், யானை காட்டுக்குள் செல்லும் வரை காத்திருக்க பொறுமையில்லாத இருவர் தங்கள் பைக்கில் யானையை கடந்து செல்ல முயன்றனர்.

இதை கண்ட அந்த யானை, என்னை மதித்து இத்தனை வாகனங்கள் இந்த சாலையில் நிற்கும்போது, நீங்கள் மட்டும் மதிக்காமல் செல்கிறீர்களா என்று கோபம் அடைந்து அந்த இருவரையும் வாகனத்துடன் வழிமறித்து தாக்கியது.

இதில் அதிர்ஷ்டவசமாக யானையிடமிருந்து இருவரும் மயிரிழையில் உயிர் தப்பி தங்களது இருசக்கர வாகனத்தை அப்படியே போட்டுவிட்டு தலைதெறிக்க ஹெல்மெட் விழுந்தது கூட தெரியாமல் ஓடினர்.

உடனே அந்த யானை அவர்கள் வந்த இருசக்கர வாகனத்தை அடித்து துவம்சம் செய்தது. அது போதாது என்று அவர்கள் கீழே போட்டுவிட்டு சென்ற ஹெல்மெட்டுகளை மிதித்து நொறுக்கியது.

இந்த சம்பவத்தை கண்டவர்களுக்கு சிரிப்பு வந்தாலும், அனைவரும் அதிர்ச்சியில் செய்வது அறியாமல் யானை காட்டிற்குள் செல்லும் வரை அங்கேயே காத்திருந்தனர்.

 

 

பெண்ணா…. ? பேயா…. ? எந்த கடையில இவா அரிசி வாங்குவா !!! ….??

Share.
Leave A Reply