நெல்லை: தமிழக அரசுப் பேருந்து ஓட்டையில் இருந்து பெண் ஒருவர் விழுந்து உயிர் பிழைத்துள்ளார். இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் கேரளாவில் நடந்துள்ளது.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அரசுப் பேருந்து மிகவும் மோசமான நிலையில் இயக்கப்பட்டு வருகிறது. மழைக் காலங்களில் பேருந்துகளின் உள்ளே பயணிகள் குடைபிடிப்பதும், ஓட்டைகளில் இருந்து பயணிகள் கீழே விழுவதும் தொடர் கதையாக நடந்து வருகிறது.

தமிழக அரசுப் பேருந்து  ஒன்று, கேரள மாநிலம், புனலூரில் இருந்த  ராஜபாளையம் புறப்பட்டது. அப்போது, அந்தப் பேருந்தில் இருந்த தகடு உடைந்து ஓட்டை விழுந்தது. அப்போது, இளம்பெண் ஒருவர் கீழே விழுந்துள்ளார்.

பின் பக்க டயருக்கு அருகே பெண் விழுந்ததால் சிறு காயத்துடன் உயிர் தப்பினார்.  இதனைப் பார்த்து சாலையோரத்தில் நடந்து சென்றவர்கள் ஒரு நிமிடம் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் உடனடியாக அந்த பெண்ணை மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இது தொடர்பாக, வட்டாரப் போக்குவரத்து அலுவலர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அப்போது, பேருந்தில் இருந்து கீழே விழுந்த அந்த பெண், ராஜபாளையத்தை சேர்ந்த ஸ்வாதி என்று தெரியவந்தது.

Share.
Leave A Reply