உடலுறவு எப்படி உடலை வலுவாக்குகிறது? இந்தியாவில் நாம் பாலுணர்வு பற்றிய பேச்சை எடுத்தால், முதலில் நினைவுக்கு வருவது காம சூத்ரா தான்.
பாலியல் நிலைகளை அல்லது நிர்வாண நிலைகளை காட்டக் கூடிய ஒரு புத்தகமாகவே இந்த நூல் பலராலும் பார்க்கப்படுகிறது.
ஆனால், இது நிர்வாண நிலைகளை மட்டுமே காட்டக் கூடிய ஒரு புத்தகமல்ல என்பது தான் உண்மை. இந்த எழுத்துக்களின் உண்மையான அர்த்தம் உடல் ரீதியான பார்வைகளிலிருந்து மிகவும் அப்பாற்பட்டதாகும்.
விலங்குகளைப் பொறுத்த வரையில், பாலுணர்வுக்கான சக்தி உடலின் ஆக்கத்தைப் பொறுத்ததாகும். மனிதர்களைப் பொறுத்த வரையில், அது உடல், மனம் மற்றும் உடலியல் ஆகியவற்றை உள்ளடக்கியதாகும். எனவே, கவர்ச்சி, எழுச்சி, விழிப்புணர்வு, ஆர்வம், அக்கறை, உற்சாகம் அல்லது புனைவு திறன் ஆகிய அனைத்து நிலைகளிலுமே நம்முடைய பாலுணர்வு திறன் செயல்படக் கூடும்.
காம சூத்ராவில் நம்முடைய சக்தியை கவனமாக, மகிழ்ச்சியாக உணரும் வகையில் மற்றும் பெரிய நோக்கங்களுடன் வெளிப்படுத்தச் செய்யும் வழிமுறைகள் சொல்லித் தரப்படுகின்றன.
காமம் வாழ்க்கையின் 3-வது குறிக்கோளாக கருதப்படுகிறது. கேட்டல், உணருதல், பார்த்தல், ருசித்தல் மற்றும் முகர்தல் ஆகிய ஐந்து அறிவுகளையும் மனம் மற்றும் ஆத்மாவின் உதவியுடன் ஒருங்கிணைத்து முறையான வேறொன்றுடன் அனுபவிப்பதையே காமம் என்று சொல்லலாம். (காம சூத்ரா, 1883)
தீவிரவாதம், அது எந்த நிலையில் இருந்தாலும் அது ஒடுக்குமுறை, தடை மற்றும் அடக்குமுறை ஆகியவற்றின் பதிலாகவே இருக்கும். வன்முறையும், ஆக்கிரமிப்பும், பயம் மற்றும் முடியாத நிலையின் நிழல்களே” என்கிறார் தீபக் சோப்ரா என்ற குரு.
எனவே, நாம் நினைத்துக் கொண்டிருப்பதைப் போலல்லாமல், மிகவும் மாறுபட்ட கண்ணோட்டத்திலேயே காமசூத்ராவைப் பார்க்க வேண்டும். மகிழ்ச்சியின் மற்றொரு பக்கத்தையும், அதை அனுபவிக்கும் விதத்தையும் இங்கே நீங்கள் பார்க்க வேண்டும். இதன் வழியாக மட்டுமே நீங்கள் இறுதியான புனித நிலையை அனுபவிக்க முடியும்.