சீனாவில் கள்ளக்காதலி வீட்டிற்கு சென்று அங்கு 7 வது மாடியில் சிக்கிக்கொண்டு போராடிய வாலிபரை தீயணைப்பு படையினர் மீட்டுள்ளனர்.

சீனாவின் ஷிஷி நகரை சேர்ந்த வாலிபர் ஒருவர் திருமணமான தனது கள்ளக்காதலியை சந்திப்பதற்காக அவரது வீட்டிற்கு சென்றுள்ளார்.

அங்கு தனது காதலியுடன் உல்லாசமாக இருந்துள்ளார், இந்நிலையில் வெளியூர் சென்றிருந்த காதலியின் கணவன் திடீரென வந்துவிட்டதால் செய்வதறியாது திகைத்த காதலன், உடனடியாக அறையில் இருந்த ஜன்னல் வழியாக இறங்கியுள்ளார்.

ஆனால், அவர் இறங்கியது ஜன்னல் கிடையாது, ஏன் கண்டிஷனர் வைக்கும் இடம், இதனால் வேறு எங்கும் நகர முடியாத அவர், இரவு முழுவதும் அந்தப்பகுதியிலேயே தொங்கிக்கொண்டிருந்துள்ளார்.

இந்நிலையில், விடிந்தவுடன் கள்ளக்காதலியின் கணவன் வெளியில் சென்ற பின்னர், அவளை அழைத்து தன்னை காப்பாற்றும்படி கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து தீயணைப்பு படையினரை தொடர்பு கொண்ட கள்ளக்காதலி, நபர் ஒருவர் 7வது மாடியில் சிக்கிக்கொண்டுள்ளார், அவரை காப்பாற்றுங்கள் என்று கூறியுள்ளார்.

விரைந்து சென்ற தீயணைப்பு படையினர் அந்த வாலிபரை காப்பாற்றியுள்ளார்.

அந்த வாலிபரை காப்பாற்றிய பின்னர் தான் தீயணைப்பு படையினருக்கு நடந்தவை குறித்து தெரியவந்துள்ளது.

Share.
Leave A Reply