கொஸ்கொடை கடலில் தனது மனைவி மற்றும் 2 வயது பூர்தியாகாத (1வயது 11 மாதம்) குழந்தையை கடலில் தள்ளி விட்டு கணவன் தலைமறைவாகியுள்ளார்.

குறித்த சம்பவம் நேற்றிரவு (17) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது ஏற்பட்ட பாரிய அலையின் காரணமாக குறித்த பெண் உயிர் பிழைத்துள்ளார். கடலில் வீழ்ந்த குழந்தையின் சடலம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மிரிஸ்வத்தையைச் சேர்ந்த குறித்த நபர், கள்ளக் காதலுக்கு இடைஞ்சலாக இருந்தமை காரணமாகவே இச்செயலைப் புரிந்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

attempt-to-rape-wife-child-1
சம்பவ தினமான நேற்று (17) இரவு 11 மணியளவில் தனது மனைவியை வெளியே செல்ல அழைத்துள்ளார். பின்னர் துவிச்சக்கர வண்டியில் மனைவி மற்றும் குழந்தையை அழைத்துக்கொண்டு, கொஸ்கொடை மஹபெலனை கடற்கரைக்குச் சென்று அங்கிருந்த பாறை ஒன்றில் பேசிக்கொண்டிருந்தவர், திடீரென அவர்கள் இருவரையும் கடலில் தள்ளிவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.

பாரிய கடல் அலை காரணமாக மனைவி உயிர் பிழைத்த போதிலும் குழந்தை காப்பாற்றப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

உயிர் பிழைத்த மிரிஸ்வத்தை கிறீன் கார்டனில் வசிக்கும் அருணி இரேஷா (34) தற்போது பலபிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

பொலிஸார் சந்தேகநபரை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதோடு இது குறித்தான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

attempt-to-rape-wife-child-2குறித்த சம்பவம் இடம்பெற்ற இடத்தை பொலிஸார் பார்வையிடுகின்றனர்…

Share.
Leave A Reply