கொழும்பிலிருந்து யாழ் நோக்கி பயணித்த புகையிரத்தடன் குறித்த யானை மோதியுள்ளது.

janaiai

விபத்து இடம்பெற்ற பகுதியிலிருந்து சுமார் 100 மீட்டர் தூரம் வரை சென்றே குறித்த யானைஉயிரிழந்துள்ளது.

DSC05340-e1442586109940 copieமுல்லைத்தீவு மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனிக்கங்குளம் பகுதியில் புகையிரத்துடன் மோதுண்டு யானை புகையிரத பாதையின் 301 ஆவது மைல் கல் பகுதியில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

janaiiaஇந்த இடத்தில் யானைகள் கடக்கும் பிரதேசம் என அடையாளம் இடப்பட்டுள்ள பகுதி என்பதுடன், விபத்து இடம்பெற்ற பகுதியில் பலியாகும் மூன்றாவது யாணை இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் விபத்தில் மூவர் காயம்
20150918_091947 copie

வவுனியா ஈச்சங்குளம் பகுதியில் இன்று (18.09) இடம்பெற்ற விபத்தில் மூவர் காயமடைநதுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

20150918_092026 copie
வவுனியா, ஈச்சங்குளம் பகுதியில் இருந்து வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று பாடசாலையில் பிள்ளையை இறக்கிவிட்டு புதுக்குளம் பகுதியில் இருந்து ஈச்சங்குளம் நோக்கி எதிர்திசையில் வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதிலேயே இவ் விபத்து ஏற்பட்டுள்ளது.

இதில் இருவருக்கு கால் முறிவு ஏற்பட்டுள்ளதுடன், ஒருவர் சிறு காயங்குளக்கு உள்ளாகியுள்ளார். இது தொடர்பான விசாரணையை ஈச்சங்குளம் போக்குவரத்துப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

Share.
Leave A Reply