பல மாதங்­க­ளாக உள்­நாட்­டிலும் சர்­வ­தேச மட்­டத்­திலும் எதிர்­பார்க்­கப்­பட்டு வந்த ஐக்­கிய நாடு­களின் அறிக்கையும் வந்­து­விட்­டது.

அதன்­படி ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையின் அறிக்­கை­யா­னது எவரும் எதிர்­பார்க்­காத வகையில் வெளி­வந்­துள்­ளது.

குறிப்­பாக ஐக்­கிய நாடுகள் மனித உரிமை அலு­வ­ல­கத்தின் இலங்கை குறித்த அறிக்­கையில் சர்­வ­தேச விசாரணை வலி­யு­றுத்­தப்­படும் எனவும் இல்லை உள்­ளக விசா­ரணை பொறிமுறையே பரிந்­து­ரைக்­கப்­படும் எனவும் கூறப்­பட்டு வந்­தது.

ஆனால் அந்த அனைத்து விட­யங்­க­ளையும் புறந்­தள்­ளி­விட்டு சிறப்பு கலப்பு நீதி­மன்றம் ஒன்றை அமைத்து இடம்­பெற்­றுள்­ள­தாகக் கூறப்­படும் போர்க்­குற்­றங்கள் குறித்து விசா­ரணை நடத்து­மாறு ஐக்­கிய நாடுகள் மனித உரிமை அலு­வ­லகம் பரிந்­துரை செய்­துள்­ளது.

அதா­வது சர்­வ­தேச நீதி­ப­திகள், சட்­டத்­த­ர­ணிகள், விசா­ர­ணை­யா­ளர்கள் ஆகியோர் இடம்­பெறும் வகையில் இந்த விசேட கலப்பு நீதி­மன்றம் அமைக்­கப்­ப­ட­வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்­ளது. அத்­துடன் பல்­வேறு பரிந்துரை­களும் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளன.

அந்­த­வ­கையில் தற்­போது முக்­கிய பரிந்­து­ரைகள் சில­வற்றை பார்ப்போம்.

இலங்­கை­யா­னது பொறுப்­புக்­கூ­றலை அடை­ய­வேண்டும். அது உள்­நாட்டு பொறி­முறை விசா­ர­ணையை விட அப்பால் சென்­ற­தாக இருக்­க­வேண்டும்.

விசா­ரணைப் பொறி­மு­றைக்­காக கால அட்­ட­வ­ணை­யுடன் உயர்­மட்ட நிறை­வேற்­றுக்­கு­ழு­வொன்றை இலங்கை நிய­மிக்­க­வேண்டும்.

இலங்­கையின் நிலை­மையைப் பார்­வை­யி­டு­வ­தற்கும் ஆலோ­ச­னை­களை வழங்­கு­வ­தற்கும் தொழில்­நுட்ப உதவி­களை பெற்­றுக்­கொள்­வ­தற்கும் ஐ.நா. மனித உரிமை அலு­வ­ல­கத்தை இலங்­கைக்கு விஜயம் செய்ய அரசாங்கம் அழைப்பு விடுக்­க­வேண்டும்.

உண்­மையைக் கண்­ட­றிதல் மற்றும் பொறுப்புக்­கூறல் பொறி­மு­றைக்கு இதய சுத்­தி­யு­ட­னான ஆலோசனைகளைப் பெற­வேண்டும்.

உண்மை, நீதி, மீள் உரு­வாக்கம், இழப்­பீடு வழங்­குதல் உள்­ளிட்ட செயற்­பா­டுகள் தொடர்பில் ஐக்­கிய நாடு­களின் விசேட ஆணை­யா­ளர்­களை இலங்­கைக்கு வர­வ­ழைக்­க­வேண்டும்.

இரா­ணு­வத்­தி­னரால் அப­க­ரிக்­கப்­பட்ட பொது­மக்­க­ளி­னதும் தனி­யா­ரி­னதும் காணி­களை மீள் வழங்­கு­வ­தற்கு முன்­னு­ரிமை அளிப்­ப­துடன் சிவில் செயற்­பா­டு­க­ளி­லி­ருந்து இரா­ணு­வத்தை அகற்றவும், நட­வ­டிக்கை எடுக்கவேண்டும்.

தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ள­வர்கள் தொடர்பில் மத்­திய தரவு நிலையம் ஒன்றை நிறு­வ­வேண்டும். உற­வி­னர்கள் தமது தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள உற­வுகள் தொடர்­பான தக­வல்­களைப் பெற்றுக்­கொள்ள இதனை முன்னெடுக்கவேண்டும்.

இவ்­வாறு முக்­கி­ய­மான பல்­வேறு பரிந்­து­ரைகள் ஐக்­கிய நாடுகள் மனித உரிமை அலு­வ­ல­கத்தின் அறிக்­கையில் முன்­வைக்­கப்­பட்டுள்ளன.

கடந்த சில மாதங்­க­ளா­கவே இலங்கை குறித்த விசா­ரணை அறிக்கை எவ்­வாறு அமையும் என எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலை­யி­லேயே நேற்­றைய தினம் விசா­ரணை அறிக்கை வெளியிடப்­பட்­டது.

அத்­துடன் இந்த அறிக்கை கடந்த 11 ஆம் திகதி வெள்ளிக்­கி­ழமை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு இரகசி­ய­மான முறையில் வழங்­கப்­பட்­டி­ருந்­தது.

அதற்கு இலங்கை அரசாங்கத்தின் சார்பில் வழங்­கப்­பட்ட பதிலின் பின்­ன­ரேயே கடந்த புதன்­கி­ழமை அறிக்கை வெளி­யி­டப்­பட்­டது.

அந்­த­வ­கையில் இந்த அறிக்கை உரு­வான விதம் குறித்து சற்று ஆராய்­வது பொருத்­த­மாக இருக்கும். இலங்கையில் யுத்தம் முடி­வ­டைந்­ததும் 2009 ஆம் ஆண்டு ஐக்­கிய நாடுகள் செய­லாளர் நாயகம் பான் கீ மூன் இலங்­கைக்கு வருகை தந்தார்.

அப்­போது யுத்­தத்தின் இறுதிக் கட்­டத்தில் இடம்­பெற்­ற­தாகக் கூறப்­படும் மனித உரிமை மீறல்கள் குறித்து சுயாதீ­ன­மான விசா­ரணை நடத்­தப்­படும் என்று இணக்­கப்­பாடு எட்­டப்­பட்டு கூட்டறிக்­கையும் விடுக்­கப்­பட்­டது.

அது மட்­டு­மன்றி கடந்த 2009 ஆம் ஆண்டு இலங்கை ஜெனிவா மனித உரிமை பேர­வையில் இலங்­கையில் முன்­னேற்­றத்தை ஏற்­ப­டுத்த சர்­வ­தேசம் கால அவ­கா­சமும் உத­வியும் வழங்கவேண்டும் என கோரி பிரே­ரணை ஒன்றை கொண்டு வந்­தது.

அந்த பிரே­ரணை வெற்­றியும் பெற்­றது. அதில் உள்­ளக விசா­ரணை பொறி­முறை முன்­னெ­டுக்­கப்­படும் என்ற விதத்தில் முக்­கிய விட­யங்கள் முன்­வைக்­கப்­பட்­டன.

எனினும் யுத்­தத்தின் இறுதிக் கட்­டத்தில் இடம்­பெற்­றுள்­ள­தாகக் கூறப்­படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் எவ்­வி­த­மான உள்­ளக பொறி­மு­றையும் முன்­னெ­டுக்­கப்­ப­டாத நிலையில் அமெ­ரிக்கா உள்­ளிட்ட சில நாடு­க­ளினால் இலங்­கைக்கு எதி­ராக 2012 ஆம் ஆண்டு ஜெனிவா மனித உரிமை பேர­வையில் பிரே­ரணை கொண்டு வரப்­பட்­டது.

அந்த பிரே­ர­ணையில் இலங்கை நம்­ப­க­ர­மான சுயா­தீன உள்­ளக விசா­ர­ணையை முன்­னெ­டுக்­க­வேண்டும் என வலி­யு­றுத்­தப்­பட்­டி­ருந்­தது. அந்த பிரே­ர­ணையும் நிறை­வேற்­றப்­பட்­டது.

அதன் பின்னர் 2013 ஆம் ஆண்டும் இலங்­கைக்கு எதி­ராக அமெ­ரிக்கா உள்­ளிட்ட சில நாடுகள் மீண்டும் பிரே­ரணை ஒன்றை ஐ.நா. மனித உரிமை பேர­வையில் கொண்டு வந்­தன.

அதிலும் போர்க்­குற்­றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து நம்­ப­க­ர­மான உள்­ளக விசா­ரணை நடத்­தப்­ப­ட­வேண்டும் என கோரப்­பட்­டி­ருந்­தது. அந்த பிரே­ர­ணையும் நிறை­வேற்­றப்­பட்­டது.

இக்­கா­லப்­ப­கு­தியில் மனித உரிமை பேர­வையின் உறுப்பு நாடாக இருந்த இந்­தியா இலங்­கைக்கு எதி­ராக வாக்களித்து வந்­தி­ருந்­தது.

ஐ.நா. மனித உரிமை பேர­வையில் இரண்டு பிரே­ர­ணைகள் நிறை­வேற்­றப்­பட்ட நிலை­யிலும் இலங்­கை­யா­னது உள்­ளக பொறி­முறை விசா­ரணை கட்­ட­மைப்பை முன்­னெ­டுக்­க­வில்லை.

இந்­நி­லையில் கடந்த 2014 ஆம் ஆண்டு அமெ­ரிக்கா மற்­று­மொரு பிரே­ர­ணையை கொண்டு வந்­தது. அந்த பிரேரணையில் இலங்கை உள்­ளக விசா­ரணை பொறி­மு­றையை முன்­னெ­டுத்து பொறுப்­புக்­கூ­றலை நிலைநாட்டா­ததன் கார­ண­மாக போர்க் குற்­றச்­சாட்­டுக்கள் தொடர்­பாக ஐக்­கிய நாடுகள் அலு­வ­லகம் விசா­ரணை நடத்­த­வேண்டும் என்று வலி­யு­றுத்­தப்­பட்­டி­ருந்­தது.

பிரே­ர­ணைக்கு அமை­வாக வழங்­கப்­பட்ட ஆணையின் பிர­காரம் இலங்­கையில் இடம்­பெற்­றுள்­ள­தாகக் கூறப்பட்ட மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க் குற்­றங்கள் தொடர்­பான உள்­ளக விசா­ர­ணையை ஐக்­கிய நாடுகள் மனித உரிமை அலு­வ­லகம் முன்­னெ­டுத்­தது.

அதன்­படி கடந்த 2014 ஆம் ஆண்டு ஜூலை மாத­ம­ளவில் ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையின் விசா­ரணை செயற்­பா­டுகள் செயற்­பாட்டு ரீதி­யாக ஆரம்பிக்கப்பட்டன.

இதற்­காக 12 பேர் கொண்ட விசா­ரணைக் குழு நிய­மிக்­கப்­பட்­டி­ருந்­தது. விசா­ரணைக் குழு­வுக்கு ஆலோசனை வழங்கும் நோக்கில் மூன்று விசேட நிபு­ணர்­களும் நிய­மிக்­கப்­பட்­டி­ருந்­தனர்.

இந்த நிபுணர் குழுவில், சமா­தா­னத்­துக்­கான நோபல் பரிசை வென்­றுள்­ள­வரும், பின்­லாந்து அரசின் முன்னாள் அதி­ப­ரு­மான மார்ட்டி அதி­சாரி, நியூ­சி­லாந்தின் முன்னாள் ஆளுநர் சில்­வியா கார்ட்ரைட் மற்றும் பாகிஸ்தான் உச்­ச­நீ­தி­மன்ற வழக்­க­றி­ஞர்கள் சங்­கத்தின் முன்னாள் தலைவர் அஸ்மா ஜெஹாங்கீர் ஆகியோர் இடம்­பெற்றிருந்­தனர்.

விசா­ரணை நடத்­தப்­படும் காலப்­ப­கு­தி­யாக நல்­லி­ணக்க ஆணைக்­குழு கவனம் செலுத்­திய காலப் பகுதி அறி­விக்­கப்­பட்­டது.

அதற்­க­மைய 2014 ஆம் ஆண்டு ஜூன் 15 ஆம் திகதி முதல் 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் 15 ஆம் திகதி வரை­யான காலப்­ப­கு­தியே ஐக்­கிய நாடுகள் மனித உரிமைப் அலு­வ­ல­கத்தின் இலங்கை விவ­காரம் குறித்த விசா­ரணை செயற்­பாட்டு காலப்­ப­கு­தி­யாக அறி­விக்­கப்­பட்­டி­ருந்­தது.

எனினும் அப்­போ­தைய அர­சாங்கம் இந்த ஐ.நா. அலு­வ­லக விசா­ர­ணைக்கு ஒத்­து­ழைப்பு வழங்­கப்­ப­ட­மாட்­டாது என்றும் விசா­ர­ணை­யா­ளர்கள் இலங்­கைக்குள் வர அனுமதிக்கப்படமாட்டார்கள் என்றும் கூறி­யது.

இறு­தியில் ஐக்­கிய நாடுகள் மனித உரிமை அலு­வ­லகம் ஜெனி­வாவில் இருந்­த­வாறு இலங்கை குறித்த விசாரணையை முன்­னெ­டுத்­தது. கடந்த ஜன­வரி மாத­மா­கும்­போது ஜெனிவா மனித உரிமை அலு­வ­ல­கத்தின் அறிக்கை தயார் செய்­யப்­பட்­டி­ருந்­தது.

அதன்­படி ஐ.நா. மனித உரிமை அலு­வ­ல­கத்தின் விசா­ரணை அறிக்கை கடந்த மார்ச் மாதம் நடை­பெற்ற ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையின் 28 ஆவது கூட்டத் தொடரில் சமர்ப்­பிக்­கப்­ப­ட­வி­ருந்­தது.

எனினும் இலங்­கையின் கடந்த ஆறு­மாத கால நல்­லாட்சி அர­சாங்­கத்தின் கோரிக்­கைக்கு அமைய அந்த அறிக்கை பிற்­போ­டப்­பட்­டது.

ஆனால் செப்­டெம்பர் மாதம் நடை­பெறும் ஐ.நா. மனித உரிமை அலு­வ­ல­கத்தின் 30 ஆவது கூட்டத் தொடரில் இந்த அறிக்கை கட்­டாயம் சமர்ப்­பிக்­கப்­படும் என கூறப்­பட்­டது. அதன்­படி தற்­போது அறிக்கை வெளியிடப்பட்டுள்­ள­துடன் மிக முக்­கி­ய­மான பரிந்­து­ரை­களும் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளன.

எனினும் தற்­போது ஐக்­கிய நாடுகள் மனித உரிமை அலு­வ­ல­கத்தின் அறிக்­கையில் முன்வைக்கப்பட்டுள்ள விட­யங்கள் அவ்­வாறே நிறை­வேற்­றப்­ப­டுமா அல்­லது அந்த பரிந்து­ரைகள் நீர்த்துப்­போ­கச்­செய்­யப்­ப­டுமா என்ற கேள்­வி­களே தற்­போது பொது­வாக எழுப்­பப்­பட்­டுள்­ளன.

குறிப்­பாக இலங்­கைக்கு ஆத­ர­வாக அமெ­ரிக்கா ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையில் பிரே­ரணை ஒன்றை தாக்கல் செய்­ய­வுள்­ளது. இந்த பிரே­ர­ணைக்கு மனித உரிமை பேர­வையின் அனைத்து உறுப்பு நாடு­களும் ஆத­ரவு வழங்கும் என்றும் எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.

இந்­நி­லையில் இந்த பிரே­ர­ணையின் ஊடாக ஐக்­கிய நாடுகள் மனித உரிமை அலு­வ­ல­கத்தின் இலங்கை குறித்த அறிக்­கையின் பரிந்­து­ரைகள் வலு­வி­ழக்கச் செய்­யப்­ப­டுமா என்­பது ஆராயப்பட­வேண்­டிய விட­ய­மாகும்.

காரணம் தமிழ் பேசும் மக்கள் வர­வேற்கும் விதத்தில் ஐக்­கிய நாடுகள் மனித உரிமை அலு­வ­ல­கத்தின் அறிக்கை அமை­யப்­பெற்­றுள்­ளது.

இந்­நி­லையில் இந்த அறிக்­கையில் முன்­வைக்கப்பட்­டுள்ள பரிந்­து­ரை­க­ளுக்கு அமைய விசா­ரணை பொறி­முறை அமைக்­கப்­ப­ட­வேண்டும் என்று தமிழ் மக்­களின் பிர­தி­நி­திகள் கோரிக்கை விடுக்­கின்­றனர்.

ஆனால் அர­சாங்­க­மா­னது உள்­ளக விசா­ரணை பொறி­முறை முன்­னெ­டுக்­கப்­படும் என்றும் ஆனால் அது சர்­வ­தேச நீதி­ப­தி­களை கொண்டு இருக்­குமா? இல்­லையா என்பது ஜனவரி மாத இறுதியில் தீர்மானிக்கப்படும் என்றும் கூறுகின்றது.

அவ்வாறு பார்க்கும்போது ஐக்கிய நாடுகள் மனித உரிமை அலுவலகத்தின் பரிந்துரை அவ்வாறே ஏற்றுக்கொள்ளப்படுமா என்பது தொடர்பில் சந்தேகம் ஏற்படுகின்றது.

எவ்வாறெனினும் பாதிக்கப்பட்ட நிலையில் இருக்கின்ற மக்களுக்கு அநீதி ஏற்படுவதற்கு ஒருபோதும் இடமளிக்கக்கூடாது. யுத்தம் முடிவடைந்து ஆறு வருடங்கள் கடந்துள்ள நிலையில் இதுவரை பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்கப்படவில்லை.

குறிப்பாக யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு வாழ்வாதார பிரச்சினை என்பதே பாரிய விவகாரமாக உள்ளது.

பல குடும்பங்கள் இன்னும் பல்வேறு கஷ்டங்களை எதிர்கொண்டுவருகின்றன. ஐக்கிய நாடுகளின் மனித உரிமை அலுவலக அறிக்கையில் இழப்பீடு வழங்குதல் தொடர்பான விடயங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட நிலையில் நீதிவழங்கப்படவேண்டிய பல விடயங்கள் உள்ளன. எனவே இவை அனைத்தையும் கருத்திற்கொண்டு புதிய அரசாங்கம் விரைவான வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவேண்டியது அவசியமாகும்.

Share.
Leave A Reply