தமது நாட்டுக்கு வெள்ளமென வரும் அகதிகள் மற்றும் குடியேறிகளை கட்டுப்படுத்த ஜெர்மனி எல்லைக் கட்டுப்பாடுகளை அறிமுகம் செய்ததை அடுத்து, அவர்களைக் கையாள இராணுவத்தை நிறுத்தப்போவதாக ஆஸ்திரியா கூறியுள்ளது.
ஒவ்வொரு நாடும் தனித்தனியான கட்டுப்பாடுகளை அறிவித்துவரும் நிலையில், நிலைமையை கையாள ஐரோப்பிய நாடுகள் அவசரமாக ஒன்றிணைந்த நடவடிக்கைகளை மேற்கொண்டாக வேண்டும் என்று இப்போது ஐநாவின் அகதிகளுக்கான அமைப்பு கோரியுள்ளது.
குடியேறிகள் வந்து சேரும் நாடுகளில் செயற்திறன் மிக்க சோதனை நிலையங்கள் அமைக்கப்பட வேண்டும் என்றும் அது கேட்டுள்ளது.
பெரும் தடைகள் இருந்தும் நல்ல எதிர்காலத்தை தேடி பல்லாயிரக்கணக்கானோர், தொடர்ந்தும், ஐரோப்பாவை நோக்கி பயணித்த வண்ணமே உள்ளனர். அதில் பலர் உயிரிழப்பதும் உண்டு.
அப்படியாக தமது சகோதரனை பலிகொடுத்து, பயணத்தை தொடரும் மூன்று சிரியாவின் இளைஞர்களை பிபிசி சந்தித்தது. அது குறித்த பிபிசியின் காணொளி.