சித்திக்கை வெளியார் சந்திக்க உதவிய சிறைச்சாலை அதிகாரிகள் மூவர் பணி நீக்கம்

6 மாதங்களுக்கு முன்னர் வெளிநாட்டில் கைது செய்யப்பட்ட இலங்கைக்கு கொண்டு வரப்பட்டு குற்ற விசாரணை பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டிருந்த சர்வதேச போதைப் பொருள் வர்த்தகராக கருதப்படும் மொஹமட் சித்திக் என்பரை நீதிமன்ற சிறையில் வேறு ஒருவர் சந்திப்பதற்கு தந்திரமான முறையில் இடமளித்த சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் மூவர் பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 18ம் திகதி கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் சித்திக்கை ஆஜர்படுத்த அழைத்து வந்திருந்த போது அவரை சந்திப்பதற்கு வந்திருந்த நபரொருவரை கைதிபோன்று சித்திக்குடன் சேர்த்து கைவிலங்கை இட்டு தந்திரமான முறையில் இருவரையும் சந்திக்க செய்த குற்றச்சாட்டு தொடர்பாகவே மூவரும் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இதனை அங்கிருந்த ஊடகவியலாளர்கள் இரகசியமான முறைறயில் வீடியோ எடுத்து செய்திகளில் வெளியிட்டதையடுத்து அது தொடர்பாக அறிந்த சிறைச்சாலைகள் ஆணையாளர் குறித்த மூவரை பணி நீக்கம் செய்துள்ளதுடன் சித்திக்கை சந்திக்க வந்த நபர் யார் என்பது தொடர்பாக விசாரணை நடத்துமாறு கோரி பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

வீடியோவை கூர்ந்து கவனிக்கவும்:  கைதியுடன் பார்வையாளராக வந்தவரை விலங்கிட்டு  அனுபபும் தந்திரத்தை கவனிக்கவும்.

Share.
Leave A Reply