கடந்த வாரம் வெளியாகி இளைஞர்கள் மத்தியில் “செம்ம படம்” என்றும், பொது மக்கள் மத்தியில் “பிட்டு படம்” என்றும் பெயர் வாங்கி வருகிறது “திரிஷா இல்லனா நயன்தாரா” திரைப்படம்.
இதற்கு காரணம் இந்த படத்தின் கதை தான். காதல் என்ற பெயரில் இளைஞர்கள் செய்யும் தவறை பற்றி கூறியிருந்தாலும். இந்த படத்தில் வரும் இரட்டை அர்த்த வசனங்கள் பார்ப்பவரை முகம் சுளிக்க வைக்கிறது.
இந்த திரைப்படத்தின் கதை 90%, 2015-ன் உண்மையான காதல் கதைகளோடு ஒத்துப்போகிறது என்பது மோசமான உண்மை.
சில மாதங்களுக்கு முன்பு வாட்ஸ்-அப்பில் பரவிய ஓர் கேவலமான காதல் கதையை போல தான் இந்த படத்தில் வரும் காதலும் இருக்கிறது. உடலுறவு, மது, கற்பு போன்றவை மிகையாக காண்பிக்கப்பட்டுள்ளது.
ஜி.வி.பிரகாஷ் கேட்கும் விர்ஜின் பெண்கள், டைனோசர் காலத்திலேயே அழிந்துவிட்டது என்ற வசனம் கைத்தட்டல்களை வாங்கினாலும், பெண்களை கொச்சைப்படுத்தும் வகையில் இருக்கிறது.
இனி, திரிஷா இல்லனா நயன்தாரா படத்தில் கவனிக்க வேண்டிய, காதலில் ஏற்படும் தவறுகள் குறித்து காணலாம்…
காதலிக்கும் போதே இன்றைய தலைமுறையினர் உடலுறவில் சகஜமாக ஈடுபடுகிறார்கள். முத்தம் கொடுப்பது, கட்டியணைப்பது போல இதுவும் சாதாரண ஒன்றென்பது போன்ற பிம்பம் அவர்களுக்குள் ஏற்பட்டிருக்கிறது. இதுவொரு பெரிய சமூதாய சீரழிவாக வளர்ந்து வருகிறது.
பெண்களும் குடிப்பது
“சோசியல் ட்ரின்க்” என்ற பெயரில் இன்று எம்.என்.சி-யில் பணிபுரியும் பெண்கள் குடிக்கு அடிமையாக்க படுகிறார்கள். பெண்ணியம் என்ற ஒன்று தவறாக புரிந்துக் கொண்டு இவர்களும் ஆண்களுக்கு இணையாக குடிப்பது வாழ்வியலை சிதைக்கும் செயல் ஆகும்.
முக்கிய நகரங்களில் நடக்கும் பெரும்பாலான பார்ட்டிகளில் பெண்களுக்கு இலவச பாஸ்கள் தரப்படுகிறது. ஜோடியாக வந்தால் பாஸின் விலை குறைவு. ஏனெனில், இப்படி பெண்கள் நிறைய பேர் வந்தால் தான், ஆண்கள் கூட்டம் நிரம்பி வழியும் என்பது வியாபார யுக்தியாக இவர்கள் பின்பற்றுகிறார்கள்.
சிறு, சிறு சண்டைகள், புரிதலின்மை போன்றவைக்கு கூட தற்போதைய காதலர்கள் பிரிந்துவிடுகின்றனர். பிரேக்-அப் என்பது இப்போது ஃபேஷனாகிவிட்டது.
காதல் பிரிவிற்கு பிறகு இவர்கள் சோகத்தில் எல்லாம் மூழ்குவது இல்லை. உடனே அடுத்த காதலை தொடங்கிவிடுகிறார்கள். ஆண், பெண் என்ற பேதமின்றி இந்த செயல்கள் நடந்து வருகிறது. Show Thumbnail
இன்றைய சூழலில் நான்கில் ஒருவருக்கு கற்பு என்றால் என்னவென்று தெரிவதில்லை. தெரிந்துக் கொள்ளவும் அவர்கள் விரும்புவது இல்லை.
காதல் என்ற பெயரில் வீட்டில் பிள்ளைகள் இவ்வளவு வேலைகளில் ஈடுபடுகிறார்கள், தவறுகள் செய்கிறார்கள் என்பது பெரும்பாலான பெற்றோருக்கு தெரிவதே இல்லை. வீட்டில் மகன் அல்லது மகள் வேறு மொபைல் எண் பயன்படுத்துவதை கூட கண்டறிய முடியாத அளவு பெற்றோர்கள் பின்னடைந்து உள்ளார்கள்.