ரியாத்: இந்திய தொழிலாளியை பெல்ட்டால் அடித்து உதைக்கும் கொடூர காட்சி சமூக வலைத்தளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய தொழிலாளர்கள் வேலைக்காக வெளிநாடுகளுக்கு செல்கின்றனர்.
ஆனால் அங்கு அவர்கள் படும் பாடு சென்ற பிறகுதான் தெரிகிறது என்பது இந்த கொடுமையான வீடியோ காட்சிகளால் நிரூபணமாகியுள்ளது.
அந்த வீடியோ காட்சியில் மெக்காவை சேர்ந்த பொறியாளர் ஒருவர், தான் நடத்தி வரும் கட்டுமான நிறுவனத்தில் பணி புரியும் இந்திய தொழிலாளியை சரமாரியாக அடிக்கிறார்.
பின்னர் கீழே தள்ளிவிட்டு தான் வைத்திருக்கும் பெல்ட்டால் அடித்து துவைத்து எடுக்கிறார்.
வலி தாங்க முடியாமல் கதறி அழும் இந்திய தொழிலாளி, வெளியே செல்ல முயற்சிக்கிறார். மறுபடியும் அவரை இழுந்து வந்து சரமாரியாக தாக்குகிறார் மெக்காவை சேர்ந்த அந்த பொறியாளர்.
பார்ப்பவர்களை பதை பதைக்க வைக்கும் அந்த வீடியோ காட்சி இங்கே…
இப்படி அடியடித்த பின்பும் இந்தியர்கள் சவுதி அரேபியா பக்கம் போகாமல் இருக்கப் போகிறார்கள்?
அரேபியாக்காரர்கள் அல்லது வெள்ளைகாரர்கள் என்ன தான் செய்தாலும் இந்தியர்களுக்கு கோபம் வராது. ஆனால்… பாகிஸ்தான்காரர்களுடன் எதெக்கெடுத்தாலும் சும்மா வம்புக்கு போவார்கள்..
அரேபிய, ஐரோப்பிய, அமெரிக்கர்களிடம், இன்னும் இந்தியர்கள் அடிமைகளாய் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதைதான் இது காட்டுகிறது.
இவ்வளவு அடியடிக்கும் அரேபியனை எதிர்த்து “ஒரு அடியை கூட திருப்பியடிக்க முடியாதா?”