ஹஜ் புனித பயணத்தின் போது ஐ.எஸ் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்பதால் மெக்கா பலத்த பாதுகாப்பு வளையத்தினுள் கொண்டுவரப்பட்டுள்ளது.
இஸ்லாமியர்கள் தங்களின் வாழ் நாளில் ஒரு முறையாவது ஹஜ் புனித பயணம் செல்லவேண்டும் என்பது கடமையாகும்.
இந்நிலையில் இந்த ஆண்டுக்கான ஹஜ் தேதி செப்டம்பர் 20 மற்றும் 25 இடைப்பட்ட நாளில் வருகிறது.
எனவே ஏறத்தால 3 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் அந்த நாட்களில் மெக்காவுக்கு வருவார்கள் என்று கருதப்படுகிறது.
இந்நிலையில் அந்த வேளையில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்பதால் மெக்கா நகர் முழுவதும் பலத்த பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
நகர் முழுவதையும் கண்காணிக்க 5 ஆயிரம் ரகசிய கமெராக்கள் வைக்கப்பட்டுள்ளன. மேலும் பாதுகாப்பு பணியில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட காவலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கூறியதாவது, மெக்கா எப்பவும் தீவிரவாத தாக்குதல் அச்சுறுத்தல் நிறைந்த ஒரு பகுதியாக இருக்கின்றது என்பது எங்களுக்கு நன்றாகவே தெரியும்.
எனவே இந்த ஆண்டு எந்த அசம்பாவிதமும் நடைபெறா வண்ணம் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ளார்.