வல்லுறவுப் போட்டியில் இந்தியாவை வெல்லப் போகிறதா இலங்கை? என்ன நடக்கிறது நாட்டில்..?
தனது மாமியை வல்லுறவுக்குட்படுத்தியதாக கூறப்படும் மருமகன் ஒருவரைக் கைது செய்திருப்பதாக கொஸ்வத்தைப் பொலிஸார் தெரிவித்தனர்.
73 வயதுடைய தனது மாமியை இவ்வாறு வல்லுறவுக்குட்படுத்திய குற்றச்சாட்டில் லுணுவில, வெரெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 52 வயதுடைய நபர் ஒருவரே பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த வயோதிபப் பெண் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபரின் மனைவியின் தாய் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
தனது பிள்ளைகள் திருமணமான பின்னர் குறித்த வயோதிபப் பெண் லுணுவில, ரஜவத்தை பிரதேசத்தில் அமைந்துள்ள வீடொன்றில் தனிமையில் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் சம்பவ தினம் இரவு 11 மணியளவில் தனது வீட்டுக்கு வந்த சந்தேக நபரான மருமகன் தன்னை பலவந்தமாக வல்லுறவுக்குட்படுத்தியதாக குறித்த வயோதிபப் பெண் சம்பவம் தொடர்பில் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
எனினும் தான் அவ்வாறான எந்தத் தவறையும் செய்யவில்லை என சந்தேக நபரான மருமகன் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட வயோதிபப் பெண்ணை வைத்திய பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதித்துள்ள பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஹம்பாந்தோட்டையில் சிறுமியைக் கடத்த முயற்சி ; விழித்து அலறியதனையடுத்து தப்பிச் சென்ற நபர்!
ஹம்பாந்தோட்டை, புந்தல பிரதேசத்தில் இரவு வேளையில் வீடு புகுந்து சிறுமி ஒருவரை கடத்திச் செல்ல முற்பட்ட நபர் ஒருவரைத் தேடி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
நேற்று அதிகாலை 1.30 மணியளவில் இந்த கடத்தல் முயற்சி இடம்பெற்றுள்ளதாகவும் 119 பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கம் ஊடாக ஹம்பாந்தோட்டை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளரின் அலுவலகம் தெரிவித்தது.
சம்ப்வம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, ஹம்பாந்தோட்டை, புந்தல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் தனது அறையில் உறங்கிக்கொன்டிருந்த 13 வயததான சிறுமி திடீரென விழித்துக்கொன்ட போது அடையாளம் தெரியாத நபர் ஒருவரைக் கண்டு சப்தமிட்டுள்ளார்.
சிருமியின் சப்தத்தையடுத்து உறக்கத்திலிருந்து விழித்துக்கொன்டுள்ள ஏனைய குடும்ப உறுப்பினர்கள் அடையாளம் தெரியாத நபர் ஒருவரைக் கண்டுள்ளதுடன் அவரைப் பிடிப்பதற்கு முயற்சித்துள்ளனர்.
இதனையடுத்து நபர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார் பின்னர் இது தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து ஸ்தலத்துக்கு விரைந்த ஹம்பாந்தோட்டை பொலிஸார் சந்தேக நபரைத் தேடி விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
சிறுமியைக் கடத்துவதற்கு அல்லது துஷ்பிரயோகம் செய்வதற்கு சந்தேக நபர் வந்திருக்கலாம் என சந்தேகிக்கும் பொலிஸார் சந்தேக நபரினுடையது என கருதப்படும் ஒரு சோடி பாதணியை வீட்டுக்கு அருகிலிருந்து கண்டுபிடித்துள்ளனர்.
குறித்த பாதணியை மையப்படுத்தி விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட் டுள்ளதாகவும் திஸ்ஸ மஹராம மற்றும் ஹம்பாந்தோட்டை பொலிஸார் இது தொடர்பில் விசாரணைகளை நடத்தி வருவதாகவும் பொலிஸ் பேச்சாளரின் அலுவலகம் தெரிவித்தது.