பெண்ணாக பிறக்கும் குழந்தைகள் பருவமடைந்ததும் ஆணாக மாறும் அதிசய நிகழ்வு சில் உள்ள கிராமமொன்றில் நடந்து வருகின்றது.
டொமினிகன் குடியரசின் பின் தங்கிய கிராமமொன்றான சலினாசிலேயே இவ்விநோத நிகழ்வு நடந்து வருகின்றது.
மரணுபனுக் கோளாறே இது தொடர்ந்து இடம்பெறக் காரணமென தெரிவிக்கப்படுகின்றது.
அங்கு பிறக்கும் பெண் குழந்தைகளில் ஒருவர் பருவமடைந்ததும் சுமாராக 12வயதில் ஆணாக மாறுகின்றனர். அவர்கள் அந்நாட்டு மொழிப்படி ‘Guevedoces’ என அழைக்கப்படுகின்றனர்.
இதன் அர்த்தம் ’12 வயதில் ஆணுறுப்பு’ என்பதாகும். அங்கு பிறக்கும் 50 பெண் குழந்தைகளில் ஒருவர் 12 வயதில் ஆணாக மாறுகின்றனர்
அதாவது 12 வயதின் போதே ஆண் உறுப்பு வளர்ச்சியடைவதாக தெரிவிக்கப்படுகின்றது பெண்ணாக இருந்து ஆணாக மாறும் இவர்களில் எவ்வித பெரிய மாற்றங்களும் இல்லையெனத் தெரிவிக்கப்படுகின்றது.
அதாவது 12 வயது தொடங்கும் போது சிறுமியாக இருக்கும் பெண்ணுக்கு பெண்ணுறுப்பு மறைந்து ஆணுறுப்பு உள்ளிட்டவை தோன்றுகிறது.
தற்போது இது குறித்து உயிரியல் நிபுணர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த வளர்ச்சி 5 வயதில் ஏற்பட தொடங்குகின்றன.
உடலில் உள்ள ஹார்மோன்களில் குறிப்பிட்ட ஒன்றின் குறைபாடுகளால் தான் இவ்வாறு நடப்பதாக ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.
மேலும், 12 வயதுக்கு முன் வரை சிறுமிகளாக வாழும் இவர்கள் பின்னர் ஆண்களாக மாறியவுடன் திருமணம் செய்து மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள்.
மகிழ்ச்சியாகவே அவர்கள் வாழ்வதாக தெரிவிக்கப்படுகின்றது.
குழந்தை வளர்ச்சியடையும் ஆரம்ப காலத்தில் சுரக்கவேண்டிய ஹோர்மோன்கள் பின்னாளில் சுரப்பதாகவும் இதுவே ஆரம்பத்தில் பெண்களாக பெண்ணுறுப்புடன் பிறப்பவர்களுக்கு ஆணுறுப்பு வளர்ச்சிடையக்காரணமெனவும் தெரிவிக்கப்படுகின்றது.